திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை அறிவிக்க தேர்தல் ஆணையத்துக்கு தடை

சென்னை: திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட இந்திய தேர்தல் ஆணையத்திற்குச் சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இடைத்தேர்தல் நடத்தினால் ஒரு தொகுதிக்கு இரு மக்கள் பிரதிநிதிகள் உருவாகும் அரசியல் சாசனப் பிரச்சனை எழக்கூடும் என்று மனுதாரர் வாதிட்டதை நீதிமன்றம் கவனத்தில் கொண்டது. தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இடைத்தேர்தல் தொடர்பாக […]
‘மக்களே இடைத்தேர்தலில் தீய சக்தி திமுகவை நல்லா வெச்சு வெளுத்து விடுங்க’ – கரூரில் முதலமைச்சர் விஜய் பேச்சு

கரூர்: கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் தி.மு.க.-வின் ஊழல் மற்றும் அரசியல் நாடகங்களைக் கடுமையாக விமர்சித்தார். கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாகத் தாங்கள் காவல் துறையை நம்பி ஏமாந்ததாகக் குறிப்பிட்ட அவர், காவல்துறை வேண்டுமென்றே எங்களை வழிநடத்திச் சென்று நாடகம் நடத்தியது என்றார். தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற கொள்ளைகளைச் சுட்டிக்காட்டிய முதலமைச்சர், தி.மு.க. தலைவர்களை ‘பணம் எண்ணும் மிஷின்’ என்று வர்ணித்தார். தவெக அரசு ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்துள்ளதையும், லஞ்சம் ஒழிக்கப்பட்டதையும் […]
சட்பரி (Sudbury) தற்காலிக முகாம் கொலைச் சம்பவம்: இரண்டாவது சந்தேகநபரைத் தேடும் பொலிஸார்

கிரேட்டர் சட்பரியின் ‘எனர்ஜி கோர்ட்’ (Energy Court) வீடற்றோருக்கான தற்காலிக முகாமில் கடந்த மாதம் இடம்பெற்ற கொடிய கூடாரத் தீ விபத்து (tent fire) கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டாவது சந்தேகநபரின் புகைப்படம் மற்றும் பெயரைப் பொலிஸார் வெளியிட்டுள்ளனர். ஜூன் 11 அன்று ஏற்பட்ட இந்த கூடாரத் தீ விபத்தில் 41 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்ததுடன், சட்பரி பொலிஸார் இதனை ஒரு கொலைச் சம்பவமாகப் புலனாய்வு செய்து வருகின்றனர். இந்த வழக்கில் ஏற்கனவே கொலைக் குற்றம் […]
சிறுமி கடத்தல் முயற்சி தொடர்பாக பரவி வரும் ஏஐ (AI) புகைப்படம் குறித்து ஆர்சிஎம்பி (RCMP) பொலிஸார் எச்சரிக்கை

நியூ பிரன்சுவிக் (N.B.), லேக் ஜார்ஜ் பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சிறுமி கடத்தல் முயற்சியில் தொடர்புடைய வேன் (van) மற்றும் சந்தேகநபர்களை சித்தரிப்பதாக ஆன்லைனில் பரவி வரும் புகைப்படம் ஒன்று, ஏஐ (AI – செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டது என்று ஆர்சிஎம்பி (RCMP) பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த புகைப்படம் குறித்து தங்களுக்குத் தெரியும் என்றும், பொதுமக்கள் தங்களது உத்தியோகபூர்வ ஊடகப் பக்கங்கள் மூலம் பகிரப்படும் தகவல்களை மட்டுமே நம்பியிருக்குமாறும் நியூ பிரன்சுவிக் ஆர்சிஎம்பி பொலிஸார் […]
வோகன் (Vaughan) நகரில் வெறுப்புணர்வினால் தூண்டப்பட்ட இரண்டு தாக்குதல்கள்: சந்தேகநபர் ஒருவரைத் தேடும் பொலிஸார்

