லங்கையின் நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற பாரதூரமான வன்முறைச் சம்பவங்கள் மற்றும் பிற சிறைச்சாலைகளில் கைதிகள் மீது சிறைக்காவலர்களால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் பழிவாங்கும் தாக்குதல்கள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் தனது கடுமையான கவலையையும் அதிர்ச்சியையும் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் அலுவலகத்தின் ஊடகப் பேச்சாளர் ரவினா ஷாம்தாசனி விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில், இந்த வன்முறைகளில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு உண்மை என்னவென்று தெரியவர வேண்டும் என்றும், இதற்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு பொறுப்புக்கூறல் உறுதி செய்யப்படவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.