சென்னை:
சென்னை பிராட்வேயில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் மற்றும் நிதியமைச்சர் மரிய வில்சன் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய அமைச்சர் என்.ஆனந்த், தமிழக மக்கள் தளபதி விஜய்க்காக மட்டுமே வாக்களித்துள்ளதாகவும், மக்களின் நம்பிக்கையை இந்த அரசு முழுமையாகக் காப்பாற்றும் என்றும் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய நிதியமைச்சர் மரிய வில்சன், மாநிலத்தில் ஊழல் என்ற வார்த்தையே தெரியாத வகையில் வெளிப்படையான நிர்வாகத்தை உருவாக்குவதே தவெக அரசின் இலக்கு என்று தெரிவித்தார். மேலும், நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியினர் நடந்துகொண்ட முறையைக் குறிப்பிட்ட அவர், ஊழல் தொடர்பான முழுமையான தணிக்கை அறிக்கையை ஆவணங்களுடன் தயாரித்து வருவதாகவும், வரவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் அந்த அறிக்கை வெளியிடப்படும் என்றும் எச்சரித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மரிய வில்சனிடம், ஊழல் பட்டியல் எப்போது வெளியிடப்படும் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், \”கொஞ்சம் பொறுமையாக இருங்கள். அவர்கள் என்னென்ன செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதையெல்லாம் உரிய நேரத்தில் வெளிப்படுத்தப் போகிறோம். கடவுளின் அருளால் எல்லாமே நல்லபடியாக நடக்கும், அதனால் யாரும் கவலைப்பட வேண்டாம். சில விஷயங்களை முன்கூட்டியே வெளியிட முடியாது. ‘Wait and Watch’ கொஞ்சம் பொறுமையாக இருங்கள்\” என்றார். மேலும், தவெக அரசின் முதல் பட்ஜெட் எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு, அனைத்து முக்கிய அறிவிப்புகளையும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் உரிய நேரத்தில் வெளியிடுவார்கள் என்று அவர் தெரிவித்தார். இந்த நிகழ்வு அரசியல் அரங்கில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#MariaWilson #CorruptionList #TamilNaduBudget #Chennai #VijayGovernment #TamilNews #BMNews #PoliticalUpdate #BreakingNewsTN #TamilNaduPolitics #MinisterMariaWilson #AuditReport #CauveryIssue #PoliticalNews #TamilNewsLive