உதயநிதி கைது ஒரு திட்டமிட்ட நாடகம்! “திராவிட மாடல் 2.0 தான் தவெக ஆட்சி” – அர்ஜுன் சம்பத் பகிரங்கக் குற்றச்சாட்டு!

வேலூர் தவெக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் தங்களுக்குள் பேசி வைத்துக்கொண்டுதான் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்துள்ளனர் என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் மிகக் கடுமையான பகிரங்கக் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்! வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் பல்வேறு ஆன்மீக நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த அர்ஜுன் சம்பத், அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்து தவெக அரசு மீது சரமாரியான விமர்சனங்களை முன்வைத்தார். அவரது பேட்டியின் முக்கிய விவரங்கள்: பட்ஜெட் பெரும் […]
“திட்டங்களில் இருந்து பெயரை நீக்கலாம்; ஆனால் வரலாற்றை மாற்ற முடியாது!” – கலைஞர் நினைவு நாளில் கனிமொழி எம்.பி. அதிரடிப் பதிவு!

சென்னை தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், திமுகவின் மறைந்த முன்னாள் தலைவருமான முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் நினைவு நாள் இன்று திமுக கட்சித் தொண்டர்களால் தமிழகம் முழுவதும் மிகவும் உணர்வுப்பூர்வமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், தனது தந்தையின் நினைவு நாளையொட்டி திமுக எம்.பி. கனிமொழி தனது ‘எக்ஸ்’ (X) வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள நெகிழ்ச்சியான பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. வரலாற்றை மாற்ற முடியாது! தற்போதைய தவெக அரசால் பல்வேறு அரசுத் திட்டங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு […]
செம்மணியில் இன்று 507 என்புத் தொகுதிகள் அடையாளம்!

செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 46 ஆம் நாள் அகழ்வுப் பணிகள் இன்று வெள்ளிக்கிழமை (07.08.2026) முன்னெடுக்கப்பட்டன. இதுவரை நாளும் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளுக்கமைய இன்று 100 ஆவது நாளை எட்டியுள்ளது. இன்றைய தினம் மேலும் எட்டுப் புதிய மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட ஏழு மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன. இதன்மூலம் இதுவரை 507 மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன் 501 […]
கனடாவின் சாஸ்கடூனில் யூத தொழுகைக்கூடம் மீது தாக்குதல்!

கனடாவின் சாஸ்கடூன் (Saskatoon) நகரில் உள்ள ‘அகுதாஸ் இஸ்ரேல்’ யூத தொழுகைக்கூடம் (Agudas Israel Synagogue) மற்றும் அருகில் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்கள் மீது முட்டைகளை வீசித் தாக்குதல் நடத்திய சந்தேக நபரைச் சாஸ்கடூன் பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கடந்த சனிக்கிழமை காலை யூதர்களின் ‘ஷபாத்’ (Shabbat) சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தின் பின்னணி: வழிபாட்டுக்கு இடையூறு: முட்டை வீச்சுச் சம்பவத்தால் அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த சிறப்பு வழிபாடுகளுக்குத் தடங்கல் […]
மில்டன் பொழுதுபோக்குக் கடையில் $14,000 டாலர் பொருட்கள் திருட்டு: பிராம்ப்டன் நபர் கைது

கனடாவின் மில்டன் (Milton) நகரில் உள்ள பொழுதுபோக்குக் கடடாயன்றில் (Hobby shop) தொடர்ச்சியாக இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த நபர் ஒருவரை ஹால்டன் பிராந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவங்களில் சுமார் $14,000 டாலர் பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டிருந்தன. மில்டன், ‘மெயின் வீதி கிழக்கில்’ (621 Main Street East) அமைந்துள்ள ‘மில்டன் ஹாப்பீஸ்’ (Milton Hobbies) என்ற கடையில் நான்கு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கதவுகள் உடைக்கப்பட்டுத் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றன. இது தொடர்பாகக் […]
வோனில் உள்ள பொழுதுபோக்கு பூங்கா சவாரி உதவியாளர் சிறுமிக்கு பாலியல் தொல்லை: கைது!

