வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள ‘அர்னாப்’ புயல் தீவிரமடைந்து வருவதால், பல நாள் மீன்பிடிப் படகுகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறித்த புயல் இன்று (26) காலை 5.30 மணியளவில் வட அட்சரேகை 15.4° மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 88.9° ஆகிய ஆயத்தொலைவுகளுக்கு அருகில் நிலைகொண்டிருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புயல் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று மாலை தீவிர புயலாகவும், நாளை (27) மிகத் தீவிர புயலாகவும் வலுப்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 80 முதல் 100 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், பலத்த இடியுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும். மேலும், கடல் அலைகள் 3 முதல் 4 மீற்றர் உயரம் வரை எழக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.