நாட்டின் இருவேறு பகுதிகளில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, அநுராதபுரம் பகுதியில், ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று சனிக்கிழமை (21) காலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
வடமத்திய மாகாண குற்றப் புலனாய்வுப் பணியகத்தினருக்கு கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 255 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் மதவாச்சி பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, கல்கிஸ்ஸை – வில்லியம் பிளேஸ் பகுதியில், ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று சனிக்கிழமை (21) மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
கல்கிஸ்ஸை குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் குழுவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது சந்தேகநபரிடமிருந்து 110 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் ரத்மலானை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.