விஜய் எங்கு போட்டியிட்டால் எனக்கென்ன? – கமல்ஹாசன்

தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவது குறித்து கமல் ஹாசன் அளித்த பதில் சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. ஆனால் விஜய் ரசிகர்களோ கமலை விளாசிக் கொண்டிருக்கிறார்கள்.

கமல் பதில்: அரசியல் கட்சி நடத்தி வரும் விஜய் வரும் ஏப்ரல் மாதம் நடக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். அவர் முதல் முறையாக போட்டியிடும் இந்த தேர்தலில் தவெக அமோக வெற்றி பெற்று முதல்வர் நாற்காலியில் அமர்வார் விஜய் என்று அவரின் ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இந்நிலையில் விமான நிலையத்திற்கு வந்த விண்வெளி நாயகன் கமல் ஹாசன் அங்கிருந்த செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதில் விஜய் பற்றிய கேள்விக்கு கமல் அளித்தது தான் தக்லைஃப் பதில் என சினிமா ரசிகர்கள் கூறுகிறார்கள்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகவிருக்கும் படத்தில் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் சேர்ந்து நடிப்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் அந்த பட வேலை எந்த நிலையில் இருக்கிறது என்று கேட்டதற்கு கமல் கூறியதாவது, தேர்தல் முடிந்த பிறகு தான் ஆரம்பிக்க வேண்டும். எனக்கு வேலை இருக்கு என்றார்.

தவெக தலைவர் விஜய் பெரம்பூரில் போட்டியிடுவதாக சொல்கிறார்.அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்று செய்தியாளர் ஒருவர் கேட்டார். நான் ஏன் அதை பார்த்துக் கொண்டிருக்கணும், எனக்கு வேலை உள்ளது. அதை நான் பார்த்துக்கிட்டு இருக்கிறதுக்கு என்றார்.

கமல் பதிலுக்கு வரவேற்பும், விமர்சனமும்: விஜய் எங்கு போட்டியிட்டால் எனக்கென்ன?. அதை பார்ப்பது தான் என் வேலையா என கேட்டுவிட்டார் கமல் ஹாசன். தன் நண்பர் ரஜினிகாந்தை தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா விமர்சித்ததை மனதில் வைத்து தான் பொளந்துகட்டிவிட்டார் கமல். நட்புனா சும்மாவா?. சினிமா லெஜண்டுகளின் ஆதரவு விஜய்க்கு இல்லை என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது என்று சினிமா ரசிகர்கள் பேசி வருகிறார்கள். இதுவே தலைவன் விமலிடம் கேள்வி கேட்டிருந்தால், விஜய் பெரம்பூரில் போட்டியிடுவதை எப்படி பார்க்கிறீங்களா, கண்ணால தான் பார்க்கிறேன் என கூறியிருப்பார் என சில ரசிகர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

உங்களுக்கு என்ன வேலை இருக்கிறது என்று எங்களுக்கு தெரியும். அண்ணனை பார்த்து பயந்துவிட்டீர்கள் கமல் என்கிறார்கள் விஜய் ரசிகர்கள். திமுக மிரட்டியதை அடுத்து பயந்து போய் அரசியலுக்கு வராமல் பின் வாங்கிவிட்டார் ரஜினிகாந்த். ஆனால் விஜய் அப்படி இல்லை. அவருக்கு அதிக மனவலிமை இருக்கிறது என்றார் ஆதவ் அர்ஜுனா.

அவரின் பேச்சுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் முதல் பலரும் கண்டனம் தெரிவித்தார்கள். தனக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும் என அறிக்கை வெளியிட்டார் ரஜினிகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த் தான் எனக்கு முதலில் முக்கியம் என்று விஜய் பற்றிய கேள்விக்கு அப்படி பதில் சொல்லிவிட்டார் கமல் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள். இதற்கிடையே மும்பையில் நடந்த அட்லி மனைவி ப்ரியாவின் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் விஜய்.

என்ன தான் தேர்தல் வேலை தலைக்கு மேல் இருந்தாலும் தனக்கு வெற்றிப் படங்களை கொடுத்த அட்லிக்காக மும்பை வரை சென்று வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அண்ணனின் மனசே மனசு என்று விஜய் ரசிகர்கள் பெருமையாக பேசி வருகிறார்கள். ப்ரியா அட்லி வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியிருக்கிறது.

Toronto-Election-1536x783

அக்டோபர் 26 நகராட்சித் தேர்தலில் கத்தோலிக்கர்கள் பங்கேற்க கர்தினால் லியோ அழைப்பு!

