‘ஹாய்’ – நாங்​கள் நினைத்த நோக்​கம் நிறைவேறிய திருப்தி கிடைத்துவிட்டது – நடிகர் கவின்

நயன்தாரா, கவின், பாக்​ய​ராஜ், பிரபு, ராதிகா சரத்​கு​மார், விடிவி கணேஷ் உள்​ளிட்ட பலர் நடித்​துள்ள படம், ‘ஹாய்’. விஷ்ணு எடவன் இயக்​கி​யுள்ள இந்​தப் படத்தை ஜீ ஸ்டூடியோஸ், ரவுடி பிக்சர்​ஸ்​, செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ இணைந்து தயாரித்துள்ளன. ஆக. 28-ம் தேதி வெளி​யான இப்​படம் வரவேற்பைப் பெற்​றதை அடுத்​து, படக்​குழு​வினர் செய்தியாளர்களைச் சந்​தித்​தனர்.

அப்​போது, கவின் பேசும்​போது, ‘‘இந்​தப் படத்​துக்கு கிடைத்த ஆதரவு ஆச்​சரிய​மும் மகிழ்ச்​சி​யும் கலந்த உணர்​வைத் தந்துள்ளது. திரையரங்​கு​களில் ரசிகர்​கள் சிரித்​து, மகிழ்ந்​து, சில காட்​சிகளில் உணர்ச்​சிவசப்​பட்டு ரசிப்​ப​தைப் பார்க்​கும்​போது, நாங்​கள் நினைத்த நோக்​கம் நிறைவேறிய திருப்தி கிடைக்​கிறது. குடும்​பத்​துடன் ஒன்​றாக அமர்ந்​து, கவலைகளை மறந்து ரசிக்க வேண்​டும் என்ற எண்​ணத்​தில்​தான் இந்​தப் படத்தை உருவாக்கினோம்.

நான் எப்​போதும் இலக்கை அடைவதை​விட, அந்த இலக்கை நோக்கிய பயணம்​தான் முக்​கி​யம் என்று நம்​புவேன். ஒரு படம் வெற்றி பெறுகிற​தா, தோல்வி அடைகிறதா என்​பது ஒரு கட்​டம் மட்​டுமே. ஆனால், அந்​தப் பயணத்​தில் நாம் சந்​திக்​கும் மனிதர்​கள், நமக்​காக நிற்​பவர்​கள், நமக்கு ஆதர​வாக இருப்​பவர்​கள்​தான் வாழ்க்கை முழு​வதும் நம்​முடன் வரும் உண்​மை​யான பலம். அந்த வகை​யில் ‘ஹாய்’ படத்​தின் பயணம் எனக்கு அழகான அனுபவம்.

ஹாய் கதையைக் கேட்​டதும் ஒவ்​வொரு கதா​பாத்​திரத்​துக்​கும் இயக்​குநர் நினைத்த நடிகர்​களே நடிக்க வேண்​டும் என்று சொன்னேன். ராதிகா மேடம், பிரபு சார், சுஹாசினி மேடம், பாக்யராஜ் சார் என ஒவ்​வொரு​வரை​யும் தாண்டி வேறு யாரை​யும் அந்​தக் கதா​பாத்​திரங்​களில் கற்​பனை செய்ய முடிய​வில்​லை. இன்று அந்​தக் குழு​வினர் அனை​வரும் ஒன்​றாக அமர்ந்து இந்​தப் படத்​தின் வெற்​றியைப் பகிர்ந்து கொள்​வதைப் பார்க்​கும்​போது மகிழ்ச்​சி​யாக இருக்​கிறது” என்​றார்.

dailythanthi_2026-09-12_o3yec9f7_Chennai-mayor

“என் தலைவரைச் சீண்டினால் யாராக இருந்தாலும் விடமாட்டோம்!” – முதலமைச்சர் விஜய்க்கு மேயர் பிரியா ஆவேச எச்சரிக்கை

September 12, 2026

சென்னை: சட்டப்பேரவையில் மிசா சட்டம் மற்றும் மு.க. ஸ்டாலின் குறித்து முதலமைச்சர் விஜய் பேசியதைக் கண்டித்து, சென்னையில் நடைபெற்ற திமுக

1693_12_3_2021_19_53_17_1_MALLAI_SATHYA_MDMK_MADURANTAGAM

இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு: திராவிட வெற்றிக் கழகத் தலைவர் மல்லை சத்யா அறிவிப்பு!

