சென்னை:
தமிழக அரசு வெளியிட்ட நிதிநிலை வெள்ளை அறிக்கைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தவெக அரசு தனது நிர்வாகத் தோல்விகளை மறைக்கவே இந்த வெள்ளை அறிக்கையைத் திரையாகப் பயன்படுத்துவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். தனது எக்ஸ் தளத்தில் இது குறித்துப் பதிவிட்டுள்ள அவர், ஜூன் 18-ஆம் தேதி சட்டமன்றக் கூட்டம் கூடவுள்ள நிலையில், ஏன் இவ்வளவு அவசரமாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தவெக அரசின் செயல்பாடுகள் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள வெறுப்பையும், மாநிலத்தில் தற்போது நிலவும் சட்ட ஒழுங்கு சீர்கேட்டையும் திசைதிருப்பவே இந்த நாடகம் அரங்கேற்றப்படுவதாக ஜெயக்குமார் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், திமுக-வின் தவறுகளுக்குள் ஒளிந்து கொள்வதை நிறுத்திவிட்டு, நிதிச் சுமையைச் சரிசெய்யத் தவெக அரசிடம் உள்ள மாற்றுத் திட்டங்கள் என்ன? என்று அவர் கேட்டுள்ளார். “வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல், அதை மறைப்பதற்காகவே இந்த வெற்று அறிக்கையை வெளியிட்டுள்ளீர்கள். ஆச்சரியக்குறினு சொல்லிக்கிற உங்கள் செயல்பாடுகள் எல்லாம் இன்று கேள்விக்குறியாகி விட்டன” என்று அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
#Jayakumar #ADMK #TVK #Vijay #ThalapathyVijay #TvkGovernment #WhitePaper #TamilNadu #TamilNews #BMNews #PoliticalUpdate #BreakingNewsTN #SofaModelGovernment #Politics2026 #LawAndOrder #GovernmentFailure #TamilNaduNews #PoliticalAttack #Governance #Economy2026 #VijayGovernment #Transparency #TamilPolitics #PoliticalNews