வோகன் நகரில் வெறுப்புணர்வினால் தூண்டப்பட்ட (hate-motivated) இரண்டு தனித்தனி தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரைத் தேடி வருவதாக யோர்க் பிராந்திய பொலிஸார் (York Regional Police) தெரிவித்துள்ளனர். பொலிஸாரின் கூற்றுப்படி, முதலாவது சம்பவம் ஜூன் 9ஆம் தேதி இரவு 8:45 மணியளவில் ‘மேஜர் மெக்கன்சி டிரைவ் வெஸ்ட்’ (Major Mackenzie Drive West) மற்றும் ‘அமியூஸ்மென்ட் டிரைவ்’ (Amusement Drive) பகுதியில் இடம்பெற்றுள்ளது. “சந்தேகநபர் பாதிக்கப்பட்டவரை அணுகி, இனவெறி சார்ந்த கருத்து ஒன்றைக் கூறி, பின்னர் […]
ஈரான் ட்ரம்பைக் கொலை செய்யப் புதிய திட்டம்: இஸ்ரேல் உளவுத் தகவல்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைக் கொலை செய்வதற்கு ஈரான் புதியதொரு சதித்திட்டத்தைத் தீட்டியுள்ளதாக இஸ்ரேல், அமெரிக்காவுக்கு மிக முக்கிய உளவுத்துறைத் தகவல்களைப் பகிர்ந்துள்ளதாக சிஎன்என் செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையேயான போர்நிறுத்த ஒப்பந்தம் முறிவடையும் நிலையை எட்டியுள்ள சூழலில், இந்தத் தகவல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ட்ரம்பைக் கொலை செய்யக்கூடிய சாத்தியமான திட்டங்கள் குறித்து அமெரிக்க உளவுத்துறை கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து கண்காணித்து வந்த போதிலும், இந்த வாரம் இஸ்ரேலிடமிருந்து வந்த […]
ரொக்கெட் தொழில்நுட்பத்தில் சீனா வரலாற்றுச் சாதனை

சீனா தனது விண்வெளி தொழில்நுட்ப வளர்ச்சியில் முக்கியமான முன்னேற்றமொன்றை பதிவு செய்துள்ளது. சுற்றுப்பாதை ஏவுதல் சோதனையின் போது ஏவுகணை (carrier rocket) ஒன்றின் முதல் கட்டத்தை வெற்றிகரமாக மீட்டுள்ளதாக அந்நாட்டு அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மீள்பயன்படுத்தக்கூடிய ரொக்கெட் தொழில்நுட்பத்தில் அமெரிக்க நிறுவனங்களுக்கு நிகராக முன்னேற முயற்சிக்கும் சீனாவின் விண்வெளித் திட்டத்தில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது. சீனாவின் தென்பகுதியில் அமைந்துள்ள ஹைனான் தீவிலிருந்து வெள்ளிக்கிழமை (10) Long March 10B rocket விண்ணில் ஏவப்பட்டது. ஏவுதளத்திலிருந்து […]
இலங்கையின் நீர்கொழும்பு சிறைச்சாலை பழிவாங்கும் தாக்குதல்கள்; நீதியும் பொறுப்புக்கூறலும் அவசியம் – ஐ.நா

லங்கையின் நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற பாரதூரமான வன்முறைச் சம்பவங்கள் மற்றும் பிற சிறைச்சாலைகளில் கைதிகள் மீது சிறைக்காவலர்களால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் பழிவாங்கும் தாக்குதல்கள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் தனது கடுமையான கவலையையும் அதிர்ச்சியையும் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் அலுவலகத்தின் ஊடகப் பேச்சாளர் ரவினா ஷாம்தாசனி விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில், இந்த வன்முறைகளில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு உண்மை என்னவென்று தெரியவர வேண்டும் […]
அரசுக்கு சமல் ராஜபக்ஷவின் நிறுவனத்தால் 3.5 கோடி நஷ்டம்

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் சுமார் 6 இலட்சத்து 50 ஆயிரம் கிலோகிராம் மருத்துவக் கழிவுகளை அகற்றுவதற்காகக் கோரப்பட்ட டெண்டர் நடைமுறையில் பாரிய நிதி முறைகேடு இடம்பெற்றுள்ளதாக சிவில் புலனாய்வு முன்னணி (Civil Intelligence Front) குற்றஞ்சாட்டியுள்ளது. குறித்த டெண்டர் கோரலின்போது மிகக் குறைந்த விலையைக் குறிப்பிட்டிருந்த தகுதியான நிறுவனத்துக்கு ஒப்பந்தத்தை வழங்காது, விதிகளுக்குப் புறம்பான முறையில் அதிக விலை குறிப்பிட்டிருந்த நிறுவனத்துக்கு அது வழங்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஏப்ரல் 8 அன்று கோரப்பட்ட […]
மெகசின் சிறைச்சாலை கைதிகளுக்கு இடையே மோதல்

கொழும்பு – பொரளை மெகசின் சிறைச்சாலையில் உள்ள கைதிகள் 5 பேருக்கு இடையே இன்று வெள்ளிக்கிழமை (10) பிற்பகல் மோதல் இடம்பெற்றுள்ளது. இந்த மோதலில் காயமடைந்த இரு கைதிகள் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மோதலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.