ஷெடியாக் (Shediac) RCMP பொலிஸாரால் தேடப்பட்டு வந்த 28 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜேக்கப் ராண்டல் டேனியல் முர்ரே (Jacob Randal Daniel Murray) என்பவரைக் கண்டுபிடிப்பதற்குப் பொதுமக்களின் உதவியைக் கோரி RCMP திங்கள்கிழமை செய்தி வெளியீடு ஒன்றை வெளியிட்டு இருந்தது.
வீடு புகுந்து திருடிய குற்றத்துக்காக முர்ரே தேடப்பட்டு வந்ததாகவும், அவர் ஷெடியாக் அல்லது மொன்க்டன் (Moncton) பகுதிகளில் இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.
RCMP வெளியிட்ட புதுப்பிக்கப்பட்ட செய்திக் குறிப்பில், அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரைக் கண்டுபிடிக்க உதவியதற்காகப் பொதுமக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளது.