காணாமல் போனோர் அலுவலகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் சிவில் சமூக அமைப்புகளுக்கான செயலமர்வு!

காணாமல் போனோர் அலுவலகத்தின் செயற்பாடுகள், அதன் பணிகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பில் மாவட்ட மட்ட சிவில் சமூக அமைப்புகளின் புரிதலை வலுப்படுத்தும் நோக்கிலான பயிற்சிச் செயலமர்வு, மேலதிக அரசாங்க அதிபர் திரு. க. சிவகரன் தலைமையில், தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேராவின் பங்கேற்புடன் இன்று (13.11.2026) யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இலங்கை தேசிய சமாதானப் பேரவை மற்றும் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த இச் செயலமர்வினை ஏற்பாடு செய்யப்பட்டது.
நோக்கம் :
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் குறைகளைத் தீர்ப்பதற்காக காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் முன்னெடுக்கும் பணிகள் மற்றும் நடைமுறைகள் குறித்து சிவில் சமூகப் பிரதிநிதிகளின் புரிதலை மேம்படுத்துவதுடன், அவர்களுக்கும் அலுவலகத்திற்கும் இடையிலான தொடர்பாடலையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவதே இச்செயலமர்வின் முக்கிய நோக்கமாக அமைந்தது.
அறிமுக உரை :
அறிமுகம் மற்றும் வரவேற்புரையை தேசிய சமாதானப் பேரவையின் திரு. பென் பேரின்பநாயகம் ஆற்றினார்.
தொடக்க உரை :
யாழ்ப்பாண மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் தலைவரும், SOND நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான திரு. செந்துராஜா ஆரம்ப உரையை நிகழ்த்தினார்.
தலைமையுரை :
இச் செயலமர்வில் தலைமையுரையாற்றிய மேலதிக அரசாங்க அதிபர் அவர்கள், யாழ்ப்பாண மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக 2,249 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 983 பேருக்கான இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளதுடன், இச்செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விடயம் வெறுமனே இழப்பீடுகளை வழங்குவதுடன் முடிவடையும் ஒன்றல்ல. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உணர்வுகள், எதிர்பார்ப்புகள், மனவேதனைகள் மற்றும் அவர்களின் நீண்டகாலக் கோரிக்கைகளையும் மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டியது அவசியமாகும்.
காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் பணிகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பில் மக்களுக்கு முறையான விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் கருத்துக்களையும் தேவைகளையும் உள்வாங்கி, அவர்களுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதில் சிவில் அமைப்புகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சமூகப் பிரதிநிதிகளின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.
தேசிய சமாதானப் பேரவையின் பிரதிநிதிகளுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இக்கலந்துரையாடலின் முக்கிய நோக்கம், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான செயற்பாடுகளை மேலும் வினைத்திறனுடனும் ஒருங்கிணைந்த முறையிலும் முன்னெடுப்பதற்கான வழிமுறைகளை ஆராய்வதாகும்.
பல்வேறு சந்தர்ப்பங்களில் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்தாலும், பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்புகள் முழுமையாக நிறைவேற வேண்டிய தேவை இன்னமும் காணப்படுகின்றது. எனவே, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து செயற்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு உரிய ஆதரவையும் தீர்வுகளையும் பெற்றுக்கொடுக்க ஒத்துழைக்க வேண்டும் என மேலதிக அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
8

“திமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத் துறையில் ரூ.2,200 கோடி ஊழல்!” – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேட்டி!

November 13, 2026

சென்னை: திமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத் துறையில் பேட்ச் ஒர்க் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் சுமார் 2,200 கோடி ரூபாய் அளவுக்கு

7

“கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை!” – திருமாவளவன்!

November 13, 2026

சென்னை: கள்ளக்குறிச்சி விவகாரத்தில் பெண் அரசு ஊழியருக்கு எதிராக நடந்ததை ஒருபோதும் சரியெனக் கூற முடியாது என்றும், தவறு செய்தவர்கள்

905937788_1667128798145700_8446352789873238791_n

காணாமல் போனோர் அலுவலகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் சிவில் சமூக அமைப்புகளுக்கான செயலமர்வு!

November 13, 2026

காணாமல் போனோர் அலுவலகத்தின் செயற்பாடுகள், அதன் பணிகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பில் மாவட்ட மட்ட சிவில் சமூக அமைப்புகளின் புரிதலை

pratheepan

காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களின் வலிகளைப் புரிந்துகொண்டு உத்தியோகத்தர்கள் செயற்பட வேண்டும் – அரசாங்க அதிபர்

November 13, 2026

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரத்தைக் கையாளும்போது, அரச உத்தியோகத்தர்கள் வழமையான நிர்வாக நடைமுறைகள் மற்றும் ஆவணங்களுக்கு அப்பால், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உணர்வுகளையும்

905937788_1667128798145700_8446352789873238791_n

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்தை வலுப்படுத்த அரசாங்கமும் சிவில் சமூகமும் ஒன்றிணைய வேண்டும் – கலாநிதி ஜெஹான் பெரேரா

November 13, 2026

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்தின் (OMP) செயற்பாடுகளை வலுப்படுத்துவதற்கும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உண்மை, நீதி மற்றும் உரிய நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கும்

Namal-Rajapaksa-2

நாமல் ராஜபக்சவின் பிணை வழக்கில் இடைக்காலத் தடையுத்தரவு குறித்த தீர்ப்பு நவம்பர் 18ஆம் திகதி வழங்கப்படும்

November 13, 2026

சர்ச்சைக்குரிய ‘கிறிஷ்’ (Krrish) கொடுக்கல் வாங்கல் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால்

6

“ஆல் இஸ் வெல்!” – மாணவர்களுக்கு கேக் ஊட்டி குழந்தைகள் தினம் கொண்டாடிய முதலமைச்சர் விஜய்!

November 13, 2026

சென்னை: குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இன்று சென்னை கொளத்தூரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு வாழ்த்து அட்டையுடன் கேக்

5

“ஜாமீன் ரத்து செய்யப்படும்!” – செந்தில் பாலாஜி வழக்கில் நீதிபதி கடும் எச்சரிக்கை!

November 13, 2026

சென்னை: போக்குவரத்துத் துறையில் பணி நியமனம் வழங்க லஞ்சம் பெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கைத் தாமதப்படுத்தும் நோக்கில் செயல்பட்டால், குற்றம் சாட்டப்பட்டவர்களின்

fire

ஸ்கார்பரோ தீ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு: பொலிஸார் தகவல்

November 13, 2026

வெள்ளிக்கிழமை அதிகாலை ஸ்கார்பரோ (Scarborough) பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். லாரன்ஸ் அவென்யூ கிழக்கு (Lawrence

BE5NHZSB4VFARAOMF4FO4JRIQU

சி.டி.வி நியூஸ் (CTV News) புலனாய்வைத் தொடர்ந்து விமான நிலையப் பாதுகாப்பை முழுமையாக மாற்றியமைக்க மத்திய அரசாங்கம் நடவடிக்கை

November 13, 2026

பயணிகளின் பொதி அடையாள அட்டைகளைப் (luggage tags) பயன்படுத்திப் போதைப்பொருள் கடத்தப்படுவதை அம்பலப்படுத்திய ‘W5’ புலனாய்வு அறிக்கையைத் தொடர்ந்து, மத்திய

4

“தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதே இலக்கு!” – அமைச்சர் கீர்த்தனா!

November 13, 2026

சென்னை: தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதே தவெக அரசின் முதன்மையான இலக்கு என்றும், அந்த மாபெரும் இலக்கை

3

“மேகதாது அணை கட்ட ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்!” – கர்நாடகாவுக்கு அமைச்சர் என்.ஆனந்த் பதிலடி!

November 13, 2026

திருச்சி: கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் விவகாரத்தில், எந்தச் சூழலிலும் அந்த அணையைக் கட்ட நாங்கள் ஒருபோதும்