கனடாவின் வோன் (Vaughan) நகரில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் சிறுமி ஒருவருக்குப் பாலியல் தொல்லை அளித்த குற்றச்சாட்டின் கீழ், பூங்காவின் சவாரி உதவியாளராகப் (Ride operator) பணியாற்றிய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இவரால் பாதிக்கப்பட்டவர்கள் வேறு யாரேனும் இருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். கடந்த மே 25 ஆம் திகதி, சிறுமி ஒருவர் தனது நண்பர்களுடன் பெயர் குறிப்பிடப்படாத அந்தப் பொழுதுபோக்கு பூங்காவிற்குச் சென்றுள்ளார். அங்கு அவர் சவாரிக்காகச் சென்றபோது, பாதுகாப்புச் பரிசோதனைகளை மேற்கொள்ளும் […]
3 முறை என்னாச்சு? உதயநிதியைக் குறிவைத்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா.. பதிலடி கொடுத்த கே.என்.நேரு! சட்டப்பேரவையில் அனல் விவாதம்!

சென்னை தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவிரி மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து காரசாரமாக நடைபெற்று வருகின்றன. மேகதாது அணை தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளை முன்வைத்து, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எழுப்பிய சரமாரி கேள்வியும், அதற்கு திமுக மூத்த தலைவர் கே.என்.நேரு அளித்த அதிரடிப் பதிலடியும் அவையில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது! அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் அதிரடி கேள்வி: சட்டப்பேரவையில் மேகதாது விவகாரம் குறித்துப் […]
“எனக்கு சீட் வாங்கித் தந்ததே அமைச்சர் ஆதவ் அர்ஜுனாதான்!” சட்டப்பேரவையில் ரகசியத்தை உடைத்த திமுக எம்.எல்.ஏ.. விழுந்து சிரித்த அமைச்சர்கள்!

சென்னை தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற விவாதத்தின் போது, ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கார்த்திகேயன் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குறித்துப் பேசிய சுவாரஸ்யமான சம்பவத்தால் ஒட்டுமொத்த அவையும் சிரிப்பலையில் மூழ்கியது! சட்டசபையில் இன்று விவாதத்தின் போது எழுந்து பேசிய திமுக எம்.எல்.ஏ. கார்த்திகேயன், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவைக் குறிப்பிட்டு, “எனக்கு நல்லா நெருக்கமானவர், மிகவும் அன்பானவர்” என நெகிழ்ச்சியுடன் பேசினார். அப்போது குறுக்கிட்ட அவையை வழிநடத்திய துணை சபாநாயகர், “அமைச்சரின் பெயரை நேரடியாகக் […]
தொகுதி மறுவரையறை விவகாரம்: முதலமைச்சர் விஜய் கூட்டிய எம்.பி.க்கள் கூட்டத்தில் திமுக பங்கேற்க வேண்டும்! திருமாவளவன் வலியுறுத்தல்!

சென்னை மத்திய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்றத் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் தாக்கங்கள் குறித்து விவாதிக்க, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் தமிழகத்தைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்களின் சிறப்புக் கலந்தாய்வுக் கூட்டம் நாளை (ஆகஸ்ட் 8) மாலை 3 மணிக்குச் சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்தில் நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பிதழ்கள் டெல்லி தமிழ்நாடு இல்லம் மூலமாக அனைத்து எம்.பி.க்களுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன. […]
சட்டப்பேரவையில் அனல் பறக்கும் விவாதம்! “ஸ்டாலின் எங்கே இருக்கிறார்?” – ரகுபதி கேள்விக்கு தவெக அமைச்சர்களின் அதிரடி பதிலடி!

சென்னை தவெக அரசின் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் இன்று சட்டப்பேரவையில் அனல் பறக்க நடைபெற்றது! திமுக எம்.எல்.ஏ. ரகுபதி எழுப்பிய சரமாரி கேள்விகளுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும், தவெக அமைச்சர்கள் சிறிதும் சளைக்காமல் கொடுத்த அதிரடிப் பதிலடிகள் பேரவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் பிரவீன் சக்கரவர்த்தி சர்ச்சை: விவாதத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய திமுக எம்.எல்.ஏ. ரகுபதி, “நிதி அமைச்சர் ஜெபமாலையோடும், வேளாண் அமைச்சர் திருப்பதி லட்டோடும் […]