சென்னை:
கடந்த 2025-ஆம் ஆண்டு கரூரில் நடைபெற்ற தவெக பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த 3 டிஎஸ்பி-க்கள், 10 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 19 காவல்துறையினரை அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்து தமிழகக் காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2025 செப்டம்பர் 27 அன்று கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பிரம்மாண்ட பரப்புரை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தின் போது ஏற்பட்ட எதிர்பாராத பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி அப்பாவி பொதுமக்கள் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து முந்தைய திமுக அரசு சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைத்து விசாரணை நடத்தியது. அந்த குழு சமர்ப்பித்த அறிக்கையில், அக்கட்சியின் தலைவர் விஜய் தாமதமாக வந்ததும், கணிக்க முடியாத அளவிற்குப் பெருந்திரளான கூட்டம் கூடியதுமே விபத்துக்குக் காரணம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், இந்த வழக்கை நடுநிலையான மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) விசாரிக்க வேண்டும் என தவெக தரப்பில் வலியுறுத்தப்பட்டதால், உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் இவ்வழக்கு முழுமையாக சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டது.
தற்போது சிபிஐ அதிகாரிகள் இந்த விபத்து குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வரும் சூழலில், நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக கூட்டணி அமோக வெற்றி பெற்றுத் தளபதி விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே காவல்துறை மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளைச் சீரமைக்கும் அதிரடி நடவடிக்கைகளில் முதலமைச்சர் விஜய் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, தற்போது கரூர் விபத்தின் போது பாதுகாப்புப் பணியில் குளறுபடி செய்ததாகச் சிபிஐ விசாரண வளையத்தில் இருக்கும் அதிகாரிகள் மீது அதிரடிப் பாய்ந்துள்ளது.
டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள அதிரடி உத்தரவின்படி, கரூர் மாவட்டத்தில் மட்டும் 3 காவல் துணை கண்காணிப்பாளர்கள் (DSP), 10 காவல் ஆய்வாளர்கள் (Inspector), 5 உதவி ஆய்வாளர்கள் (SI) மற்றும் தலைமை காவலர் என மொத்தம் 19 பேர் அதிரடியாக வெவ்வேறு மண்டலங்களுக்குத் தூக்கியடிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, கரூரில் சிபிஐ விசாரணைக்குள்ளான கரூர் டவுன் டிஎஸ்பி செல்வராஜ் தூத்துக்குடி மாவட்டத்திற்கும், குளித்தலை டிஎஸ்பி கடலூர் மாவட்டத்திற்கும், அரவக்குறிச்சி டிஎஸ்பி தர்மபுரி மாவட்டத்திற்கும் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். இவர்களுடன் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் ஆய்வாளர் மணிவண்ணன் உள்ளிட்ட 10 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 5 பேர் தெற்கு மற்றும் வடக்கு மண்டலங்களுக்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சிபிஐ விசாரணை ஒருபுறம் தீவிரமடைந்துள்ள நிலையில், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மொத்தமாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது தமிழக அரசியல் மற்றும் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#KarurStampedeCase #PoliceTransferTN #DGP_SandeepRaiRathore #BreakingNews #May20 #CBI_Investigation #KarurNews #DSP_SelvarajTransfer #InspectorManivannan #ThalapathyVijay #TVK_Government #NewGovernmentTN #PoliceDepartmentTN #AdministrativeAction #TN_Politics2026 #LawAndOrderTN #MassTransfers #TamilNews #VijayMakkalIyakkam #CM_Vijay_Official_“`