தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம், பாம்பாறு அணை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில், 8.52 கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட 148 புதிய வீடுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் குறித்த வீடுகளை இன்று(26)தொலைக்காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக திறந்து வைத்தார்.
இதனுடன், 19,710 குடும்பங்களைச் சேர்ந்த 56,638 முகாம்வாழ் இலங்கைத் தமிழர்கள் பயன்பெறும் வகையில், உயர்த்தப்பட்ட மாதாந்திரப் பணக்கொடையும் வழங்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.