ஈரானிலிருந்து ஏவப்பட்ட மூன்று ஏவுகணைகளைத் தாம் இடைமறித்து அழித்துள்ளதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. நான்காவது ஏவுகணை கடலில் விழுந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சு, நாட்டின் சில பகுதிகளில் கேட்கப்பட்ட வெடிச்சத்தங்கள் ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டதனால் ஏற்பட்டவை என்று விளக்கியுள்ளது.
முன்னதாக, ஏவுகணை அச்சுறுத்தல்களுக்குத் தாம் பதிலளித்து வருவதாக அந்நாட்டின் அவசரகால மேலாண்மை ஆணையம் தெரிவித்திருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தத் தாக்குதல் குறித்து ஈரான் தரப்பிலிருந்து இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.