October 13, 2026

2026 அக்டோபர் 26 திங்கள்கிழமை நகராட்சித் தேர்தலை முன்னிட்டு, டொராண்டோ பேராயர் கர்தினால் பிராங்க் லியோ (Cardinal Frank Leo)

TORONTO ELE1

டொராண்டோ நகராட்சித் தேர்தலில் முன்கூட்டியே வாக்களிக்க சாதனை அளவிலான வாக்காளர்கள்

October 13, 2026

டொராண்டோவின் வரவிருக்கும் 2026 நகராட்சித் தேர்தலுக்கு முன்னதாக, கடந்த வாரம் நடைபெற்ற ஆறு நாள் முன்கூட்டிய வாக்குப்பதிவில் 2,20,000-க்கும் மேற்பட்ட

Mahinda-Rajapaksa

மோசமான நிலையில் மகிந்த ராஜபக்சவின் உடல்நிலை! அனைவரையும் பிரார்த்திக்குமாறு அழைப்பு

October 13, 2026

முன்னாள் ஜனாதிபதியின் உடல்நிலை முன்னரை விட மோசமான நிலையில் இருப்பதாக சீலரத்ன தேரர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த

Nalinda Jayatissa Cabinet Meet-790605

சிறையில் அடைக்கப்பட்ட பௌத்தமதகுருமாரின் காவியுடை விவகாரம் – சிறைச்சாலை அதிகாரிகள் தீர்மானிக்க முடியாது என்கின்றார் நளிந்த

October 13, 2026

குற்றச்செயல்களுக்காக சிறையில் அடைக்கப்பட்ட பௌத்தமதகுருமார் தொடர்ந்தும் காவியுடையை அணிந்திருக்கவேண்டுமா என்ற தீர்மானத்தை அவர்களின் பௌத்தமத பீடங்களே தீர்மானிக்கவேண்டும் என சிறைச்சாலை

Nalinda Jayatissa Cabinet Meet-790605

சிராந்தியின் உடல்நிலை- அமைச்சரவை பேச்சாளர் தெரிவிப்பது என்ன?

October 13, 2026

முன்னாள் முதல் பெண்மணி சிராந்தி ராஜபக்சவிற்கு ஆஞ்சியோகிராம்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்

Shiranthi-Rajapaksa 1

சிராந்திக்கு இதயசத்திரசிகிச்சையா? உடனடியாக உறுதிப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு

October 13, 2026

முன்னாள் முதல்பெண்மணி சிராந்திராஜபக்சவிற்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இதய சத்திரசிகிச்சை இடம்பெறுவதாகஅவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளதை உடனடியாக ஆராய்ந்து உறுதிப்படுத்துமாறு கொழும்பு

8

“ஆந்திரா: கனகதுர்கை அம்மன் கோவிலில் முதல்-அமைச்சர் விஜய் சாமி தரிசனம்!” – விஜயவாடாவில் சிறப்பான வரவேற்பு!

October 13, 2026

விஜயவாடா: தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு, முதல் முறையாக விஜய் ஆந்திர மாநிலம் சென்றுள்ளார். சிறப்பான வரவேற்பு: தனி விமானம்

7

“தவெக ஆட்சியில் பணவீக்கம், விலைவாசி உயர்வில் தமிழ்நாடு முதலிடம்” – மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!

October 13, 2026

சென்னை: தவெக ஆட்சி அமைந்த 4 மாதங்களில் பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளதாக திமுக தலைவர்

IMG_9407

பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல்!

October 13, 2026

மட்டக்களப்பில் 2008ஆம் ஆண்டு ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர்

IMG_9406

பெற்றோலிய எரிவாயுவை வழங்க அமைச்சரவை அனுமதி !

October 13, 2026

2027ஆம் ஆண்டுக்கான திரவப் பெற்றோலிய எரிவாயுவை (LPG) லிட்ரோ நிறுவனத்துக்கு விநியோகிப்பதற்கான ஒப்பந்தத்தை OQ Trading Limited நிறுவனத்துக்கு வழங்குவதற்கு

IMG_9405

குறிவைக்கப்படும் பெண்கள்; பொலிஸ் விசாரணையில் அம்பலமான அதிர்ச்சி

October 13, 2026

அம்பாறை மற்றும் உகன பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் இரண்டு பெண்களிடம் தங்கச் சங்கிலிகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய முக்கிய சந்தேக

IMG_9404

மகிழ்ச்சிச் செய்தி – நாளை வங்கிக் கணக்குகளில் பணம்!

October 13, 2026

அஸ்வெசும நலத்திட்டத்தின் கீழ் தகுதியுடைய பயனாளிகளுக்கான நிதியுதவிகளை நாளை (14) முதல் வங்கிக் கணக்குகள் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என