புதிய மெகசின் சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதியின் பின்னணி

பொரள்ளை புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்று (06) நள்ளிரவு இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாகக் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 10 கைதிகள் காயமடைந்துள்ளனர். வெளியில் இருந்து சிலர் சிறைச்சாலை வளாகத்திற்குள் எறிந்த ஹெரோயின் போதைப்பொருள் அடங்கிய பொதி ஒன்றைச் சிறைச்சாலை அதிகாரிகள் பொறுப்பேற்ற சம்பவத்தை மையமாகக் கொண்டே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. அச்சமயத்தில் ஒரு குழுவினர் சிறைச்சாலை அதிகாரிகளை அச்சுறுத்தியதுடன், பின்னர் சுமார் 45 கைதிகள் சிறைக்கதவை உடைத்துக்கொண்டு வெளியே வந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் […]
36 மணிநேரத்தில் ஏற்படப்போகும் மாற்றம்

அடுத்த 36 மணி நேரத்தில் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், அப்பகுதிகளில் மேகமூட்டமான வானிலை நிலவும் என்றும், சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மி.மீ வரையான பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமத்திய, சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேல் […]
பாராளுமன்ற உறுப்பினர் சம்பளம் அதிகரிப்பு – எம்.பி.அர்ச்சுனா

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தனது மாதாந்த சம்பளப் பட்டியலை உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அர்ச்சுனா வெளியிட்டுள்ள சம்பளப் பட்டியலின்படி, அவருக்கு வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பளப் பட்டியலுடன் பேஸ்புக்கில் பதிவொன்றையும் வெளியிட்டுள்ள அர்ச்சுனா, இந்த அதிகரிப்பு தொடர்பாக பொதுமக்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதே தொகையை 159 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பெருக்கி பெலவத்தையில் உள்ள கணக்குகளுக்கு பணம் செலுத்தப்படுவதாக அவர் குற்றம் […]
சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றம்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றங்களை வழங்க பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சம்பத் குமார சிறப்புப் பிரிவில் இருந்து கிழக்கு மாகாணத்திற்கும், தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராகக் கடமையாற்றிய கித்சிறி ஜயலத் சப்ரகமுவ மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் அதிபராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் அதிபர் வருண ஜயசுந்தர சிறுவர் மற்றும் […]
குருவிட்ட மற்றும் பல்லன்சேன சிறை அமைதியின்மை குறித்து விசாரணை

குருவிட்ட சிறைச்சாலை மற்றும் பல்லன்சேன திறந்தவெளி சிறை முகாமில் ஏற்பட்ட அமைதியின்மை குறித்து விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சம்பவம் குறித்து தெளிவுபடுத்திய போதே அத்திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. குருவிட்ட சிறைச்சாலை மற்றும் பல்லன்சேன திறந்தவெளி சிறை முகாமில் இன்று (07) ஏற்பட்ட கைதிகளின் அமைதியின்மை, தற்போது சிறைச்சாலை அதிகாரிகளால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக இலங்கை பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் உதவியும் பெறப்பட்டதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, குறித்த சிறைச்சாலைகளின் பாதுகாப்பிற்காக […]
நோவா ஸ்கோடியாவில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகக் காட்சிப் பொருட்கள் வைத்திருந்த நபர் மீது குற்றம்சாட்டு!

கனடாவின் நோவா ஸ்கோடியா (N.S.) மாநிலத்தின் ஸ்பிரிங்ஹில் (Springhill) பகுதியைச் சேர்ந்த 37 வயது நபர் ஒருவர் மீது சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல் தொடர்பான காட்சிப் பொருட்களைப் (CSAEM) பகிர்ந்தமை மற்றும் வைத்திருந்தமைக்காகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் 2 ஆம் திகதி, தனது தளத்தின் ஊடாகச் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகக் காட்சிப் பொருட்கள் பரிமாறப்பட்டதாக சமூக வலைத்தள நிறுவனம் ஒன்று நோவா ஸ்கோடியா பொலிஸாரின் ‘மாகாண இணையச் சிறுவர் சுரண்டல் தடுப்புப் பிரிவுக்கு’ […]
“கால்நடை மருத்துவப் படிப்பிற்கு நீட் தேர்வு வேண்டாம்!” – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி கடிதம்!

சென்னை கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு ‘நீட்’ (NEET) தேர்வை அறிமுகப்படுத்துவது தமிழக மாணவர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இந்த முடிவை உடனடியாகக் கைவிடக் கோரிப் பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் மிக முக்கியமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்தியக் கால்நடை மருத்துவ கவுன்சில் (VCI), 2026-27 ஆம் கல்வியாண்டு முதல் அனைத்து கால்நடை மருத்துவக் கல்லூரிகளிலும் பொது நுழைவுத் தேர்வு அல்லது நீட் தேர்வு தரவரிசை அடிப்படையில் மையப்படுத்தப்பட்ட […]
முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: திமுக எம்.எல்.ஏ மீது பாய்கிறதா உரிமை மீறல் நடவடிக்கை?
சென்னை தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யைப் பொதுவெளியில் அவதூறாகப் பேசிய விவகாரத்தில், திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆளுங்கட்சி அமைச்சர்கள் சபாநாயகரிடம் கடிதம் அளித்துள்ளனர். இது தொடர்பாக அவையின் உரிமை மீறல் குழு அமைக்கப்பட்டு அதிரடி முடிவு எடுக்கப்படும் எனச் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று நடந்த இந்த விவாதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பட்ஜெட் விவாதமும்.. வெடித்த சர்ச்சையும்: சட்டப்பேரவையில் இன்று நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்றுப் […]
பழனி கோயில் நில மோசடி விவகாரம்: 100 கோடி நிலத்தை விற்ற சார்பதிவாளர் மருத்துவமனையிலேயே நீதிமன்றக் காவல்!

திண்டுக்கல் உலகப் புகழ்பெற்ற பழனி தண்டாயுதபாணி சாமி கோயிலுக்குச் சொந்தமான மலை அடிவாரத்தில் உள்ள சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 1.4 ஏக்கர் நிலத்தை வெறும் 2 கோடி ரூபாய்க்கு முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்த மெகா மோசடி விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனை சிபிசிஐடி போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இந்த மாபெரும் நில மோசடி தொடர்பாகத் திண்டுக்கல் சிபிசிஐடி காவல்துறையினர், […]
தவெக அரசின் எம்.பி.க்கள் கூட்டத்தில் திமுக பங்கேற்குமா? “பிறக்காத குழந்தைக்குப் பெயர் வைப்பதா?” – ஆர்.எஸ்.பாரதி அதிரடி!
சென்னை தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக முதலமைச்சர் ஜோசப் விஜய் நாளை (ஆகஸ்ட் 8) கூட்டியுள்ள எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டத்தில் திமுக பங்கேற்குமா என்பது குறித்து, கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் அண்ணா அறிவாலயத்தில் அதிரடியான விளக்கங்களை அளித்துள்ளனர். பிறக்காத குழந்தைக்குப் பெயர் வைப்பதா? செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.எஸ்.பாரதி, “தொகுதி மறுசீரமைப்பு மசோதா இன்னும் நாடாளுமன்றத்திற்கே வரவில்லை. இதற்கான கால அவகாசமும் வரையறுக்கப்படவில்லை. தொகுதி மறுசீரமைப்பு என்பது பிறக்காத குழந்தை; குழந்தை பிறந்த […]