717 டாஸ்மாக் கடைகள் மூடல்! – முறைகேடு செய்த 200 பணியாளர்கள் அதிரடி சஸ்பெண்ட்!

சென்னை:

தமிழகம் முழுவதும் கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் அமைந்திருந்த 717 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதாகத் டாஸ்மாக் நிர்வாகம் அதிகாரப்பூர்வப் பட்டியலை வெளியிட்டுள்ளது. முதலமைச்சர் விஜய் பொறுப்பேற்ற பிறகு, பொதுமக்கள், பெண்கள் மற்றும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த மதுக்கடைகளை மூடுவதற்கு உத்தரவிட்டிருந்தார். தொடர்ந்து பல இடங்களில் மதுபானக் கடைகள் மூடப்படாமல் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, தற்போது மாவட்ட வாரியான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. சென்னை மண்டலத்தில் 82, கோவை மண்டலத்தில் 179, சேலம் மண்டலத்தில் 82, திருச்சி மண்டலத்தில் 84 மற்றும் மதுரை மண்டலத்தில் 290 என மொத்தம் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.

இதற்கிடையில், மதுக்கடைகளில் பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்து வந்தன. கடந்த சட்டமன்றத் தேர்தலின் போதே இந்த விவகாரம் பெரும் பேசுபொருளாக மாறியிருந்தது. தற்பொழுது ஆளுங்கட்சியாக மாறிய பிறகு, இது போன்ற முறைகேடுகளை முற்றிலுமாகத் தடுப்பதற்குத் டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி ஆய்வுகளை மேற்கொண்டது. இந்த ஆய்வில் 10 ரூபாய் கூடுதலாக வசூல் செய்தது உறுதியானதை அடுத்து, சுமார் 200 டாஸ்மாக் பணியாளர்களைத் தற்காலிக பணிநீக்கம் செய்து டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில் இனிவரும் காலங்களில் இது போன்ற முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க அரசு தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

#Tasmac #Vijay #TvkGovernment #LiquorShop #TamilNadu #TasmacList #CorruptionFree #VijayGovernment #TasmacClosed #TamilNews #BMNews #PoliticalUpdate #BreakingNewsTN #SofaModelGovernment #PublicWelfare #TasmacStaff #TasmacIssue #TamilNaduNews #GovernmentAction #Corruption #Politics2026 #TasmacListReleased #TNPolitics #AntiCorruption

AI5UJ353XNHCHCWBFMUZNXPOOM

கனடா தின நிகழ்வில் பைகள் சோதனை செய்யப்படும்: ‘பொறுப்பற்ற’ பட்டாசுப் பயன்பாட்டைத் தொடர்ந்து பிராம்ப்டன் அதிகாரிகள் அதிரடி அறிவிப்பு

June 15, 2026

பிராம்ப்டன் (Brampton) நகரத்தின் சின்குவாகுசி பூங்காவில் (Chinguacousy Park) நடைபெறவுள்ள கனடா தினக் (Canada Day) கொண்டாட்டங்களில் பங்கேற்க வரும்

police rcmp

திருடப்பட்ட வாகனத்தால் டொராண்டோ பொலிஸ் அதிகாரி மீது மோதிய 12 வயது சிறுவன் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு

June 15, 2026

டொராண்டோவின் ஈஸ்ட் யார்க் (East York) பகுதியில், 12 வயது சிறுவன் ஒருவன் தான் ஓட்டிச் சென்ற திருடப்பட்ட வாகனத்தால்

suresh11

சுரேஷ் சலே கவலைக்கிடமாக இல்லை; வதந்திகளை நிராகரித்தார் சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ

June 15, 2026

அரச உளவுத்துறையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் (Suresh Salley) உடல்நிலை குறித்து பரவி வரும்

6

“நிதானத்தோடு பேசுங்கள்!” – ராகவா லாரன்ஸுக்கு வீரபாண்டியன் அதிரடி அட்வைஸ்!

June 15, 2026

மயிலாடுதுறை: ராகவா லாரன்ஸ் அரசியலுக்கு வரும்போது மிகுந்த நிதானத்தோடு பேசிப் பழக வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்

hindutamil_import_hindu_uploads_news_2023_06_22_xlarge_1024126

717 டாஸ்மாக் கடைகள் மூடல்! – முறைகேடு செய்த 200 பணியாளர்கள் அதிரடி சஸ்பெண்ட்!

June 15, 2026

சென்னை: தமிழகம் முழுவதும் கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் அமைந்திருந்த 717 டாஸ்மாக் மதுக்கடைகள்

7

6,000 கோடிக்கு பட்டாசு ஆர்டர்! – சிவகாசிக்கு விடியல் கொடுத்த அமைச்சர் கீர்த்தனா!

June 15, 2026

சிவகாசி: சிவகாசி பட்டாசுத் தொழிலை உலகளாவிய சந்தையில் நிலைநிறுத்தத் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா அசுர வேகத்தில் களமிறங்கியுள்ளார். சிவகாசியில் பட்டாசு

5

தவெக-வில் இணைந்த 8 நாட்களில் விலகல்! – அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் எம்எல்ஏ!

June 15, 2026

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, தவெக-வில் இணைந்த 8 நாட்களிலேயே அரசியலில் இருந்தே

Pillayan-733199

பிள்ளையானுக்குத் தொடர்புடை ஐந்து கொலைக் குற்றச்சாட்டுகள்: மட்டக்களப்பு நீதிமன்றில் CID அறிக்கை

June 15, 2026

மட்டக்களப்பு: கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் பிரதி அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களுக்கு, ஐந்து

Screenshot_20260615_140707_YouTube

பரபரப்பான சூப்பர் ஓவர்: இந்திய ஏ அணியை வீழ்த்தி இலங்கை ஏ அணி மிரட்டல் வெற்றி!

June 15, 2026

தம்புள்ளை: தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முக்கோணத் தொடரின் (Tri-series) லீக் போட்டியில், இந்திய ஏ (India A)

Gnanasara-Thera

தனக்கு எதிரான அவதூறுகளுக்கு எதிராக ஞானசார தேரர் CID இல் முறைப்பாடு

June 15, 2026

கொழும்பு: பொதுபல சேனா (BBS) அமைப்பின் பொதுச்செயலாளர் வணக்கத்திற்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரர், சமூக ஊடகங்கள் வாயிலாக தனக்கு எதிராக

Gammanpila-Dilth-Wimal (1)

திலித், விமல் மற்றும் கம்மன்பிலவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு: CID விசாரணைகளை ஆரம்பித்துள்ளது!

June 15, 2026

கொழும்பு: நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர, முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில உள்ளிட்ட ஆறு பேருக்கு

Hemasiri-Pujith

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் வழக்கு: ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தரவின் தீர்ப்பு ஜூலை 31 இல்

June 15, 2026

கொழும்பு: கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுப்பதற்குத் தவறியமை மற்றும் கடுமையான குற்றவியல்