சென்னை:
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற தவெக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி முதலமைச்சர் விஜய் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கூட்ட நெரிசலும் பலியும்:
கடந்த 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தற்போதைய முதலமைச்சர் விஜய் மக்கள் மத்தியில் பேசினார். அவரைக் காணும் ஆவலில் மக்கள் முண்டியடித்ததால் ஏற்பட்ட எதிர்பாராத கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது.
ஓராண்டு நிறைவு:
காலச் சுழற்சியில் இந்தக் கூட்ட நெரிசல் சம்பவம் நடைபெற்று இன்றுடன் ஓராண்டாகி விட்டது. ஆனால் அந்த நெரிசல் சம்பவம் கரூர் மக்கள் மற்றும் தமிழக மக்களின் மனதில் மறையாத வடுவாக மாறிப்போனது.
முதல்வர் விஜய் அஞ்சலி:
இந்தத் துயரச் சம்பவத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: “2025 செப்டம்பர் 27, என் வாழ்நாளில், நம் கரூர் சொந்தங்களின் வாழ்வில், நம் தமிழ்நாட்டு உறவுகளின் மனத்தில் ஆறாத ரணமாக, தீராத வலியாக நிகழ்ந்த நாள். சொல்ல முடியாத சோகத்தைச் சுமந்து நிற்கிறோம். நம் இதயத்தில் சுமந்த உறவுகளை இழந்து தவிக்கும் நமக்கு, ஆறுதலாகவும் ஆதரவாகவும் அரணாகவும் நாமே இருப்போம். நினைவில் வாழும் அனைத்து உறவுகளுக்கும் நம் இதய அஞ்சலி” என்று உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
#CMVijay #KarurStampede #TVK #TamilNadu #Karur #FirstAnniversary #BmNews #TamilNews #BreakingNewsTN #TamilNaduNews #LatestNews #TamilNewsLive