செம்மணி, சிந்துபாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள் இன்று (08) யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்றது.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன்,
புதிதாக 3 மனித எலும்பு எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டு, 2 மனித எலும்பு எச்சங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இந்த மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் போது 17 மனித எலும்பு எச்சங்கள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
சித்துப்பாத்தி இந்து மயான எரிதகன மேடையின் அத்திவாரத்துக்கு கீழாக அடையாளம் காணப்பட்ட மனித என்புத் தொகுதியினை, மயான தகன மேடையினை உடைத்தே அகழ்ந்து எடுக்கப்படவேண்டிய தேவை உள்ளது. இது தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி நீதிமன்ற அனுமதியைப் பெற்ற பின்னரே மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என செம்மணி புதைகுழி வழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சார்பான சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்தார்.