கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

தமிழ் மக்கள் மீதான படுகொலைகளுக்கு நீதி நியாயம் கிடைக்க வேண்டும் என்பதை சர்வதேச சமூகத்திடமும் இந்த அரசிடமும் கேட்டுக்கொள்கின்றேன் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இ.சிறிநாத் தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் நான்காவது நாளான நேற்று (14) கொட்டும் மழையிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.

கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கல்லடி, உப்போடை சிவானந்தாதேசிய பாடசாலைக்கு முன்பாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும் கஞ்சி வழங்கலும் நடைபெற்றது.

கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ கணேச லோகநாதன் குருக்கள் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத் மற்றும் கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது முள்ளிவாய்க்காலில் படுகொலைசெய்யப்பட்ட உறவுகளுக்காக ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் விசேட பிரார்த்தனையும் முன்னெடுக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து முள்ளிவாய்க்கால் அவலத்தினை குறிக்கும் வகையிலான கஞ்சி வழங்கப்பட்டது.கொட்டும் மழையிலும் மக்கள் இந்த கஞ்சி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,

எங்களுடைய தமிழ் இனம் இன அழிப்பு செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட அந்த நாளை நினைவு கூறுகின்ற முகமாகவும், கொல்லப்பட்ட உறவுகள் ஆன்ம விடுதலைக்காகவும், எங்களுடைய எதிர்கால சந்ததிக்கு எவ்வாறு தமிழ் மக்களுக்கான இனப்படுகொலை திட்டமிட்ட வகையிலே கொத்தணி குண்டுகளால் கொத்து கொத்தாக மக்கள் கொல்லப்பட்ட நாளை அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலும் இந்த நிகழ்வு அமைகின்றது.

அதற்கு அப்பால் கொல்லப்பட்ட மக்களுக்காகவும், காணாமல் ஆக்கப்பட்ட மக்களுக்காகவும் நீதி வேண்டி இந்த சர்வதேச சமூகத்திற்கும் இலங்கை அரசுக்கும் இந்த விடயம் காலங்காலமாக ஞாபகப்படுத்தப்பட்டு, தமிழர் உரிமைகள் வென்றெடுக்கப்பட வேண்டும் என்பதற்காக தங்கள் உயிர்களை ஆகுதியாக்கிச் செய்த மக்களை நினைவு கூறுகின்றோம். அந்த நெருக்கடியான சூழ்நிலையிலே தங்களுடைய விடுதலை போராட்டத்திற்கும் தமிழ் தேசியத்திற்கும் உயிர்களை அர்ப்பணித்த மக்களை நினைவு கூர்ந்து, அடுத்த சந்ததிக்கு எங்களுடைய இனம் எவ்வாறு கடந்த காலங்களிலே கொல்லப்பட்டது என்ற செய்தியையும், இனப்படுகொலை செய்தியையும் சொல்லுகின்ற இந்த நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களிலே உணர்வுபூர்வமாக நடைபெற்று வருகின்றது.

அந்த அடிப்படையிலே உண்மையிலே நான் இந்த கிழக்கு இலங்கை இந்து குருமார் ஒன்றியத்திற்கும், அக்கரைப்பற்று பிரதேசத்திற்குரிய இந்து குருமார் ஒன்றியத்திற்கும் நன்றிகளை கூறிக்கொள்கின்றேன். உணர்வுபூர்வமாக தங்களுடைய சமய பணிகளுக்கு அப்பால் தமிழ் மக்களின் தேசிய விடுதலைக்காக அவர்களுடைய சேவையை பாராட்டுவதோடு, உண்மையாக அவர்களுடைய தன்னார்வ செயல்களுக்கு என்னுடைய அனுசரணையையும் ஒத்துழைப்பையும் வழங்கி அவர்களோடு பயணிப்பேன் என்ற உறுதிமொழியை கூறிக்கொண்டு, தமிழ் மக்களுக்கான நீதி நியாயம் கிடைக்க வேண்டும் என்று சர்வதேச சமூகத்திடமும் இந்த அரசிடமும் கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்தார்.

ac

கோர விபத்தில் இளம் தம்பதியினர் பலி

October 10, 2026

கம்பஹா – கிரிந்திவலை 231 ஆம் இலக்க பேருந்து பாதையில், ஹேனேகம சந்தியில் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர்

Arju

பிரபாகரனால் முடியாததை நீங்கள் செய்கிறீர்கள்; ஷிராந்தியை உள்ளே போட்டதற்காகத் தமிழ் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்

October 10, 2026

மஹிந்த ராஜபக்‌ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்‌ஷவைச் சிறையில் அடைத்தமைக்காகத் தமிழ் மக்கள் மகிழ்ச்சியடைகின்றனர்; ஆனால், நான் மகிழ்ச்சியடைய மாட்டேன். எமது

thaya

தமிழ் மக்களின் பொருளாதாரத்தை அழிக்கும் நோக்கத்தில்தான் கறுப்பு ஜூலை கலவரம் தோற்றுவிக்கப்பட்டது!

