இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் இடைக்கால நிர்வாகக் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு மற்றும் நிர்வாகக் குழு பதவிகளிலிருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இரான் விக்ரமரத்ன இராஜினாமா செய்துள்ளார்.
இதனை ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உறுதிப்படுத்தியுள்ளார்.