அரசாங்கத்தின் புதிய திட்டம் – ஜனாதிபதி அறிவிப்பு

கடன் வாங்க சொத்து இல்லையென்றால் பெண்களுக்குத் தேவையான சான்றிதழை அரசாங்கம் வழங்கக் கூடிய ஒரு திட்டம் தயாரிக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (08.03.2026) நடைபெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், பெண்கள் கடன்களை திருப்பிச் செலுத்த முடியாவிட்டால், அரசாங்கம் அவர்களுக்கு பணம் செலுத்தும். நுண்நிதி கடன்களுக்கான வட்டி விகிதம் காரணமாக கிராமங்களில் ஏராளமான பெண்கள் […]

உலகப்புகழ்பெற்ற டெவோன் நீர்வீழ்ச்சி சுற்றுவட்டப் பகுதியில் தீ

உலகப்புகழ்பெற்ற டெவொன் நீர்வீழ்ச்சி பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 6 அறைகளைக் கொண்ட ஒரு கபான முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக திம்புல்ல- பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். கொட்டகலை தலவாக்கலை டெவொன் நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் உள்ள 50 ஏக்கர் கொண்ட காட்டுப்பகுதியிலேயே குறித்த சம்பவம் இன்று(8.3.2026)ஏற்பட்டுள்ளது. அத்துடன் சுமார் 25 ஏக்கருக்கும் மேற்பட்ட வனப்பாதுகாப்பு நிலப்பகுதி அழிவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சுற்றுலா வீடுதிக்கு சொந்ததான கபானா எரிவடைந்ததனால் தளபாடங்கள் உள்ளிட்ட அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன. இதனால்; கொட்டகலை நுவரெலியா […]

தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு நெருக்கடி!

இலங்கையின் அந்நியச் செலாவணி ஈட்டும் பிரதான துறையான தேயிலை கைத்தொழில் தற்போது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலால் பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. குறிப்பாக ஈரானுக்கான தேயிலை ஏற்றுமதி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளமை மற்றும் கடல் வழிப் போக்குவரத்துத் தடைகள் என்பன இத்துறையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளாதாக இலங்கை தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இலங்கை தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் லயனல் […]

நிவாரணப் பணிகளை விரைவுபடுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

தித்வா நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துவதற்குத் தேவையான முறையான விதிமுறைகள் மற்றும் சுற்றறிக்கைகளை உடனடியாக உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊடகங்கள் வாயிலாகக் காட்சிப்படுத்துவதை நிறுத்திவிட்டு, பாதிக்கப்பட்ட 24 இலட்சம் மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், சமீபத்திய சூறாவளி இலங்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் 7 இலட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, சுமார் 24 இலட்சம் தனிநபர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். […]

சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இளைஞர் ஒருவர் கைது!

வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பெருந்தொகையான சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை (08) அதிகாலை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. சந்தேகநபரிடமிருந்து 34,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த […]

டிக்கோயா பிணவறைச் சம்பவம்: ஜனாதிபதியும் பிரதமரும் தலையிட வேண்டும் – ஜீவன் தொண்டமான்

டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த யுவதியின் சடலத்திற்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் அநாகரிகமான செயல் தொடர்பில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஆகியோர் தலையிட்டு முறையான சட்ட நடவடிக்கைகளை உறுதிப்படுத்த வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை (08) டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அருகாமையில் அமைதிவழிக் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், பொலிஸாரினால் […]

3 புதிய நிறுவனங்களுக்கு பிரதான நிறைவேற்று அதிகாரிகள் நியமனம்!

நாட்டின் மின்சாரத் துறையை மறுசீரமைக்கும் நடவடிக்கையின் ஒரு அங்கமாக, கலைக்கப்பட்டுள்ள இலங்கை மின்சார சபைக்குப் பதிலாக நிறுவப்பட்டுள்ள ஆறு புதிய நிறுவனங்களில் மூன்றிற்குப் புதிய முதன்மை நிறைவேற்று அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மின்சாரத் துறை மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ், கடந்த பெப்ரவரி மாதம் 06 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பின்வரும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்: லங்கா மின்சார உற்பத்தி லங்கா (தனியார்) நிறுவனம்: பொறியியலாளர் என். ஜி. சாலிய பண்டிதரத்ன. தேசிய பரிமாற்ற வலையமைப்பு சேவை […]

ரி20 உலகக் கிண்ணம்; இந்தியாவும் நியூஸிலாந்தும் மோதுகின்றன!

உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமான அஹமதாபாத் நரேந்த்ர மோடி விளையாட்டரங்கில் 90,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் முன்னிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு மின்னொளியில் நடைபெறவுள்ள ரி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் நடப்பு சம்பியன் இந்தியாவை நியூஸிலாந்து எதிர்த்தாடவுள்ளது. இந்த இரண்டு அணிகளும் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட்டில் வரலாற்று வெற்றியை ஈட்டும் குறிக்கோளுடன் களம் இறங்கவுள்ளன. ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் சொந்த மண்ணில் சம்பியனான முதலாவது அணி, சம்பியன் பட்டத்தை தக்கவைத்த முதலாவது அணி, […]

பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்தவரைப் பழிவாங்கவே அவரின் சட்டத்தரணியும் மனைவியும் கொலை

க்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலும் பல திடுக்கிடும் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த இரட்டைக்கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டாவது துப்பாக்கிதாரியிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போதே இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கொலையைச் செய்த பின்னர் தான் கொட்டாவை வரை காரில் வந்து, அங்கிருந்து இறங்கி கொழும்பு கோட்டையை அடைந்ததாகச் சந்தேகநபர் தெரிவித்துள்ளார். பின்னர் கோட்டையிலிருந்து தம்புள்ளை சென்றதாகவும், அங்கிருந்து […]

வடமாகாண கல்வி திணைக்களம் அநீதியாக செயற்படுகிறது – இலங்கை ஆசிரியர் சங்கம்

வடமாகாண கல்வி திணைக்களத்தின் அநீதியான செயற்பாடுகளுக்கெதிராக வரும் வாரத்தில் இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கம் என்ற வகையில் ஆசிரியர்களின் உரிமைகளை நிலைநாட்ட இறுதிவரை போராடுவோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் தீபன் திலீசன் தெரிவித்துள்ளார். நேற்று (07) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சேவையின் தேவை இடமாற்றம் என்ற பெயரில் தொழிற்சங்கங்களின் பங்களிப்பின்றி வடமாகாண கல்வி திணைக்களத்தால், முன்னெடுக்கப்படும் […]