இதுவரை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது மரபணு மாதிரிகள் சேகரிக்கப்படவில்லை – சட்டத்தரணி ரனித்தா

மரபணு தொடர்பான விடயத்தில், இதுவரை காலமும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகமோ அல்லது ஏனைய அரச நிறுவனங்களோ காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்களின் மரபணு மாதிரிகளைச் சேகரித்து, அதனைப் பாதுகாக்கும் செயற்பாடுகள் எதனையும் முன்னெடுக்கவில்லை என்று செம்மணி புதைகுழி வழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பாக முன்னிலையாகும் சட்டத்தரணி ஞா. ரனித்தா தெரிவித்தார்.

செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்ந்து எடுக்கப்படும் மனித என்புத் தொகுதிகள் மீதான மரபணுப் பரிசோதனைகள் மற்றும் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “அடையாளம் காணப்படும் என்புத் தொகுதிகளை நிலத்திலிருந்து அகழ்ந்து எடுப்பது என்பது முதற்கட்டத் தனித்துவமான ஒரு செயற்பாடாகும்.

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியிலும் முதற்கட்டமாக என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு அகழ்ந்து எடுக்கப்பட்டன. அதன் பிற்பாடு, அந்த என்பு மாதிரிகளை அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்வது என்பது இரண்டாவது நடவடிக்கையாகக் காணப்படுகின்றது.

இந்த இரண்டாவது நடவடிக்கையின் போதே அகழ்ந்து எடுக்கப்பட்ட என்புத் தொகுதிகள் முழுமையாக ஆராயப்பட்டு, அந்த மனிதர்களின் வயது, பாலினம் மற்றும் அவர்களின் இறப்புக்கான துல்லியமான காரணங்கள் கண்டுபிடிக்கப்படும்.

அத்துடன், அகழ்ந்து எடுக்கப்படும் என்புத் தொகுதிகளினுடைய கால எல்லை பற்றி தொல்லியல் திணைக்களத்தால் அறிவியல் அறிக்கை ஒன்றும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். இவை இரண்டும் சமர்ப்பிக்கப்பட்டதன் பிற்பாடு, மூன்றாவது கட்டமாகவே காணாமல்போன உறவுகள் தொடர்பானத் தேடுதல் விவகாரங்கள் ஆரம்பிக்கப்படும்.

யாராவது தங்களுடைய உறவினர்கள் குறிப்பிட்ட காலத்தில் காணாமல்போனதாகவோ அல்லது கைது செய்யப்பட்டதன் பிற்பாடு இருப்பிடம் தெரியவில்லை என்றோ முறைப்பாடுகளை வழங்கியிருந்தால், தொல்லியல் திணைக்களம் கணித்துள்ள காலப்பகுதியோடு அந்தத் தரவுகளை ஒப்பிட்டு, பாதிக்கப்பட்ட உறவினர்களின் மரபணு மாதிரிகளை ஆய்வு செய்ய வேண்டிய சட்டத் தேவைப்பாடு உள்ளது.

ஏற்கனவே கொக்குத்தொடுவாயிலும் அந்த விடயங்கள் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டு, தற்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அது தொடர்பாக நீதிமன்றத்திடம் அறிக்கையிடுமாறு கூறப்பட்டுள்ளது.

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி வழக்கை ஒரு சிறந்த முன் உதாரணமாகக் கொண்டுதான், நாட்டில் பதிவாகி வரும் ஏனைய புதைகுழி வழக்குகளின் சட்டப் பிரச்சினைகளும் கையாளப்படும்.

இதுவே சர்வதேச நியதிகளிலும் பின்பற்றப்படுகின்ற வழக்கமான நடைமுறையாகும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக மரபணு தொடர்பான விடயத்தில், இதுவரை காலமும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகமோ அல்லது ஏனைய அரசாங்க நிறுவனங்களோ காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்களின் மரபணுக்களைச் சேகரித்து, அதனைப் பாதுகாக்கும் காப்பகம் எதனையும் இதுவரை உருவாக்கவில்லை.

இனிவரும் காலங்களிலாவது காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்களின் மரபணுவைச் சேகரித்துப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படுமாக இருந்தால், அதனைப் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் ஒப்புதலோடு மிக இலகுவாக முன்னெடுக்க முடியும்.

எனினும், இதற்கு அரசினுடைய முழுமையான இராஜதந்திர ஒத்துழைப்பும், தடயவியல் நிபுணர்களுடைய சர்வதேச அளவிலான உதவியும் அவசியமாகக் காணப்படுகின்றது.