October 10, 2026

தமிழ் மக்களின் பொருளாதாரத்தை அழிக்கும் நோக்கத்தில்தான் 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை கலவரம் திட்டமிட்டுத் தோற்றுவிக்கப்பட்டது. ஆனால், இறுதியில்

v

பதுளை விபத்தில் விமானப்படை அதிகாரி உயிரிழப்பு

October 10, 2026

நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், இலங்கை விமானப்படை அதிகாரி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இலங்கை விமானப்படையின் பயிற்சிப்

3

“அவதூறு பேசிய மிருக குணப் பேச்சுக்கு மக்கள் தகுந்த பதிலடி!” – இடைத்தேர்தல் வெற்றி குறித்து முதல்வர் விஜய் அறிக்கை!

October 9, 2026

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, அவதூறு பேசிய மிருக குணப் பேச்சுக்கு மக்கள் தகுந்த பதிலடியைத் தந்துள்ளதாக

2

“கொத்து புரோட்டா போட்டுவிட்டார்கள் மக்கள்!” – தவெக வெற்றியை விமர்சித்து மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!

October 9, 2026

சென்னை: ஐந்து நிமிடம் பேசினாலே கொத்து புரோட்டா போட்டுவிடுவார் என்று சொல்லப்பட்டவரை நான்கு நாட்கள் கொளுத்தும் வெயிலில் அலைய வைத்துக்

dailythanthi_2026-10-09_tw4n5oic_Untitled-6

“இடைத்தேர்தல் மாபெரும் வெற்றி!” – அமைச்சர்களுடன் வைரல் சைகை காட்டி முதலமைச்சர் விஜய் உற்சாகக் கொண்டாட்டம்!

October 9, 2026

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற்ற மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வெற்றியை முதலமைச்சர் விஜய் தனது அமைச்சர்களுடன் வைரல்

556

மதுபானசாலை அனுமதிக்கு எதிராக வலி. வடக்கில் போராட்டம்

October 9, 2026

மதுபானசாலைகளற்ற பிரதேசமாகக் காணப்படும் வலி. வடக்கில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்படுவதை எதிர்த்து, பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி

brand

பிராட் பிராட்ஃபோர்ட் திட்டத்துக்கு ஒலிவியா சௌ மற்றும் போக்குவரத்து ஆர்வலர்கள் எதிர்ப்பு?

October 9, 2026

ஸ்கார்பரோவின் 12 கி.மீ பிரத்யேக பேருந்து தடங்களை நீக்க பிராட் பிராட்ஃபோர்ட் திட்டம்: ஒலிவியா சௌ மற்றும் போக்குவரத்து ஆர்வலர்கள்

dailythanthi_2026-10-09_2ehwx7wk_shivan (1)

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் த.வெ.க. அபார வெற்றி!” – 4 மாத ஆட்சிக்குக் கிடைத்த வெற்றி என அமைச்சர்கள் பெருமிதம்!

October 9, 2026

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்களை வீழ்த்தி த.வெ.க. வேட்பாளர்கள் அபார வெற்றி பெற்றுள்ளனர்.

images (1)

நவநீதம்பிள்ளைக்கு நோபல் பரிசு: போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்

October 9, 2026

2026ம் ஆண்டிற்கான சமாதானத்திற்கான நோபல் பரிசு மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டத்தினை பாதுகாப்பதற்காக தளர்வின்றி போராடியமைக்காக ஐக்கியநாடுகள் முன்னாள்

hindutamil_import_hindu_uploads_news_2023_07_22_xlarge_1061734

“மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவு!” – வெளியே தெரிந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நந்தி சிலை!

October 9, 2026

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவாக உள்ளதால் ஜலகண்டேஸ்வரர் கோயில் நந்தி சிலை வெளியே தெரியத் தொடங்கியுள்ளது.