சென்னை:
இயக்குனர் மற்றும் நடிகரான ஆர்.ஜே. பாலாஜியின் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படத்தில், இசைஞானி இளையராஜா தனது பாடல்களின் காப்புரிமைக்காக (Copyright) நடத்தி வரும் சட்டப் போராட்டத்தைக் கிண்டல் செய்யும் வகையில் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாக எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் நெட்டிசன்கள் மற்றும் இளையராஜா ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ள இக்காட்சி குறித்து நெட்டிசன் ஒருவர் பேசுகையில், “தங்கள் சொந்தத் துறையில் இருக்கும் ஒரு மூத்த கலைஞர், தன் வாழ்நாள் உழைப்புக்கான நியாயத்தைக் கேட்டு நீதிமன்றத்தில் போராடினால், அதைக் கூட சினிமா துறையில் இருப்பவர்கள் நக்கல் தான் அடிக்கிறார்கள். ஒருவேளை இளையராஜா இந்தச் செய்தி தெரிந்து வழக்கு போட்டால், அதுவும் தங்களது படத்தோட பப்ளிசிட்டிக்கு யூஸ் ஆகும் என்று ஆர்.ஜே. பாலாஜி டீம் நினைத்திருக்கலாம். இப்போது இந்த ‘கருப்பு’ திரைப்படத்தை யாராவது எக்ஸ் தளத்தில் அப்லோட் செய்தால், ஆர்.ஜே. பாலாஜி டீம் சும்மா இருக்குமா அல்லது காப்பிரைட் நோட்டீஸ் அனுப்புமா?” என்று காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்னொரு இளையராஜா ரசிகரின் பதிவில், “ஒரு இசையமைப்பாளரின் படைப்பு என்பது அவரது அறிவுசார் சொத்து (Intellectual Property). அந்தப் பாடல்களைப் பொது நிகழ்வுகள், திரைப்படங்கள் அல்லது வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்தும் போது உரிய அனுமதி பெற வேண்டும் என்பதே காப்புரிமைச் சட்டத்தின் அடிப்படை. இந்திய அரசியலமைப்பும், காப்புரிமைச் சட்டமும் வழங்கியுள்ள சட்டப்பூர்வமான உரிமையைப் பாதுகாக்கும் இசைஞானியின் நிலைப்பாட்டைக் கேலி செய்யும் போக்கில் ‘கருப்பு’ படத்தில் காட்சிகள் அமைத்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. கலைச் சுதந்திரம் என்ற பெயரில் ஒரு தனிநபரின் சட்டப்பூர்வமான உரிமையைக் குறிவைத்துத் தவறான புரிதலை உருவாக்குவது பொறுப்பற்ற அணுகுமுறை. எனவே, அந்தச் சர்ச்சைக்குரிய காட்சியைப் படத்திலிருந்து உடனடியாக நீக்க வேண்டும்” என்று வன்மையாகக் கண்டிக்கப்பட்டுள்ளது.
இளையராஜாவை இழிவுபடுத்தும் விதமாக அமைந்துள்ள இக்காட்சியைப் படத்திலிருந்து நீக்கப் படக்குழுவுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறி, சில நெட்டிசன்கள் முதலமைச்சர் விஜய்யை எக்ஸ் தளத்தில் டேக் செய்து தங்களது ஜனநாயக ரீதியிலான கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். தவெக அரசு கலை மற்றும் கலைஞர்களின் உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் வேளையில், இந்தச் சோசியல் மீடியா சர்ச்சை ஆர்.ஜே. பாலாஜி தரப்பிற்குப் புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
#RJBalaji #Ilaiyaraaja #KaruppuMovie #CopyrightControversy #BreakingNews #May18 #IntellectualProperty #CinemaCopyright #IsaignaniIlaiyaraaja #KaruppuMovieControversy #RJBalajiFilmmaking #TamilCinema #TrendingX #RemoveTheScene #ArtistsRights #VijayAsCM #TVK_Government #ThalapathyVijay #TamilNews #CM_Vijay_Official_“`