குருந்தூர்மலையில் 300 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் தொல்லியல் திணைக்களத்திற்குரிவை?

குருந்தூர்மலையில் 1933ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானியில் 78ஏக்கர் நிலம் தொல்லியல் தளமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.அதன்பின்னர் தொல்பொருளியல் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் குறித்த 78 ஏக்கர் நிலத்திற்கு வெளியிலும் தொல்பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும்,மேலும் 229ஏக்கர் நிலப்பரப்பை பேணப்பட்ட தொல்லியல் பிரதேசமாக பிரகடனப்படுத்தும் நோக்கில் எல்லைக்கல் இடப்பட்டுள்ளதுடன், அந்தப் பகுதியில் மொத்தமாக 300ஏக்கருக்கும் காணிகள் தொல்லியல் திணைக்களத்திற்குரிய காணிகளாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் புத்தசாசன சமய மற்றும் கலாச்சார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகாரியின் கருத்துக்கு மறுப்புத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், குருந்தூர்மலையை அண்டிய பகுதியில் எமது தமிழ் மக்களுடைய பூர்வீக வாழ்விடக்காணிகள் மற்றும் பூர்வீக வயல்நிலங்களை ஆக்கிரமித்தே தொல்லியல் திணைக்களத்தால் எல்லைக்கல்லிடப்பட்டுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டினார்.

ஒருபோதும் மக்களின் காணிகளை அபகரிக்கப்போவதில்லை. எனினும் தொல்லியலுடன் தொடர்புடைய விடயம் என்பதால்தான் இதுதொடர்பில் கவனஞ்செலுத்த வேண்டியுள்ளது.அத்தோடு மக்களுடைய காணிகள் மக்களுக்கே கிடைக்கவேண்டும். இந்தவிடயத்தில் தீர்க்கமான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு மக்களுக்குச் சாதகமான நிலை ஏற்படக்கூடிய விதத்தில் தம்மால் முடிவுகள் எடுக்கப்படும் என புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் சுனில் செனவி பதிலளித்தார்.

பாராளுமன்ற குழு அறையில் நேற்று இடம்பெற்ற புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக்குழுக்கூட்டத்தில் இவ்விடயம் கலந்துரையாடப்பட்டுள்ளது.

குருந்தூர்மலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள வயல்நிலங்களில் இடம்பெறும் சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கள் தொடர்பாக யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி சமர்ப்பித்த எழுத்துமூல பிரேரணைதொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அந்தவகையில் குருந்தூர்மலையில் 1933ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானியில் 78ஏக்கர் நிலம் தொல்லியல் தளமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.

அத்தோடு அதன்பின்னர் தொல்பொருளியல் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்மூலம் குறித்த 78ஏக்கர் நிலத்திற்கு வெளியிலும் தொல்பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும்,மேலும் 229ஏக்கர் நிலப்பரப்பை பேணப்பட்ட தொல்லியல் பிரதேசமாக பிரகடனப்படுத்தும்நோக்கில் எல்லைக்கல் இடப்பட்டுள்ளதுடன், அந்தப் பகுதியில் மொத்தமாக 300ஏக்கருக்கும் காணிகள் தொல்லியல் திணைக்களத்திற்குரிய காணிகளாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் புத்தசாசன சமய மற்றும் கலாச்சார அமைச்சின் அதிகாரியால் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த அதிகாரியின் கருத்துக்கு மறுப்புத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன், குருந்தூர்மலையை அண்டிய பகுதியில் எமது தமிழ் மக்களுடைய பூர்வீக வாழ்விடக்காணிகள் மற்றும் பூர்வீக வயல்நிலங்களை ஆக்கிரமித்தே தொல்லியல் திணைக்களத்தால் எல்லைக்கல்லிடப்பட்டுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு அந்தப் பகுதியில் கடந்த 1984ஆம் ஆண்டுவரையில் தமிழ்மக்கள் வாழ்ந்தார்கள் என்பதையும்,அங்கு பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்தனர் என்பதையும் தெளிவுபடுத்தினார்.இந்நிலையில் யுத்த சூழல்காரணமாக 1984ஆம் ஆண்டு அங்கிருந்த மக்கள் இடம்பெயர்ந்ததுடன், யுத்தகாலத்தில் மக்கள் அங்கு வசிக்கக்கூடிய நிலை இருந்திருக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான சூழலில் நீண்டகாலமாக பயன்பாடின்றியிருந்த மக்களின் காணிகளையே தொல்லியல் திணைக்களம் ஆக்கிரமித்திருக்கின்றது என்பதையும்,அந்தக் காணிகளுக்குரிய ஆவணங்களும் மக்கள் சிலரிடம் இருக்கின்றது என்பதையும் சுட்டிக்காட்டினேன். அதேவேளை அமைச்சர் தண்ணிமுறிப்புப் பகுதிக்கு நேரில் வந்தால் தொல்லியல் திணைக்களம் ஆக்கிரமித்திருப்பது மக்களின் பூர்வீகக்காணிகள் என்பதற்கான ஆதாரங்களையும் என்னால் அமைச்சருக்கு காண்பிக்கமுடியும்.

எனவே தொல்லியல் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள எமது மக்களின் பூர்வீகக் காணிகளை விடுவிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டுமென இதன்போது புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரிடம் வலியுறுத்தினார்.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக இரண்டுதடவைக்குமேல் நான் பாராளுமன்றிலும் பேசியிருப்பதை புத்தசாசன சமய மற்றும் கலாசார அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியதுடன்,தாம் ஒருபோதும் மக்களின் காணிகளை அபகரிக்கப்போவதில்லை எனத் தெரிவித்தார்.

