ஈரானின் உச்ச தலைவர் கமேனியின் உடல் நல்லடக்கம்!

ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் உடல், ஈரானிய ஷியா முஸ்லிம்களின் மிக புனிதமான தலங்களில் ஒன்றான மஷ்ஹத் (Mashhad) நகரில் அமைந்துள்ள இமாம் ரெஸா (Imam Reza) தர்காவில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஈரான் மற்றும் அதன் அண்டை நாடான ஈராக்கின் பல நகரங்களில் ஆறு நாட்களாக நடைபெற்ற பொதுமக்களின் அஞ்சலி நிகழ்வுகள் மற்றும் இறுதி மத வழிபாடுகளைத் தொடர்ந்து இந்த உடல் அடக்கம் நடைபெற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இறுதிச்சடங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே மீண்டும் தாக்குதல்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தச் சூழ்நிலையானது, கமேனியின் மரணத்திற்கு வழிவகுத்த போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக எட்டப்பட்டிருந்த முதற்கட்ட உடன்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனக் கூறப்படுகிறது.

இதேவேளை, இறுதிச்சடங்கு நிகழ்வுகளுக்கு இடையூறு விளைவிக்கும் நோக்கில், தெஹ்ரானையும் மஷ்ஹத் நகரையும் இணைக்கும் ரயில் பாதையின் இரண்டு பாலங்கள் மீது அமெரிக்கா ஒரே இரவில் குண்டுவீச்சு நடத்தியுள்ளதாக ஈரானிய புரட்சிகர காவல் படை (IRGC) குற்றம் சாட்டியுள்ளது.

கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி தெஹ்ரானில் உள்ள அயதுல்லா அலி கமேனியின் இல்லத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அவரும் அவரது குடும்ப உறுப்பினர்கள் சிலரும் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

அவருக்குப் பிறகு அவரது மகன் மொஜ்தாபா கமேனி (Mojtaba Khamenei) புதிய உச்ச தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். எனினும், அந்தத் தாக்குதலில் அவர் படுகாயமடைந்ததாகக் கூறப்படும் செய்திகளுக்குப் பின்னர், அவர் இதுவரை பொதுமக்கள் முன்னிலையில் தோன்றவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது.

மேலும், தெஹ்ரான் மற்றும் கோம் (Qom) நகரங்களில் நடைபெற்ற இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் மொஜ்தாபா கமேனி கலந்துகொள்ளவில்லை என்பதுடன், மஷ்ஹத் நகரில் நடைபெற்ற உடல் அடக்க நிகழ்வில் அவர் கலந்துகொண்டாரா என்பது குறித்தும் எவ்வித அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல்களும் இல்லை என வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

இன்று காலை ஈராக்கிலிருந்து மஷ்ஹத் நகருக்கு வந்த விசேட விமானம் மூலம் அலி கமேனி, அவரது பேத்தி, மருமகன், மகள் மற்றும் மொஜ்தாபாவின் மனைவி ஆகியோரின் உடல்கள் மஷ்ஹத் நகருக்குக் கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

4

“கூட்டணியை தக்க வைக்க தி.மு.க. முயற்சிக்கவில்லை!” – திருமாவளவன் அதிரடி!

October 12, 2026

விழுப்புரம்: கூட்டணியைத் தக்கவைக்க திமுக முயற்சிக்கவில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். திமுக தவறு: திண்டிவனம்

New Project (37)-a4wa4

“அரசு நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரனை அமர வைத்தது தவறான முன்னுதாரணம்!” – அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் காட்டம்!

October 12, 2026

மதுரை: பிரதமர் மோடி பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அமர வைக்கப்பட்டது தவறான முன்னுதாரணம்

7a6516900cae56f628c7ce9da506af3e

“திருவள்ளுவர் சிலைக்கு காவி உடையா?” – பாஜகவின் செயலுக்குத் தவெக கடும் கண்டனம்!

October 12, 2026

சென்னை: பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில், திருவள்ளுவர் சிலைக்குக் காவி உடை அணிவிக்கப்பட்டதற்குத் தமிழக வெற்றிக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

1

“பாமக உள்ளே வந்தால் நாங்கள் வெளியே செல்வோம்!” – அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

October 12, 2026

விழுப்புரம்: அமைச்சர் பதவி போனாலும், பாமக உள்ளே வந்தால் நாங்கள் வெளியே செல்வோம் என சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி

images - 2026-10-12T104122.246

“முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சற்றுமுன்னர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி – திடீர் உடல்நலக்குறைவு”

October 12, 2026

கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திடீரென ஏற்பட்ட உடல்நல பிரச்சினை காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதய

ano

சவூதி அரேபிய உயர் நீதிமன்றில் அனோஜன் சார்பில் மேன்முறையீடு

October 12, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசா சார்பாகத் தயாரிக்கப்பட்ட மேல்முறையீடு அந்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் நேற்று

war

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

October 12, 2026

நாட்டின் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை இன்று (11) மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின்

president-1

எரிபொருள் ஒப்பந்தங்கள் திருத்தப்படும் – ஜனாதிபதி

October 12, 2026

தனியார் எரிபொருள் நிறுவனங்களுடன் ஏற்கனவே செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் திருத்தம் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

4

“சன்ன ரக அரிசி கிலோ ரூ.75 ஆக உயர்வு!” – ஜனவரி வரை தட்டுப்பாடு நீடிக்கும் என ஆலை உரிமையாளர்கள் தகவல்!

October 11, 2026

மதுரை: தமிழகத்துக்கு வரும் சன்ன ரக அரிசி வரத்து குறைந்துள்ளதால், ஜனவரி மாதம் வரை தட்டுப்பாடு நீடிக்கும் என தமிழ்நாடு

3

“பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் விஜய் வைத்த வெயிட்டான கோரிக்கைகள் என்னென்ன?” – சென்னை ஐஐடி விழாவில் முக்கிய உரை!

October 11, 2026

சென்னை: சென்னை ஐஐடியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் முதலமைச்சர் விஜய்

2

“தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி போராட்டம்!” – இடதுசாரி கட்சித் தலைவர்கள் கைதுக்கு பெ.சண்முகம் கடும் கண்டனம்!

October 11, 2026

சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இடதுசாரி

1

“பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!” – முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

October 11, 2026

சென்னை: சென்னை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையை இன்று பிரதமர்