இளைஞன் கடத்தி சித்திரவதை – யாழில் ஐவர் கைது!

யாழிப்பாணத்தில் இளைஞன் ஒருவரை கடத்தி சித்திரவதைக்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய ஐவர் கூரிய ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் இந்த சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர். யாழ் பிரபல பாடசாலை ஒன்றுக்கு அருகில் கடந்த 5 ஆம் திகதி இளைஞன் ஒருவரை 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று கடத்திச் சென்றுள்ளது. கடத்தப்பட்ட இளைஞனை கைதடிக்கு கொண்டுசென்ற குறித்த கும்பல் அவ் இளைஞனை நிர்வாணமாக்கி சித்திரவதை செய்தபின் காயங்களுக்குள்ளான நபரை வேறு ஒரு இடத்தில் […]
சிறை மோதலில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த 8 அதிகாரிகளுக்கு சிறைச்சாலைகள் திணைக்களம் பதவி உயர்வு வழங்கியுள்ளது. நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற துயரச் சம்பவத்தில் 8 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 21 கைதிகள் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, நீர்கொழும்பு மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகளிடம் வாக்குமூலங்களைப் பெறும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் அதிகாரிகள் மற்றும் கைதிகள் […]
யாழ் நகர்ப் பகுதியில் இருந்து யாசகர்கள் வௌியேற்றம்!

யாழ் நகர்ப் பகுதியில் சுற்றுச்சூழலுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் விதத்திலும் சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறாகம் இருந்த 30க்கும் அதிகமான யாசகர்கள் வௌியேற்றப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பொலிசாரின் பங்களிப்புடன் அவர்கள் அங்கிருந்து வௌியேற்றப்பட்டுள்ளதாக வடமாகாண சுற்றுலாத்துறை தலைவர் வைத்தியர் விவேகானந்தராஜா தெரிவித்துள்ளார் தூய்மையான சுற்றுச் சூழலை ஏற்படுத்தவும், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். யாழ் கோட்டை சுற்றுவட்டம், பேருந்து நிலையம், கஸ்தூரியார் வீதி, மின்சார நிலைய வீதி, போதனா வைத்தியசாலை ஆகிய பகுதிகளில் […]
இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய நீர் திட்டம் இன்று ஆரம்பம்

67,000 குடும்பங்களின் குடிநீர் விநியோகத்தை உறுதி செய்யும், இலங்கையின் இரண்டாவது பாரிய நீர் திட்டம் வெள்ளிக்கிழமை (10) ஆரம்பித்து வைக்கப்படுகிறதுஎன்று அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், அநுராதபுரத்தில் எங்களுக்கு நீர் என்பது உயிர். இது குளங்கள் நிறைந்த இராஜ்யம். ஆயினும், குடிப்பதற்கு சிறிதளவு நீரைக் பெற்றுக்கொள்ளச் செல்லும்போது நாம் கடுமையான […]
இலங்கை தலைமைச் சிறைச்சாலை அதிகாரிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பாணை

வெலிக்கடை சிறைச்சாலைக்கு கடந்த 7ஆம் திகதி திடீர் விஜயம் மேற்கொண்ட அதிகாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டமை 1996ஆம் ஆண்டின் 21ஆம் இலக்க ஆணைக்குழு சட்டத்தை மீறும் செயலாகும். இது குறித்து விசாரிப்பதற்காக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலையின் தலைமை சிறைச்சாலை அதிகாரி ஆகியோருக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பாணை விடுத்துள்ளது. விசேட அறிக்கையொன்றை வியாழக்கிழமை (9) வெளியிட்டு இவ்விடயத்தை தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைகள், […]
உலகளவில் 10 இலட்சம் பெண்களுக்கான உதவிகள் முடக்கம் – ஐ.நா. கவலை