September 12, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவளிப்பதாகத் திராவிட வெற்றிக் கழகத்தின் தலைவர் மல்லை சத்யா

13

“ப்யூஸ் போன தவெக அரசு”: மின்வெட்டு மற்றும் ஆவின் பால் விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் கடும் சாடல்!

September 12, 2026

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் பால் தட்டுப்பாடு உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல், மக்களைத்

vanniyarasu (1)

“சமூகநீதி குறித்துத் திருமாவளவனுக்குப் பாடம் எடுக்க யாருக்கும் தகுதி இல்லை” – அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

September 12, 2026

சென்னை: சமூகநீதி விவகாரங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்குப் பாடம் எடுக்க எவருக்கும் தகுதி இல்லை எனச்

1200-675-27618532-thumbnail-16x9-kovai-bus

கோவையில் அதிர்ச்சி: அரசுப் பேருந்தின் தானியங்கி கதவில் சிக்கிய மூதாட்டி – ரத்தம் வழிந்ததால் பயணிகள் கொந்தளிப்பு!

September 12, 2026

கோயம்புத்தூர்: கோவையில் பயணிகள் முழுமையாக ஏறுவதற்குள் அரசுப் பேருந்தின் தானியங்கி கதவு திடீரென மூடப்பட்டதில், மூதாட்டி ஒருவரின் முகம் கதவில்

1200-675-26640765-thumbnail-16x9-shanmugam (1)

இடைத்தேர்தலில் சிபிஎம் யாருக்கு ஆதரவு? நாளை திருச்சியில் முடிவு – பெ.சண்முகம்!

September 12, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து நாளை திருச்சியில்

27617897_a

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்: தமிழில் குடமுழுக்கு நடத்தக் கோரிப் போராட்டம் – 50-க்கும் மேற்பட்டோர் கைது!

September 12, 2026

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கை நீதிமன்ற உத்தரவின்படி தமிழிலும் சமமாக நடத்த வலியுறுத்தி, தடையை மீறிப் போராட்டத்தில்

ctr-2025-12-22-14-41-49

தமிழகத்தில் திடீர் மின்வெட்டுக்கு என்ன காரணம்? – மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்!

September 12, 2026

சென்னை: தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் ஏற்பட்டு வரும் தொடர் மின்தடைக்கான காரணங்களை விளக்கி மின்துறை

1291252

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகமா? – ‘துக்ளக் தர்பார்’ முடிவைக் கைவிடச் சீமான் கடும் கண்டனம்!

September 12, 2026

சென்னை: ரூ. 1,200 கோடியில் சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவைத் தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட

solomon-pappaiah

பட்டிமன்ற பிதாமகனின் சகாப்தம் நிறைவு: முழு அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!

September 12, 2026

மதுரை: மறைந்த மூத்த தமிழறிஞரும், புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் (90) உடல், மதுரை தத்தனேரி மின்

minister-vinoth (1)

ஆய்வுக் கூட்டத்துக்குச் செல்லும் வழியில் மனிதநேயம்: விபத்தில் சிக்கியவர்களை மீட்ட அமைச்சர் வினோத்!

September 12, 2026

கும்பகோணம்: கும்பகோணம் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடியவர்களுக்கு, அவ்வழியாகச் சென்ற

9712_1_9_2026_12_31_11_2__DSC4468

திருச்சி முக்கியக் கோயில்களில் செல்போன் பாதுகாப்புக்கான கட்டணம் ரத்து: பக்தர்களுக்கு இலவச வசதி!

September 12, 2026

திருச்சி: திருச்சியில் உள்ள 5 பிரதான கோயில்களில் பக்தர்களின் செல்போன்களைப் பாதுகாப்பு அறையில் வைப்பதற்காக வசூலிக்கப்பட்டு வந்த கட்டண முறை