ஸ்குகாக் பூங்காவில் மனிதர் ஒருவரை வழிமறித்து கத்தியால் குத்திய சம்பவம்: இருவர் கைது!

கடந்த மாதம் ஒன்டாரியோவின் ஸ்குகாக் (Scugog) பகுதியில் உள்ள பூங்காவொன்றில் மனிதர் ஒருவரை வழிமறித்து (Ambushed), கத்தியால் குத்திய சம்பவம் தொடர்பாக டொராண்டோவைச் சேர்ந்த இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

டர்ஹாம் பிராந்திய காவல்துறை (Durham Regional Police) மேற்கொண்ட விசாரணையின்படி, கடந்த மே 13ஆம் தேதி மாலை, பாதிக்கப்பட்ட நபர் தனக்குத் தெரிந்த பெண் ஒருவரால் வாட்டர் மற்றும் மேரி வீதிகளுக்கு (Water and Mary streets) அருகில் உள்ள பூங்காவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். அங்கு வைத்து அந்தப் பெண்ணும் மற்றொரு ஆண் சந்தேக நபரும் சேர்ந்து பாதிக்கப்பட்ட நபரைத் திட்டமிட்டு வழிமறித்துத் தாக்கியுள்ளனர்.

அப்போது, அந்த ஆண் சந்தேக நபர் பாதிக்கப்பட்டவரைப் பலமுறை கத்தியால் குத்தியதுடன், அவரை ஒரு வாகனத்திற்குள் வலுக்கட்டாயமாக ஏற்றவும் முயன்றுள்ளார் என காவல்துறை தெரிவித்துள்ளது.

இருப்பினும், பாதிக்கப்பட்ட நபர் தற்காப்புக்காகப் போராடித் தப்பியதைத் தொடர்ந்து, சந்தேக நபர்கள் இருவரும் அவ்விடத்திலிருந்து உடனடியாக காரில் தப்பியோடியுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், பலத்த காயங்களுடன் இருந்த பாதிக்கப்பட்ட நபரை மீட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் டொராண்டோ பகுதியில் உள்ள அதிதீவிர சிகிச்சை மையத்திற்கு (Trauma centre) அனுப்பி வைத்தனர்.

திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், பாதிக்கப்பட்ட நபரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஜேம்ஸ் லீ ஹேஸ்டிங்ஸ் (James Leigh Hastings – 36) மற்றும் ஷானன் லோயிஸ் மார்ஜோரி கோ (Shannon Lois Marjorie Khoe – 51) ஆகிய இரு சந்தேக நபர்களும் கடந்த வாரம் டொராண்டோவில் வைத்து எவ்வித எதிர்ப்புமின்றி கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை அறிவித்துள்ளது.

இவர்கள் இருவர் மீதும் கொலை முயற்சி (Attempted murder), கடுமையான உடல் காயம் ஏற்படுத்துதல் (Aggravated assault) மற்றும் சட்டவிரோதமாகக் சிறைப்படுத்துதல் (Forcible confinement) ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இவற்றுடன், ஆபத்தான ஆயுதத்தை வைத்திருந்தமை, பிணை உத்தரவை மீறியமை மற்றும் நன்னடத்தை விதியை மீறியமை ஆகிய குற்றச்சாட்டுகளும் ஹேஸ்டிங்ஸ் மீது கூடுதலாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

va.

தமிழ்த் திரையுலகில் எனக்கும் விஜய்க்கும் இடையே போட்டி பொறாமை இருக்கிறது – அஜித்

October 11, 2026

தமிழ்த் திரையுலகில் அஜித்–விஜய் இருவரும் நீண்டகாலமாக போட்டி நடிகர்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகின்றனர். இருவரும் ஆரம்பகாலத்தில் ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில்

sig

சிக்மா திரைப்படம் நஷ்டமா?

October 11, 2026

நடிகர் விஜய், அரசியல் கட்டி துவங்கி தேர்தலில் போட்டியிட்டு இப்போது முதலமைச்சராகிவிட்டார். இதனால் விஜய் சினிமா பக்கமே வருவதில்லை, அவரின்

na

ஹீரோக்களுக்கு நிகரான சம்பளம் வாங்கும் நடிகை

October 11, 2026

சமூக வலைதளங்களில் திரை நட்சத்திரங்களின் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாவது வழக்கம். அந்த வகையில், தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவின்

3

இந்தியன் 3 படத்தின் புதிய அப்டேட்

October 11, 2026

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 3 திரைப்படத்தின் அப்டேட்டை லைகா நிறுவனம் தற்போது

sa

சவூதி விமான நிலைய தாக்குதலில் வௌிநாட்டவர்கள் உட்பட 12 பேர் பலி!

October 11, 2026

சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாதில் உள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் அமரும் முனையப் பகுதி மீது

thriuvu

திருவள்ளுவர் பண்பாட்டு மைய நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் முதலாவது கூட்டம்

October 11, 2026

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை எதிர்காலத்தில் முறையாக நிர்வகித்து, அதன் செயற்பாடுகளைத் திட்டமிட்ட வகையில் முன்னெடுப்பதற்காக அமைச்சரவையின் அனுமதியுடன் உருவாக்கப்பட்டுள்ள

ind

Toronto இந்தியத் துணைத் தூதரகத்தால் ‘கனடாவில் இந்தியப் பெண்களுக்கு அதிகாரத்தை வழங்குதல்’ கருத்தரங்கு

October 11, 2026

கனடாவில் உள்ள இந்தியப் பெண்களுக்குக் கிடைக்கும் ஆதரவு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, பெண்கள், சமூக அமைப்புகள், சட்ட மற்றும்

nav

‘தீமையின் மீது நன்மை பெற்ற வெற்றி’ – இன்று ஆரம்பிக்கிறது நவராத்திரி விரதம்!

October 11, 2026

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விரதம் இன்று (11) தொடங்குகிறது. நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் அம்பிகையை துர்க்கையாக,

ch

சீனத் தூதுவர் – விஜித ஹேரத் சந்திப்பு

October 11, 2026

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைவதையும், இரு நாடுகளுக்கும் இடையிலான இறப்பர் – அரிசி

sm

புகையை வெளியேற்றும் வாகனங்களை கண்டறிவதற்கு புகைப்படப் பிரிவு

October 11, 2026

அதிகளவில் புகையை வெளியேற்றும் வாகனங்களைக் கண்டறிவதற்காக, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகனப் புகை பரிசோதனைத் திட்டத்தின் கீழ் விசேட புகைப்படப்

acci main

மெட்ரோ பஸ்ஸுடன் மோதிய குற்றச்சாட்டில் பஸ் சாரதி கைது

October 11, 2026

கொழும்பு – கெஸ்பேவ வீதியில், மிரிஸ்வத்த பகுதியில் மெட்ரோ பஸ்ஸுடன் வேண்டுமென்றே மோதியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், 44 வயதுடைய

chow

சௌவின் முன்னிலையை நெருங்கும் பிரட்போர்ட்: புதிய கருத்துக்கணிப்பு

October 11, 2026

செப்டம்பர் இறுதிப் பகுதியில் வெளியிடப்பட்ட முந்தைய கருத்துக்கணிப்புடன் ஒப்பிடுகையில் சௌவின் முன்னிலை 6 புள்ளிகளிலிருந்து 2.9 புள்ளிகளாகக் குறைந்துள்ளது. ரொறன்ரோ