மனிதப் புதைகுழி விவகாரத்தில் அடுத்தகட்டமாகச் சட்டப்பூர்வமாக எவற்றினைச் செய்ய வேண்டும் என்பதை நீதிமன்றமும், அகழ்வுப் பணிகளில் களத்தில் முன்னிலையாகும் நிபுணர்களுமே தங்களின் அறிவியல் கருத்துக்கள் மூலம் நீதிமன்றத்துக்குத் தெளிவுபடுத்துவார்கள். அதனடிப்படையிலேயே நீதிமன்றம் இறுதித் தீர்மானத்தை எடுக்கும்.” என்றார்.

Sajith-Premadasa-2 (1)

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும்  

October 10, 2026

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும். இச்சம்பவத்தினால் அநீதிக்குள்ளான தமிழ் சமூகத்திடம்

trum

நோபல் பரிசுக்கான அத்தனை தகுதியும் தனக்கு இருப்பதாக ட்ரம்ப் கருத்து

October 10, 2026

“அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தான் 2026-ம் ஆண்டுக்கான நோபல் அமைதி பரிசைப் பெறுவதற்கான அத்தனை தகுதிகளும் உள்ளது. ஆனால்

WhatsApp Image 2026-10-06 at 23.09.24

Majestic Asian உணவுத் திருவிழா!

October 10, 2026

Scarborough-வில் இன்று தொடக்கம் நடைபெறவுள்ள Majestic Asian Food Festival-இல் மறக்க முடியாத உணவுத் திருவிழாவில் கலந்து மகிழ்ந்து களிப்பாகக்

1200-675-27836231-thumbnail-16x9-vaiko

“கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உறுதிப்படுத்திய இடைத்தேர்தல் முடிவு!” – வைகோ அதிரடி!

October 10, 2026

சென்னை: தமிழகத்தில் கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதை தவெகவின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

1200-675-27342147-thumbnail-16x9-anbumani

“அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகலா? ‘அரசியலில் எதுவேணா நடக்கலாம்’” – பா.ம.க அன்புமணி ராமதாஸ் சூசகம்!

October 10, 2026

கோயம்புத்தூர்: பாமக கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் பாமக தலைவர் அன்புமணி

anojan

அனோஜன் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பு

October 10, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் தொடர்பான தேவையற்ற கருத்து பரிமாற்றங்கள் தொடர்பில் கல்முனை தலைமையகப்

can

கனடாவைச் சேர்ந்த பாட்டி புதிய உலக சாதனை

October 10, 2026

கனடாவைச் சேர்ந்த 61 வயது வீராங்கனை டோனாஜீன் வைல்ட் (DonnaJean Wilde), அமெரிக்காவின் உடாவில் நடைபெற்ற உலக சீனியர் விளையாட்டுப்

cyb

போலி சமூக ஊடக கணக்குகள் மீது கடும் நடவடிக்கை

October 10, 2026

தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் போலியான முகநூல் (Facebook) கணக்குகளைத் தயாரித்து, சமூக வலைத்தளங்கள் ஊடாக இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும்

rus

உக்ரைனின் எதிர்ப்புக்கு மத்தியில் ரஷ்யாவிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்ய அமெரிக்கா முடிவு!

October 10, 2026

அமெரிக்காவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் டீசல் கொள்முதல் செய்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி

sau

ஹவுதி இலக்குகள் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்

October 10, 2026

மெக்கா ஒப்​பந்​தத்​தின்​படி ஏமனில் உள்ள ஹவுதி இலக்​கு​களை குறி​வைத்து பாகிஸ்தான் போர் விமானங்கள் தாக்​குதல் நடத்​தி​ய​தாக செய்​தி​கள் வெளியாகி உள்​ளன.

bud_AU

மெல்பேர்ண் விஹாரையில் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை; இலங்கைப் பௌத்த துறவிக்கு 13 ஆண்டுகள் சிறை

October 10, 2026

மெல்பேர்ண் நகரில் உள்ள பௌத்த விஹாரை ஒன்றில் 6 இளம் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை இழைத்த குற்றத்திற்காக, இலங்கையைச் சேர்ந்த

is

இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேல் அரசின் வீரதீர விருது

October 10, 2026

விமான கடத்​தலை தடுத்த இந்திய பைலட் ஸ்மித் மச்​சா​ருக்கு உலகம் முழு​வ​தி​லும் இருந்து பாராட்​டுக்​கள் குவிந்து வரு​கின்​றன. இந்​நிலை​யில் இஸ்ரேல்