உலகளவில் சர்வதேச நாடுகளின் நிதி ஒதுக்கீடு பெருமளவு குறைக்கப்பட்டுள்ளதால், கடந்த 18 மாதங்களில் மட்டும் சுமார் ஒரு மில்லியன் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான உயிர் காக்கும் அடிப்படை உதவிகள் முடங்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. பெண்களுக்கான அமைப்புகளிடம் உதவி கேட்டு வருவோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் அதிகரித்துள்ள போதிலும், போதிய நிதியின்மையால் 90 சதவீத அமைப்புகளால் அவர்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்ய முடியவில்லை என ஐ.நா.வின் மகளிர் அமைப்பான ‘யு.என். வுமன்’ வெளியிட்ட அறிக்கையில் […]
டிப்பர் – மோட்டார் சைக்கிள் மோதல்; ஒருவர் உயிரிழப்பு
கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தளாய் போட்டங்காட்டு சந்தியில் களிமண் ஏற்றி வந்த டிப்பர் ரக வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். இவ் விபத்துச் சம்பவம் வெள்ளிக்கிழமை (10) மாலை இடம்பெற்றுள்ளது. கந்தளாய் ஜெயந்திபுர பகுதியில் இருந்து பேராறு பகுதியை நோக்கி களிமண் ஏற்றி வந்த டிப்பர் ரக வாகனம் போட்டங்காட்டு சந்தியில் வைத்து கந்தளாயில் இருந்து வானல பகுதியை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள்மீது மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் ஸ்தலத்திலேயே […]
வாசனை சவற்காரத்திற்குள் நூதனமான முறையில் ஹெரோயின் கடத்தியவர் யாழில் கைது!

வாசனை சவற்காரத்திற்குள் நூதனமான முறையில் போதைப் பொருளை கடத்தி யாழ்ப்பாணத்தின் நகர்புறப் பகுதியில் விற்பனைக்காக கொண்டு சென்ற ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று (9) இடம்பெற்றது. இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரத்ன கூறுகையில் – யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளில் போதைப்பொருள் வியாபாரம் இரகசியமான முறையில் இடம்பெற்று வருவதாக யாழ் பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரும் பொலிஸ் […]
சமூக நீரியல்துறை பேராசிரியர், வஸ்பர் குழுவுடன் இணைந்த நயினாதீவு நீர்வள ஆய்வுப் பயணம் – உரையாடலில் ஆதக்கத்தை வெளிப்படுத்திய பொதுமக்கள் ..

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஆறு ஆண்டுகளாக தொடர்ந்து வரும் மக்கள் மயப்படுத்தப்பட்ட நீர்வள பாதுகாப்பு முயற்சியின் வஸ்பர் WASPAR ஒரு பகுதியாக நயினாதீவின் நீர்வளம் தொடர்பிலான கலந்துரையாடல் மற்றும் ஆய்வுப் பயணமானது மூன்றாவது தடவையாக 09.07.2026 வியாழக்கிழமை முழுநாள் களப்பயணமும், கலந்தாய்வும் இடம்பெற்றது. பேராசிரியர் சிறிஸ்கந்தராஜா தலைமையில் வஸ்பர் குழுவைச் சேர்ந்த ஆறு ஆய்வு மாணவர்களோடு மேற்படி பயணத்தில் மக்களுக்கும் நீருக்கும் இடையிலான ஊடாட்டத்தை பரந்த பார்வையில் பார்க்கின்ற சமூக நீரியல் என்கிற அறிவியல் கோட்பாட்டின் மூலகர்த்தாவான பேராசிரியர் […]
உதவியது யார்? ஓடியது யார்? என்பது கரூர் மக்களுக்கு நன்றாகத் தெரியும் – செந்தில் பாலாஜி பதிலடி

சென்னை: முதலமைச்சர் விஜய் தனது கரூர்ப் பயணத்தில் செந்தில் பாலாஜியை மறைமுகமாக விமர்சித்திருந்த நிலையில், அதற்குச் செந்தில் பாலாஜி தனது சமூக வலைதளப் பக்கத்தில் காட்டமான பதிலடியைக் கொடுத்துள்ளார். கடந்த ஆண்டு நடந்த கரூர் நெரிசல் சம்பவத்தின்போது, பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தி.மு.க. தலைவர்கள் மு.க. ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் தான் உதவினார்கள் என்றும், அந்தச் சூழலில் முதலமைச்சர் விஜய் மக்களைக் காப்பாற்றாமல் தனி விமானத்தில் ஓடினார் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த அறிக்கை தமிழக அரசியலில் […]