இலங்கையின் மீன்பிடித்துறை வீழ்ச்சி?

கடல் வெப்பநிலை உயர்வு மற்றும் எரிபொருள் விலையேற்றத்தால் 2026ஆம் ஆண்டு முதல் அரையாண்டில் கடல் மீன் உற்பத்தி 19.0 சதவீதமும், ஒட்டுமொத்த மீன்பிடித்துறை 19.1 சதவீதமும் வீழ்ச்சியடைந்துள்ளது என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் வைத்து நேற்றைய தினம் (27.11.2026) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

உள்நாட்டு மொத்த உற்பத்தியில் கடற்தொழிலின் பங்கு

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையானது, நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட ஒரு நாடாகும். இது தரைப்பரப்பை விட எட்டு மடங்கு பெரிய கடற்பரப்பைக் கொண்டது. எனினும், உள்நாட்டு மொத்த உற்பத்தியில் கடற்தொழிலின் பங்கு மிகக் குறைந்த அளவிலேயே காணப்படுகிறது.

எனவே, இத்துறையின் கட்டமைப்புச் சிக்கல்களையும் கள நிலமைகளையும் மேம்பாட்டுக்கான முன் மொழிவுகளையும் நடுநிலையோடு முன்வைக்கலாம் என எண்ணுகின்றேன் .

அரச புள்ளிவிவரத் துறையின் 2026ஆம் ஆண்டுக்கான கையேட்டின்படி, 2025ஆம் ஆண்டு இலங்கை முழுவதும் 3,33,318 செயற்படு கடற்தொழிலாளர் காணப்பட்டனர். இவர்களில் 2,41,619 பேர் கடல் மீன்பிடியிலும், 91,699 பேர் நன்னீர் மீன்பிடி மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பிலும் ஈடுபடுகின்றனர்.

நாட்டில் இயங்கும் மீன்பிடிக்கலங்களின் எண்ணிக்கை 60,887 ஆகும் . கடற்றொழில் அமைச்சின் 2025 செயலாற்றுகை அறிக்கையின்படி, 2,73,240 மீனவ குடும்பங்களைச் சேர்ந்த ஏறத்தாழ 11,23,000 மக்கள் நேரடியாக மீன்பிடித்தொழிலில் ஈடுபடுகின்றனர்.

படகு கட்டுதல், வலை பின்னுதல், பனிக்கட்டி (ஐஸ்) உற்பத்தி, கருவாடு பதனிடல், சந்தைப்படுத்தல் ஆகிய துணைத் தொழில்களில் 1577000 மக்கள் மறை முகாமாகப் பங்கு கொள்கின்றனர். இவ்வாறு 27 இலட்சம் மக்கள் மீன் பிடித்துறையை வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர்.

இது நாட்டின் மொத்த குடித்தொகையில் ஏறத்தாழ 18 சதவீதம் ஆகும். இலங்கை மத்திய வங்கி மற்றும் புள்ளிவிவரத் துறையின் 2025ஆம் ஆண்டு அறிக்கைகளின்படி, மீன்பிடித்துறையின் பங்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 2023 ஆம் ஆண்டில் 1.1 சத வீதமாகவும் 2024 ஆம் ஆண்டில் 1.0 சதவீதமாகவும் 2025ஆம் ஆண்டில் 0.9 சதவீதமாகவும் 2026ஆம் ஆண்டு முதல் அரை ஆண்டில் 0.9 சதவீதமாகவும் காணப்படுகின்றது.

இது மொத்த தேசிய உற்பத்தியில் கடற்றொழிலின் நேரடிப் பங்களிப்புத் தொடர்ந்து சரிவடைந்து வருவதைக் காட்டுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

4

“தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு பேரதிர்ச்சி தருகிறது!” – திருமாவளவன் எம்.பி. கருத்து!

November 28, 2026

சென்னை: தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு திமுக ஆதரவு தெரிவித்திருப்பது திருப்பரங்குன்றம் தீர்ப்பை விடப் பேரதிர்ச்சி தருகிறது என்று விடுதலைச் சிறுத்தைகள்

3

“பெண்கள் சுயதொழில் தொடங்க ‘சிங்கப்பெண் கடன்’ திட்டம்!” – விண்ணப்பங்கள் வரவேற்பு!

