சென்னை:
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், சி.வி.ஜயபாஸ்கர் உள்ளிட்டோர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, கட்சித் தலைமையின் செயல்பாடுகள் மீது அதிருப்தி அடைந்துள்ள முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் தவெக-வில் இணைந்து வருகின்றனர். இந்தச் சூழலில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சி.வி.சண்முகம் ஈபிஎஸ்-ஐ கடுமையாக விமர்சித்திருந்த நிலையில், தற்போது முன்னாள் அமைச்சர் சி.வி.ஜயபாஸ்கரும் தனது அதிரடியான கருத்தைப் பதிவிட்டுள்ளார்.
சி.விஜயபாஸ்கர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “உழைக்கும் உண்மைத் தொண்டர்களை எதிரிகளாகப் பார்க்கும் தலைமையும், கேள்வி கேட்பதையே குற்றமாகப் பார்க்கும் அரசியலும் வெற்றிக்கான பாதை அல்ல. வரலாறு நினைவில் வைத்திருப்பது எத்தனை பேரை நீக்கினோம் என்பதை அல்ல… எத்தனை பேரை ஒன்றிணைத்தோம், எத்தனைக் களங்களை வென்றெடுத்தோம் என்பதைத்தான்” என்று பதிவிட்டுள்ளார். அதிமுக-வில் உண்மையான தொண்டர்களைத் தலைமை மதிப்பதில்லை என்றும், கேள்வி எழுப்புபவர்களைத் தகுதிநீக்கம் செய்வதையும், நீக்குவதையும் மட்டுமே நோக்கமாகக் கொண்டு ஈபிஎஸ் செயல்படுவதையும் அவர் மறைமுகமாகச் சாடியுள்ளார். அதிமுக-வின் தற்போதைய தலைமை ஒருங்கிணைப்பு இன்றிச் செயல்படுவதாகவும், இது கட்சியின் சரிவிற்கு வழிவகுக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். அதிமுக-வின் உட்கட்சிப் பூசல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவது அக்கட்சியின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது.
#CVVijayabaskar #EdappadiPalaniswami #EPS #AIADMK #TNPolitics #Chennai #AiadmkCrisis #TVK #Vijay #ThalapathyVijay #TvkGovernment #CvShanmugam #AiadmkInternalPolitics #PoliticalRebellion #TNElection2026 #TamilNews #BMNews #PoliticalUpdate #BreakingNewsTN #InternalPolitics #SofaModelGovernment #Politics2026 #TamilNaduPolitics #AiadmkGeneralCouncil #VijayabaskarSpeech