சென்னை:
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிலையில், தமிழ்நாடு சட்டசபையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பலம் 109 ஆக அதிகரித்துள்ளது.
தவெக பலம் அதிகரிப்பு:
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டசபை தொகுதிகளில் 118 இடங்களைப் பெறுபவர்களே தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும். தற்போதைய நிலையில் தவெக 109 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. பெரும்பான்மையைப் பெற அக்கட்சிக்கு இன்னும் 9 இடங்கள் அவசியமாகும். தமிழ்நாட்டில் இன்னும் 5 தொகுதிகள் (கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம், திருச்சி கிழக்கு) காலியாக உள்ளன.
கூட்டணி ஆட்சி நிலை:
இந்த 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டு, அனைத்திலும் தவெக வெற்றி பெற்றாலும் கூட, சட்டசபையில் அக்கட்சியின் பலம் 114 ஆக மட்டுமே அதிகரிக்கும். அப்போதும் 4 இடங்கள் தேவைப்படும் என்பதால், தவெக தொடர்ந்து கூட்டணி ஆட்சியைத்தான் நடத்த முடியும் என்ற நிலை உள்ளது.
அதிமுக கோட்டையில் தவெக:
கடந்த பொதுத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா ஆகியோர் தற்போது இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர்களாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். இதனால் அதிமுக கோட்டையாக இருந்த இரு தொகுதிகளும் தவெக பேட்டையாக மாறியுள்ளன. இந்தத் தேர்தலில் திமுக 2-வது இடத்தையும், அதிமுக 3-வது இடத்தையும் பிடித்துள்ளன.
#TVKAssemblyStrength #Byelection #CMVijay #TNPolitics #BmNews #TamilNews #BreakingNewsTN #TamilNaduNews #LatestNews #TamilNewsLive