உலகளவில் 10 இலட்சம் பெண்களுக்கான உதவிகள் முடக்கம் – ஐ.நா. கவலை

உலகளவில் சர்வதேச நாடுகளின் நிதி ஒதுக்கீடு பெருமளவு குறைக்கப்பட்டுள்ளதால், கடந்த 18 மாதங்களில் மட்டும் சுமார் ஒரு மில்லியன் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான உயிர் காக்கும் அடிப்படை உதவிகள் முடங்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

பெண்களுக்கான அமைப்புகளிடம் உதவி கேட்டு வருவோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் அதிகரித்துள்ள போதிலும், போதிய நிதியின்மையால் 90 சதவீத அமைப்புகளால் அவர்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்ய முடியவில்லை என ஐ.நா.வின் மகளிர் அமைப்பான ‘யு.என். வுமன்’ வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் அமெரிக்கா முன்னணியில் இருந்த நிலையில், கடந்த 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு பல பில்லியன் டொலர் மதிப்பிலான வெளிநாட்டு நிதியுதவிகளை அதிரடியாகக் குறைத்தது.

மேலும், வெளிநாட்டு உதவிகளுக்கான ‘யுஎஸ்ஏஐடி’ அமைப்பு கலைக்கப்பட்டதால், அமெரிக்காவின் உலகளாவிய உதவிகள் 50 சதவீதத்திற்கும் மேலாகச் சரிந்தன. அமெரிக்காவைத் தொடர்ந்து ஜெர்மனி, பிரான்ஸ், பிரித்தானியா போன்ற பிற முக்கிய நன்கொடை நாடுகளும் தங்களின் உள்நாட்டுப் பொருளாதார நெருக்கடி மற்றும் பாதுகாப்புச் செலவின அதிகரிப்பு காரணமாக நிதியுதவிகளைக் குறைத்துள்ளன.

கொங்கோ, ஹைட்டி, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 52 நாடுகளில் செயல்படும் 855 பெண்கள் அமைப்புகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில், போதிய நிதியின்றி 40 சதவீத அமைப்புகள் அடுத்த ஓராண்டுக்குள் நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ மூடப்படும் அபாயத்தில் உள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இந்த நிதி நெருக்கடியால் போர் சார்ந்த பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்கள், இடம்பெயர்ந்த தாய்மார்கள் மற்றும் பாடசாலைப் படிப்பை பாதியில் நிறுத்திய சிறுமிகள் ஆகியோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் கடந்த ஓராண்டில் இருமடங்காக அதிகரித்துள்ள போதிலும், 62 சதவீத அமைப்புகளால் பெண்களுக்குப் பாதுகாப்பான இடங்களையோ அடிப்படைச் சேவைகளையோ வழங்க முடியாத அவலநிலை உருவாகியுள்ளது.

Sajith-Premadasa-2 (1)

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும்  

October 10, 2026

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும். இச்சம்பவத்தினால் அநீதிக்குள்ளான தமிழ் சமூகத்திடம்

trum

நோபல் பரிசுக்கான அத்தனை தகுதியும் தனக்கு இருப்பதாக ட்ரம்ப் கருத்து

October 10, 2026

“அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தான் 2026-ம் ஆண்டுக்கான நோபல் அமைதி பரிசைப் பெறுவதற்கான அத்தனை தகுதிகளும் உள்ளது. ஆனால்

WhatsApp Image 2026-10-06 at 23.09.24

Majestic Asian உணவுத் திருவிழா!

October 10, 2026

Scarborough-வில் இன்று தொடக்கம் நடைபெறவுள்ள Majestic Asian Food Festival-இல் மறக்க முடியாத உணவுத் திருவிழாவில் கலந்து மகிழ்ந்து களிப்பாகக்

1200-675-27836231-thumbnail-16x9-vaiko

“கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உறுதிப்படுத்திய இடைத்தேர்தல் முடிவு!” – வைகோ அதிரடி!

October 10, 2026

சென்னை: தமிழகத்தில் கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதை தவெகவின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

1200-675-27342147-thumbnail-16x9-anbumani

“அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகலா? ‘அரசியலில் எதுவேணா நடக்கலாம்’” – பா.ம.க அன்புமணி ராமதாஸ் சூசகம்!

October 10, 2026

கோயம்புத்தூர்: பாமக கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் பாமக தலைவர் அன்புமணி

anojan

அனோஜன் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பு

October 10, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் தொடர்பான தேவையற்ற கருத்து பரிமாற்றங்கள் தொடர்பில் கல்முனை தலைமையகப்

can

கனடாவைச் சேர்ந்த பாட்டி புதிய உலக சாதனை

October 10, 2026

கனடாவைச் சேர்ந்த 61 வயது வீராங்கனை டோனாஜீன் வைல்ட் (DonnaJean Wilde), அமெரிக்காவின் உடாவில் நடைபெற்ற உலக சீனியர் விளையாட்டுப்

cyb

போலி சமூக ஊடக கணக்குகள் மீது கடும் நடவடிக்கை

October 10, 2026

தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் போலியான முகநூல் (Facebook) கணக்குகளைத் தயாரித்து, சமூக வலைத்தளங்கள் ஊடாக இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும்

rus

உக்ரைனின் எதிர்ப்புக்கு மத்தியில் ரஷ்யாவிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்ய அமெரிக்கா முடிவு!

October 10, 2026

அமெரிக்காவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் டீசல் கொள்முதல் செய்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி

sau

ஹவுதி இலக்குகள் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்

October 10, 2026

மெக்கா ஒப்​பந்​தத்​தின்​படி ஏமனில் உள்ள ஹவுதி இலக்​கு​களை குறி​வைத்து பாகிஸ்தான் போர் விமானங்கள் தாக்​குதல் நடத்​தி​ய​தாக செய்​தி​கள் வெளியாகி உள்​ளன.

bud_AU

மெல்பேர்ண் விஹாரையில் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை; இலங்கைப் பௌத்த துறவிக்கு 13 ஆண்டுகள் சிறை

October 10, 2026

மெல்பேர்ண் நகரில் உள்ள பௌத்த விஹாரை ஒன்றில் 6 இளம் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை இழைத்த குற்றத்திற்காக, இலங்கையைச் சேர்ந்த

is

இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேல் அரசின் வீரதீர விருது

October 10, 2026

விமான கடத்​தலை தடுத்த இந்திய பைலட் ஸ்மித் மச்​சா​ருக்கு உலகம் முழு​வ​தி​லும் இருந்து பாராட்​டுக்​கள் குவிந்து வரு​கின்​றன. இந்​நிலை​யில் இஸ்ரேல்