எனினும் தொல்லியலுடன் தொடர்புடைய விடயம் என்பதால்தான் இதுதொடர்பில் கவனஞ்செலுத்த வேண்டியுள்ளது.அத்தோடு மக்களுடைய காணிகள் மக்களுக்கே கிடைக்கவேண்டும். இந்தவிடயத்தில் தீர்க்கமான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு மக்களுக்குச் சாதகமான நிலை ஏற்படக்கூடிய விதத்தில் தம்மால் முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் தொல்லியல் திணைக்களம் என்பது மக்களின் காணிகளை கையகப்படுத்துகின்ற ஒரு அரச கட்டமைப்பு என்கின்ற எண்ணப்பாடே எமது மக்கள் மத்தியில் இருக்கின்றது.அந்தநிலை மாறவேண்டுமெனவும், குருந்தூர் மலையை அண்டிய பகுதிகளில் தொல்லியல் திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தினார்.

1200-675-25117691-thumbnail-16x9-vaiko-aspera

“காவிரி விவகாரத்தில் டி.கே.சிவக்குமார் பொய்ப் பிரசாரம்!” – துரை வைகோ குற்றச்சாட்டு!

November 18, 2026

கோவை: காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் வழங்க வேண்டும் என்பதில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு மிகத் தெளிவாக உள்ள

202508173484034

“சாட்டை துரைமுருகன் மீது வழக்கு அடக்குமுறையின் உச்சம்!” – தவெக அரசுக்கு சீமான் கடும் கண்டனம்!

November 18, 2026

சென்னை: நாம் தமிழர் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் மீது வழக்குப்பதிவு செய்துள்ள தவெக அரசின் செயல்

photo-collage.png (1)

பூமியில் இருந்து ஒரு ஒளி நாள் தூரத்தைக் கடந்த Voyager -1 விண்கலம்!

November 18, 2026

மனித வரலாற்றை நாம் திரும்பிப் பார்க்கும்போது மனிதர்களுக்கு எப்போதுமே வானம், நட்சத்திரங்கள், விண்வெளி, பிரபஞ்சம் பற்றி ஆர்வமும், கேள்விகளும் இருந்து

nalintha-1 (1)

தரமற்ற உணவுப் பொருட்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

November 18, 2026

நாட்டில் சிறுவர்களை இலக்காகக் கொண்டு விற்பனை செய்யப்படும் தரமற்ற உணவுப் பொருட்களைக் கைப்பற்றுவதற்கும், அவற்றை விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட

kuru

குருந்தூர்மலையில் 300 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் தொல்லியல் திணைக்களத்திற்குரிவை?

November 18, 2026

குருந்தூர்மலையில் 1933ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானியில் 78ஏக்கர் நிலம் தொல்லியல் தளமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.அதன்பின்னர் தொல்பொருளியல் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம்

sun

தடை செய்யப்பட்டுள்ள 40,000 புனித குர்ஆன் பிரதிகள் 83 அரபுக் கல்லூரிகளின் பதிவுத் தடைகளையும் நீக்க நடவடிக்கை?

November 18, 2026

தடை செய்யப்பட்டுள்ள முஸ்லிம்களின் 40,000 ஆயிரம் புனித குர்ஆன் பிரதிகளையும், 83 அரபுக் கல்லூரிகளின் பதிவுக்கான தடைகளையும் நீக்குவதற்கான அவசர

1200-675-18564993-thumbnail-16x9-dmk

“கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு அமைச்சர்கள் அழுத்தம் கொடுக்கிறார்கள்!” – கனிமொழி எம்.பி. கடும் குற்றச்சாட்டு!

November 18, 2026

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் விவகாரத்தில் அமைச்சர்களே அழுத்தம் கொடுப்பதாக திமுக எம்.பி. கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார். ஆட்சியருக்கு அழுத்தம்:

5

“தவெகவில் 70 எம்.எல்.ஏ.க்கள் வரை அதிருப்தியில் உள்ளனர்” – முன்னாள் அமைச்சர் ரகுபதி பரபரப்பு பேட்டி!

November 18, 2026

புதுக்கோட்டை: தவெகவில் 70 எம்.எல்.ஏ.க்கள் வரை அதிருப்தியில் உள்ளனர் என்று தங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளதாக திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி

gajendran

நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுத்தமைக்காக செல்வராசா கஜேந்திரனுக்கு பொலிஸ் விசாரணைக்கு அழைப்பு!

November 18, 2026

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் அவர்களுக்கு, கோப்பாய் பகுதியில் மாலதி அவர்களின் நினைவேந்தல் நிகழ்வை

4

“அழைப்பிதழ் வரவில்லை, வாழ்த்துக் கடிதம் எழுதினேன்” – ராகுல் காந்தி அழைப்பு குறித்து மு.க.ஸ்டாலின் பதில்!

November 18, 2026

சென்னை: சோனியா காந்தியின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழா தொடர்பாக ராகுல் காந்தியிடம் இருந்து அழைப்பு வந்ததா என்ற கேள்விக்கு

images (75) - Copy

“அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர்!” – சம்மனை ஏற்று விசாரணைக்கு வந்த சி.விஜயபாஸ்கர்!

November 18, 2026

சென்னை: அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை ஏற்று சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆஜராகியுள்ளார். அவரிடம் அதிகாரிகள்

1683252-senthil-balaji

“வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும்!” – சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனு தாக்கல்!

November 18, 2026

சென்னை: வழக்கில் இருந்து விடுவிக்க கோரி திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல்