வினாத்தாள் மொழிபெயர்ப்புப் பிழைகளுக்கு முற்றுப்புள்ளி

க.பொ.த. உயர்தரப் பரீட்சைகளில் கடந்த காலங்களைப் போன்ற தமிழ் மொழிமூல வினாத்தாள்களில் மொழிபெயர்ப்புப் பிழைகள் இனி ஏற்படாதவாறு உரிய கவனம் செலுத்தப்பட்டு வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கல்வி மற்றும் உயர் கல்விப் பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது, இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ப. சத்தியலிங்கம் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த சத்தியலிங்கம் எம்.பி., உயர்தரப் பரீட்சையின் உயிரியல் பாட வினாத்தாளில் தொடர்ச்சியாகப் பல ஆண்டுகளாக ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மாற்றப்படும் போது பெருமளவு மொழிபெயர்ப்புப் பிழைகள் ஏற்படுவதாகவும், இதனால் மாணவர்கள் கனிசமான புள்ளிகளை இழந்து எதிர்காலத்தை இழக்கும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்தார். உதாரணமாக 2025ஆம் ஆண்டு உயிரியல் வினாத்தாளில் மாத்திரம் 27 கேள்விகளில் பிழைகள் காணப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார். மேலும், இம்முறை உயர்தரப் பரீட்சையில் பாளி மொழியும் சித்திரப் பாடமும் ஒரே நாளில், ஒரே நேரத்தில் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளதால் இரண்டு பாடங்களுக்கும் தோற்றும் மாணவர்கள் பாதிக்கப்படுவர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்குப் பதிலளித்த பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன, உயர்தரப் பரீட்சை உட்பட ஏனைய பரீட்சைகளிலும் வினாத்தாள்களின் மொழிபெயர்ப்பில் பிரச்சினைகள் இருப்பது வடக்கில் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்தார். இது தொடர்பாகப் பரீட்சைகள் திணைக்களத்துடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும், இம்முறை முறையான கவனம் செலுத்தப்பட்டு வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் உறுதியளித்தார். மேலும், பாளி மற்றும் சித்திரப் பாடங்கள் ஒரே நேரத்தில் அமைந்திருப்பது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், பாளி மொழிப் பாடத்திற்குத் தோற்றும் பிக்குகளில் எவரும் சித்திரப் பாடத்திற்குத் தோற்றுவதில்லை எனவும், ஒரே ஒரு பிக்கு மட்டுமே சித்திரப் பாடத்தில் தோற்றுவதால் அங்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படாது எனவும் விளக்கமளித்தார்.

ac

கோர விபத்தில் இளம் தம்பதியினர் பலி

October 10, 2026

கம்பஹா – கிரிந்திவலை 231 ஆம் இலக்க பேருந்து பாதையில், ஹேனேகம சந்தியில் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர்

Arju

பிரபாகரனால் முடியாததை நீங்கள் செய்கிறீர்கள்; ஷிராந்தியை உள்ளே போட்டதற்காகத் தமிழ் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்

October 10, 2026

மஹிந்த ராஜபக்‌ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்‌ஷவைச் சிறையில் அடைத்தமைக்காகத் தமிழ் மக்கள் மகிழ்ச்சியடைகின்றனர்; ஆனால், நான் மகிழ்ச்சியடைய மாட்டேன். எமது

thaya

தமிழ் மக்களின் பொருளாதாரத்தை அழிக்கும் நோக்கத்தில்தான் கறுப்பு ஜூலை கலவரம் தோற்றுவிக்கப்பட்டது!

October 10, 2026

தமிழ் மக்களின் பொருளாதாரத்தை அழிக்கும் நோக்கத்தில்தான் 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை கலவரம் திட்டமிட்டுத் தோற்றுவிக்கப்பட்டது. ஆனால், இறுதியில்

v

பதுளை விபத்தில் விமானப்படை அதிகாரி உயிரிழப்பு

October 10, 2026

நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், இலங்கை விமானப்படை அதிகாரி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இலங்கை விமானப்படையின் பயிற்சிப்

3

“அவதூறு பேசிய மிருக குணப் பேச்சுக்கு மக்கள் தகுந்த பதிலடி!” – இடைத்தேர்தல் வெற்றி குறித்து முதல்வர் விஜய் அறிக்கை!

October 9, 2026

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, அவதூறு பேசிய மிருக குணப் பேச்சுக்கு மக்கள் தகுந்த பதிலடியைத் தந்துள்ளதாக

2

“கொத்து புரோட்டா போட்டுவிட்டார்கள் மக்கள்!” – தவெக வெற்றியை விமர்சித்து மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!

October 9, 2026

சென்னை: ஐந்து நிமிடம் பேசினாலே கொத்து புரோட்டா போட்டுவிடுவார் என்று சொல்லப்பட்டவரை நான்கு நாட்கள் கொளுத்தும் வெயிலில் அலைய வைத்துக்

dailythanthi_2026-10-09_tw4n5oic_Untitled-6

“இடைத்தேர்தல் மாபெரும் வெற்றி!” – அமைச்சர்களுடன் வைரல் சைகை காட்டி முதலமைச்சர் விஜய் உற்சாகக் கொண்டாட்டம்!

October 9, 2026

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற்ற மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வெற்றியை முதலமைச்சர் விஜய் தனது அமைச்சர்களுடன் வைரல்

556

மதுபானசாலை அனுமதிக்கு எதிராக வலி. வடக்கில் போராட்டம்

October 9, 2026

மதுபானசாலைகளற்ற பிரதேசமாகக் காணப்படும் வலி. வடக்கில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்படுவதை எதிர்த்து, பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி

brand

பிராட் பிராட்ஃபோர்ட் திட்டத்துக்கு ஒலிவியா சௌ மற்றும் போக்குவரத்து ஆர்வலர்கள் எதிர்ப்பு?

October 9, 2026

ஸ்கார்பரோவின் 12 கி.மீ பிரத்யேக பேருந்து தடங்களை நீக்க பிராட் பிராட்ஃபோர்ட் திட்டம்: ஒலிவியா சௌ மற்றும் போக்குவரத்து ஆர்வலர்கள்

dailythanthi_2026-10-09_2ehwx7wk_shivan (1)

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் த.வெ.க. அபார வெற்றி!” – 4 மாத ஆட்சிக்குக் கிடைத்த வெற்றி என அமைச்சர்கள் பெருமிதம்!

October 9, 2026

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்களை வீழ்த்தி த.வெ.க. வேட்பாளர்கள் அபார வெற்றி பெற்றுள்ளனர்.

images (1)

நவநீதம்பிள்ளைக்கு நோபல் பரிசு: போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்

October 9, 2026

2026ம் ஆண்டிற்கான சமாதானத்திற்கான நோபல் பரிசு மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டத்தினை பாதுகாப்பதற்காக தளர்வின்றி போராடியமைக்காக ஐக்கியநாடுகள் முன்னாள்

hindutamil_import_hindu_uploads_news_2023_07_22_xlarge_1061734

“மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவு!” – வெளியே தெரிந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நந்தி சிலை!

October 9, 2026

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவாக உள்ளதால் ஜலகண்டேஸ்வரர் கோயில் நந்தி சிலை வெளியே தெரியத் தொடங்கியுள்ளது.