November 28, 2026

சென்னை: பெண்களின் கனவுகளுக்குச் சிறகளித்து, சுயசார்புடன் பொருளாதாரத்தில் உயர வழிவகுக்கும் கூட்டுறவுத்துறையின் ‘சிங்கப்பெண் கடன்’ திட்டத்தில் சுயதொழில் தொடங்க விண்ணப்பங்கள்

2

“தொகுதி மறுவரையறை மூலம் ஜனநாயகத்தைச் சீர்குலைக்க மத்திய அரசு முயற்சி!” – வைகோ கண்டனம்!

November 28, 2026

திருச்சி: தொகுதி மறுவரையறை விவகாரத்தில் ஜனநாயகத்தை மத்திய அரசு சீர்குலைக்க முயற்சிக்கிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

1

“பாஜக பொறியில் திமுக சிக்கிவிடக் கூடாது!” – கி.வீரமணி எச்சரிக்கை!

November 28, 2026

சென்னை: தொகுதி மறுவரையறை விவகாரத்தில் பாஜகவின் தேன் கலந்த விஷ உருண்டையை நம்பி திமுக ஏமாறக் கூடாது என்று திராவிடர்

gotta

லலித் – குகன் வழக்கு: கோட்டாபய சாட்சியம் ஒத்திவைப்பு

November 28, 2026

2011ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் அரசியல் செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான

kor

கொரியாவில் உயிரிழந்த இரு இலங்கையர்கள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சின் முக்கிய அறிவிப்பு

November 28, 2026

கொரியக் குடியரசியன் ஹ்வாசியோங் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த இரு இலங்கையர்களை உடல்களை நாட்டுக்குக் கொண்டு வருவதற்கு அமைச்சு நடவடிக்கை

fi

இலங்கையின் மீன்பிடித்துறை வீழ்ச்சி?

November 28, 2026

கடல் வெப்பநிலை உயர்வு மற்றும் எரிபொருள் விலையேற்றத்தால் 2026ஆம் ஆண்டு முதல் அரையாண்டில் கடல் மீன் உற்பத்தி 19.0 சதவீதமும்,

GTSRFKBOFBALHD57YA7SLKDICU

ரொறன்ரோவில் பொலிஸ் வாகனத்தின் மீது திருடப்பட்ட கார் மோதிய விபத்து: துப்பாக்கிகளுடன் மூவர் கைது

November 28, 2026

கனடாவின் ரொறன்ரோ நகரில் வீடு புகுந்து கொள்ளையடிப்பவர்களைத் தடுக்கும் விசேட நடவடிக்கையின் போது, திருடப்பட்ட வாகனமொன்று பொலிஸ் ரோந்து வாகனத்தின்

MHRM33CPKVASXIFHDXUDA4DOZM

மிசிசாகாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் வைத்தியசாலையில் அனுமதி

November 28, 2026

மிசிசாகா, நவம்பர் 28, 2026 கனடாவின் மிசிசாகா (Mississauga) நகரில் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் காயமடைந்த நான்கு

toronto police 124

ரொறன்ரோ டி.டி.சி (TTC) பேருந்தில் இடம்பெற்ற கத்திக்குத்து கொலை: சந்தேகநபர் பொலிஸில் சரண்

November 28, 2026

ரொறன்ரோ, நவம்பர் 28, 2026 கனடாவின் ரொறன்ரோ நகரிலுள்ள ஸ்கார்பரோ (Scarborough) பகுதியில் டி.டி.சி (TTC) பேருந்தொன்றில் 34 வயதுடைய

bla

மிகப் பெரும் இன வன்முறையான 1983 கறுப்பு ஜூலை பற்றி விசாரணை நடத்த நாடாளுமன்ற தெரிவு குழு அமைப்பு?

November 28, 2026

இலங்கையின் வரலாற்றில் மிகப் பெரும் இன வன் முறை சம்பவங்களில் ஒன்றாக கருதப்படும் 1983ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை நிகழ்வுகள்

open

மூன்றாவது தடவையாக இலங்கையில் இதய மாற்று சத்திரசிகிச்சை

November 28, 2026

இலங்கையில் வைத்தியசாலையொன்றில் மூன்றாவது தடவையாக மேற்கொள்ளப்பட்ட இதய மாற்று சத்திரசிகிச்சை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நேற்று முன்தினம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.