செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 46 ஆம் நாள் அகழ்வுப் பணிகள் இன்று வெள்ளிக்கிழமை (07.08.2026) முன்னெடுக்கப்பட்டன. இதுவரை நாளும் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளுக்கமைய இன்று 100 ஆவது நாளை எட்டியுள்ளது.
இன்றைய தினம் மேலும் எட்டுப் புதிய மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட ஏழு மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன. இதன்மூலம் இதுவரை 507 மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன் 501 மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தின் பாதுகாப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இன்றைய அகழ்வுப் பணிகளின் போது மேலதிக சான்றுப் பொருட்களாக சிறுமியின் இரண்டு காப்புகள், ஒரு சட்டை ஊசி என்பனவும் மீட்கப்பட்டன.