செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு வழிவகுக்கவும் – யாழ். மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு மகஜர்

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு வழிவகுக்க வேண்டும் என்பது உட்பட ஏழு கோரிக்கைகளை முன்வைத்து,   யாழ். மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்குக்கு மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

செம்மணியில் இன்றைய தினம் (30) கவனயீர்ப்பு போராட்டத்தினை நடத்தியதன் பின்னர் இந்த மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

யாழ்ப்பாண மறைமாவட்டத்தில் பணியாற்றும் குருக்களும் துறவறத்தினரும் ஆகிய நாம், இறந்தவர்கள், அவர்களின் குடும்பங்கள் மற்றும் இலங்கையின் ஆயுத மோதலின்போது வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவினர்களை இன்றளவும் தேடிக்கொண்டிருக்கும் அனைவரையும் குறித்த ஆழ்ந்த மேய்ப்புப்பணிசார் அக்கறையால் இம்மடலை எழுதுகின்றோம்.

2025 ஜூன் மாதத்தில் செம்மணி மனிதப் புதைகுழி அமைவிடத்துக்கு தாங்கள் மேற்கொண்ட வருகையை நன்றியுடன் நினைவுகூருகின்றோம். உண்மைக்கும் நீதிக்கும் பல ஆண்டுகளாகக் காத்திருக்கும் குடும்பங்களுக்கு தங்களது வருகை புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையை அளித்தது.

2025 பெப்ரவரி மாதத்தில் செம்மணியில் உள்ள சித்துப்பாத்தி மயானத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதன் பின்னர் நீதிமன்ற மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகள் அச்சமூட்டும் அளவில் மனித எச்சங்களை வெளிக்கொணர்ந்துள்ளன. 2026 ஜூலை 21ஆம் திகதி குழந்தைகள் மற்றும் சிசுக்களின் எச்சங்கள் உட்பட, குறைந்தது 454 எலும்புக்கூடு எச்சத் தொகுதிகள் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இறந்தவர்களின் அடையாளங்கள், அவர்களது மரணங்களுக்கான காரணங்களும் திகதிகளும், அவற்றுக்குப் பொறுப்பானவர்கள் யார் என்பதும் இதுவரை இறுதியாக உறுதிப்படுத்தப்படவில்லை. விசாரணையின் முடிவை முன்கூட்டியே தீர்மானிக்கவோ, நம்பகமான சான்றுகள் இன்றி எவர் மீதும் பொறுப்பைச் சுமத்தவோ நாம் விரும்பவில்லை.

இருப்பினும், இப்புதைப்புகளின் அளவும் சூழ்நிலைகளும், வெளிப்படையானதும் அறிவியல் ரீதியில் நம்பகமானதும் உண்மையை நிலைநாட்டி பொறுப்புக்கூறலை உறுதிசெய்யவல்லதுமான சுயாதீன சர்வதேச விசாரணை ஒன்றை அவசியமாக்குகின்றன.

யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம், சட்ட வைத்திய அதிகாரி, தொல்லியல் ஆய்வுக் குழு, யாழ்ப்பாண பல்கலைக்கழகம், சட்டத்தரணிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஆகியோர் ஆற்றிவரும் அர்ப்பணிப்பு மிக்க பணியை நாம் அங்கீகரிக்கின்றோம்.

இருப்பினும், தடயவியல் திறன், விசாரணைச் சுயாதீனம், சான்றுகளைப் பாதுகாத்தல், பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தல், குடும்பங்களின் பங்கேற்பு மற்றும் பாதுகாப்பு ஆகியவை குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் தொடர்புடைய ஐக்கிய நாடுகள் பொறிமுறைகளும் எழுப்பியுள்ள கரிசனைகள் முழுமையாகத் தீர்க்கப்பட வேண்டும்.

