எதிர்வரும் ஜனவரி மாதத்தில் அரச ஊழியர்களின் சம்பள உயர்வு மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மூன்று கட்டங்களாக அரச சேவையின் சம்பள அதிகரிப்புகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, எனினும் இன்னும் தீர்க்கப்பட வேண்டிய பெரிய அளவிலான பிரச்சினைகள் பல உள்ளதாகக் கூறினார்.
இது குறித்து ஜனாதிபதி மேலும் பேசுகையில்:
“எமக்கு ஒரு வலுவான அரச சேவை அவசியமாகும். எமது பொலிஸார், முப்படையினர் மற்றும் அரசாங்க அதிபர் முதல் அடிமட்ட ஊழியர்கள் வரை உள்ளடங்கிய ஒரு பலமிக்க அரச சேவை எமக்குத் தேவைப்படுகிறது. அதற்காகவே நாம் தற்போது பணியாற்றி வருகின்றோம். அரச சேவையிலுள்ள வெற்றிடங்களை நிரப்பும் வகையில், அதற்குரிய புதிய நியமனங்களும் (இணைப்புகளும்) வழங்கப்படும்.”
மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (20) நடைபெற்ற, போதைப்பொருள் ஒழிப்புக்கான “நாடே ஒன்றாக” மட்டக்களப்பு மாவட்ட வேலைத்திட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.