ஸ்கார்பரோ வீதிச் ரேஸ் விபத்து: தப்பியோடிய லம்போகினி ரக காரின் சாரதி கைது

ஸ்கார்பரோவில் (Scarborough) இரண்டு நபர்கள் படுகாயமடையக் காரணமான வீதிச் ரேஸ் (Street racing) விபத்து தொடர்பாக ஒரு நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாரின் தகவலின்படி, கடந்த ஜூலை 17 ஆம் திகதி காலை 9:30 மணியளவில், மீடோவேல் வீதிக்கு (Meadowvale Road) அருகில் உள்ள ‘ஹைவே 2A’ பாதையில் கிழக்கு நோக்கிப் பச்சை நிற லம்போகினி (Lamborghini) எஸ்.யூ.வி மற்றும் வெள்ளை நிற மெர்சிடீஸ் (Mercedes) ஈ-கிளாஸ் கார் ஆகிய இரண்டும் அதிவேகமாகப் பந்தயத்தில் ஈடுபட்டுள்ளன.

ஒரு கட்டத்தில், மெர்சிடீஸ் கார் கட்டுப்பாட்டை இழந்து, வீதியில் சென்ற மூன்றாவது வாகனமான வெள்ளை நிற போர்ட் எஃப்-150 (Ford F-150) ரக வாகனம் மீது மோதியது. பின்னர் அந்த மெர்சிடீஸ் கார் பாதையை விட்டு விலகி அருகிலிருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தைத் தொடர்ந்து லம்போகினி காரை ஓட்டி வந்தவர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிவிட்டதாகப் புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் போர்ட் வாகனத்தில் பயணித்த 44 வயது ஆண் மற்றும் 11 மாத ஆண் குழந்தை ஆகிய இருவரும் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதேவேளை, மெர்சிடீஸ் காரை ஓட்டிச் சென்ற 15 வயது சிறுவன் மற்றும் அதில் பயணித்த 24 வயது ஆண் ஆகிய இருவரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணைகளைத் தொடர்ந்து விபத்துடன் தொடர்புடைய லம்போகினி காரின் சாரதியை பொலிஸார் அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் ரொறன்ரோவைச் சேர்ந்த அகில் கார்டன் ஹேவுட் (Akil Gordon Heywood – 42) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் மீது ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்தி உடல் காயங்களை ஏற்படுத்தியமை, விபத்து நடந்த இடத்தில் நிறுத்தாமல் சென்றமை மற்றும் ஆபத்தான பந்தய சாகசத்தில் ஈடுபட்டமை (Stunt driving) உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

விபத்தில் படுகாயமடைந்த இருவரின் தற்போதைய நிலை குறித்தோ அல்லது மேலதிகக் குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளதா என்பது குறித்தோ பொலிஸார் கூடுதல் விவரங்களை வெளியிடவில்லை.

Sajith-Premadasa-2 (1)

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும்  

October 10, 2026

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும். இச்சம்பவத்தினால் அநீதிக்குள்ளான தமிழ் சமூகத்திடம்

trum

நோபல் பரிசுக்கான அத்தனை தகுதியும் தனக்கு இருப்பதாக ட்ரம்ப் கருத்து

October 10, 2026

“அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தான் 2026-ம் ஆண்டுக்கான நோபல் அமைதி பரிசைப் பெறுவதற்கான அத்தனை தகுதிகளும் உள்ளது. ஆனால்

WhatsApp Image 2026-10-06 at 23.09.24

Majestic Asian உணவுத் திருவிழா!

October 10, 2026

Scarborough-வில் இன்று தொடக்கம் நடைபெறவுள்ள Majestic Asian Food Festival-இல் மறக்க முடியாத உணவுத் திருவிழாவில் கலந்து மகிழ்ந்து களிப்பாகக்

1200-675-27836231-thumbnail-16x9-vaiko

“கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உறுதிப்படுத்திய இடைத்தேர்தல் முடிவு!” – வைகோ அதிரடி!

October 10, 2026

சென்னை: தமிழகத்தில் கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதை தவெகவின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

1200-675-27342147-thumbnail-16x9-anbumani

“அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகலா? ‘அரசியலில் எதுவேணா நடக்கலாம்’” – பா.ம.க அன்புமணி ராமதாஸ் சூசகம்!

October 10, 2026

கோயம்புத்தூர்: பாமக கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் பாமக தலைவர் அன்புமணி

anojan

அனோஜன் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பு

October 10, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் தொடர்பான தேவையற்ற கருத்து பரிமாற்றங்கள் தொடர்பில் கல்முனை தலைமையகப்

can

கனடாவைச் சேர்ந்த பாட்டி புதிய உலக சாதனை

October 10, 2026

கனடாவைச் சேர்ந்த 61 வயது வீராங்கனை டோனாஜீன் வைல்ட் (DonnaJean Wilde), அமெரிக்காவின் உடாவில் நடைபெற்ற உலக சீனியர் விளையாட்டுப்

cyb

போலி சமூக ஊடக கணக்குகள் மீது கடும் நடவடிக்கை

October 10, 2026

தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் போலியான முகநூல் (Facebook) கணக்குகளைத் தயாரித்து, சமூக வலைத்தளங்கள் ஊடாக இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும்

rus

உக்ரைனின் எதிர்ப்புக்கு மத்தியில் ரஷ்யாவிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்ய அமெரிக்கா முடிவு!

October 10, 2026

அமெரிக்காவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் டீசல் கொள்முதல் செய்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி

sau

ஹவுதி இலக்குகள் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்

October 10, 2026

மெக்கா ஒப்​பந்​தத்​தின்​படி ஏமனில் உள்ள ஹவுதி இலக்​கு​களை குறி​வைத்து பாகிஸ்தான் போர் விமானங்கள் தாக்​குதல் நடத்​தி​ய​தாக செய்​தி​கள் வெளியாகி உள்​ளன.

bud_AU

மெல்பேர்ண் விஹாரையில் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை; இலங்கைப் பௌத்த துறவிக்கு 13 ஆண்டுகள் சிறை

October 10, 2026

மெல்பேர்ண் நகரில் உள்ள பௌத்த விஹாரை ஒன்றில் 6 இளம் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை இழைத்த குற்றத்திற்காக, இலங்கையைச் சேர்ந்த

is

இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேல் அரசின் வீரதீர விருது

October 10, 2026

விமான கடத்​தலை தடுத்த இந்திய பைலட் ஸ்மித் மச்​சா​ருக்கு உலகம் முழு​வ​தி​லும் இருந்து பாராட்​டுக்​கள் குவிந்து வரு​கின்​றன. இந்​நிலை​யில் இஸ்ரேல்