இன்று முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் 17வது ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் முல்லைத்தீவு மாவட்டம், முள்ளிவாய்க்காலில் உள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபியில் நினைவுகூரப்படவுள்ளது .
முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு , அதிகாரப்பூர்வ நினைவேந்தல் ஏற்பாடுகள் மற்றும் நிகழ்ச்சி நிரலை அறிவித்துள்ளது.
காலை 10.15 மணி – பிரகடனம் வெளியீடு
காலை 10.29 மணி – மணி ஒலித்தல்
காலை 10.30 மணி – அகவணக்கம்
காலை 10.31 மணி – பொதுச் சுடர் ஏற்றுதல்
காலை 10.35 மணி – மலர் அஞ்சலி