சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் உச்சகட்டப் பரப்பை எட்டியுள்ளது. 234 தொகுதிகளிலும் தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சி, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் வேளையில், அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள புதிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் சீமான் பேசியதாவது, “நமது ஆட்சியில் பெண்களுக்கு சரிபாதி உரிமை வழங்கப்படுகிறது. இது பெருமைக்காக அல்ல, இது நமது பிறவிக்கடமை. பெண்கள் வழங்கிய விடுதலையால்தான் நாம் இன்று உலவிக்கொண்டிருக்கிறோம். தேசிய இன விடுதலைக்காகப் போராடும் நாம், பெண்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கவில்லை என்றால் அந்த அரசியலுக்கு அர்த்தமே இல்லை.
நம் நிலத்தில் நின்றுகொண்டு, பிற மொழி பேசும் இனங்களை எதிரியாக்கி நம் விடுதலையை வெல்ல முடியாது. அதனால் நாம் அனைவரையும் அரவணைத்துச் செல்கிறோம். இன்று நீர், நிலம், காற்று என அனைத்தும் நஞ்சாகி வருகின்றன. பிறக்கும் குழந்தைகள் கூட புற்றுநோயுடன் பிறக்கும் அவலநிலை உள்ளது. இந்த நிலை மாற வேண்டுமென்றால், மாற்றத்திற்கான ஒரே வழி நம் கையில் தான் உள்ளது. வெற்றிபெற கடுமையான உழைப்பைத் தவிர வேறு வழியில்லை. நாம் சாதாரண மனிதர்கள், ஒருவேளை தோற்கலாம் அல்லது சாகலாம். ஆனால் சரித்திரத்தில் சத்தியம் தோற்றதாக செய்தியே இல்லை. சத்தியத்தின் பக்கம் நிற்கும் நாம் நிச்சயம் ஒருநாள் வெல்வோம். வரலாறு நமக்கு வழிகாட்டியாகவும், சத்தியம் நமக்கு சான்றாகவும் இருக்கிறது,” என உணர்ச்சிபொங்கத் தெரிவித்தார்.
#Seeman #NaamTamilarKatchi #NTK #TamilNaduElection2026 #SeemanSpeech #VoteForNTK #TamilPolitics #NTK2026 #ChangeTamilNadu #SaveNature #TamilPride #SeemanVideo #ElectionCampaign #TamilNationalism #SustainablePolitics #Justice #TruthTriumphs #TamilNaduPolitics #PoliticalChange #ViralVideo