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பல தசாப்தங்களாக நீடித்த தாமதங்கள், தடைகள் மற்றும் தண்டனையின்மை காரணமாக உள்நாட்டுப் பொறிமுறைகளில் நம்பிக்கையை இழந்துள்ளதால், சுயாதீன சர்வதேச விசாரணையை மீண்டும் மீண்டும் கோரியுள்ளனர்.

anojan

அனோஜன் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பு

October 10, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் தொடர்பான தேவையற்ற கருத்து பரிமாற்றங்கள் தொடர்பில் கல்முனை தலைமையகப்

can

கனடாவைச் சேர்ந்த பாட்டி புதிய உலக சாதனை

October 10, 2026

கனடாவைச் சேர்ந்த 61 வயது வீராங்கனை டோனாஜீன் வைல்ட் (DonnaJean Wilde), அமெரிக்காவின் உடாவில் நடைபெற்ற உலக சீனியர் விளையாட்டுப்

cyb

போலி சமூக ஊடக கணக்குகள் மீது கடும் நடவடிக்கை

October 10, 2026

தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் போலியான முகநூல் (Facebook) கணக்குகளைத் தயாரித்து, சமூக வலைத்தளங்கள் ஊடாக இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும்

rus

உக்ரைனின் எதிர்ப்புக்கு மத்தியில் ரஷ்யாவிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்ய அமெரிக்கா முடிவு!

October 10, 2026

அமெரிக்காவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் டீசல் கொள்முதல் செய்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி

sau

ஹவுதி இலக்குகள் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்

October 10, 2026

மெக்கா ஒப்​பந்​தத்​தின்​படி ஏமனில் உள்ள ஹவுதி இலக்​கு​களை குறி​வைத்து பாகிஸ்தான் போர் விமானங்கள் தாக்​குதல் நடத்​தி​ய​தாக செய்​தி​கள் வெளியாகி உள்​ளன.

bud_AU

மெல்பேர்ண் விஹாரையில் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை; இலங்கைப் பௌத்த துறவிக்கு 13 ஆண்டுகள் சிறை

October 10, 2026

மெல்பேர்ண் நகரில் உள்ள பௌத்த விஹாரை ஒன்றில் 6 இளம் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை இழைத்த குற்றத்திற்காக, இலங்கையைச் சேர்ந்த

is

இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேல் அரசின் வீரதீர விருது

October 10, 2026

விமான கடத்​தலை தடுத்த இந்திய பைலட் ஸ்மித் மச்​சா​ருக்கு உலகம் முழு​வ​தி​லும் இருந்து பாராட்​டுக்​கள் குவிந்து வரு​கின்​றன. இந்​நிலை​யில் இஸ்ரேல்

mala thiru

மலேஷிய நாடாளுமன்றில் திருக்குறள்!

October 10, 2026

மலேஷிய நாடாளுமன்றில் திருக்குறளை மேற்கோள் காட்டி மலேசிய பார்லியில் அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிம் உரையாற்றியது, வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

17-2026-10-09-16-04-25

“நான் தளபதி விஜய்யின் தங்கச்சி… உண்மைக்கு கிடைத்த வெற்றி இது!” – மரகதம் குமரவேல்!

October 10, 2026

செங்கல்பட்டு: மதுராந்தகம் இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல், இது உண்மைக்குக் கிடைத்த வெற்றி என

26-6ac8ee4988b7d

“இடைத்தேர்தல் வெற்றி: சட்டசபையில் த.வெ.க. பலம் 109 ஆக அதிகரிப்பு – பெரும்பான்மைக்கு இன்னும் 9 இடங்கள் தேவை!”

October 10, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிலையில், தமிழ்நாடு சட்டசபையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பலம் 109

1600854-9-seeman

“சீமானின் செயல்பாடுகளுக்குப் பாராட்டு தெரிவித்த நீதிபதிகள்!” – தமிழக அரசுக்குப் பறந்த உத்தரவு!

October 10, 2026

மதுரை: மணிமுத்தாறு நீர்நிலைப் பகுதிகளைத் தூய்மைப்படுத்துவதற்குத் தாமாக முன்வந்த நாம் தமிழர் கட்சிக்கும், அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் பாராட்டு

1200-675-26159036-thumbnail-16x9-ctr-nirmal-kumar-aspera (1)

“எடப்பாடி பழனிசாமியால் ’லெட்டர் பேடு’ கட்சியாகிவிட்டது அதிமுக!” – அமைச்சர் நிர்மல் குமார் காட்டம்!

October 10, 2026

சென்னை: அதிமுகவை ’லெட்டர் பேடு’ கட்சியாக எடப்பாடி பழனிசாமி மாற்றிவிட்டார் என மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.