சென்னை:
தமிழகத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை நிரூபிக்கத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தீவிரமாக முயன்று வரும் நிலையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சி தவெக-விற்கு ஆதரவு அளிக்கப்போவதில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது விஜய்யின் ஆட்சியமைக்கும் முயற்சியில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம். காதர் மொகிதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாபநாசம் மற்றும் வாணியம்பாடி ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள எங்களது இரண்டு எம்.எல்.ஏ-க்களும், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆளுநருக்கு விடுத்துள்ள வேண்டுகோளை ஏற்றுச் செயல்படுவார்கள். ஜனநாயக முறையிலான ஆட்சி அமைய ஆளுநர் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எங்களது உறுப்பினர்கள் துணை நிற்பார்கள்” எனத் தெரிவித்துள்ளார். தவெக-விற்கு ஐயுஎம்எல் ஆதரவு அளிப்பதாக முன்னர் வெளியான தகவல்களை மறுத்துள்ள அவர், தங்களது நிலைப்பாடு திமுக பக்கமே என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார். காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், ஐயுஎம்எல்-லின் இந்த விலகல், 118 என்ற மேஜிக் எண்ணைத் தொடுவதில் விஜய்க்குச் சவாலை ஏற்படுத்தியுள்ளது.
#IUML #KaderMohideen #Vijay #TVK #BreakingNews #May8 #TamilNaduPolitics #PoliticalUturn #MajorityTest #Stalin #DMKAlliance #ThalapathyVijay #VijayAsCM #ElectionResults2026 #TN_Assembly #NewGovernmentTN #MuslimLeague #PoliticalCrisis #TamilNews #VijayMakkalIyakkam_“`