மதுரை:
பிரதமர் மோடி பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அமர வைக்கப்பட்டது தவறான முன்னுதாரணம் என அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
தவறான முன்னுதாரணம்:
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “முதலமைச்சர் விஜய், பிரதமரிடம் தமிழ்நாட்டிற்கான முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். இத்தகைய அரசு நிகழ்ச்சிகளில் மக்கள் பிரதிநிதி அல்லாத கட்சி நிர்வாகியான நயினார் நாகேந்திரனை மேடையில் அமர வைத்திருப்பது தவறான முன்னுதாரணம்,” என்றார்.
பாஜக தலையீடு:
திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்துப் பேசிய அவர், “இதற்கு முன்பு மக்கள் அமைதியாகச் சமைத்துவிட்டு வந்தனர். பாஜக அரசியல் தலையீடு தொடங்கிய பிறகுதான் அங்கு மக்களின் நிம்மதி பாதிக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நீதிமன்றத்தை நாட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது,” எனக் குற்றம் சாட்டினார்.
#CTRNirmalKumar #NainarNagendran #BJP #TVK #TNPolitics #BmNews #TamilNews #BreakingNewsTN #TamilNaduNews #LatestNews #TamilNewsLive