வடக்கு மீனவர்கள் இந்திய இழுவை மடி படகுகளால் தொடர்ந்தும் பாதிப்பு

உள்ளூர் இழுவைமடி மற்றும் எல்லை தாண்டிய இந்திய மீனவர்களின் ரோலர்களால் தொடர்ந்தும் வடக்கு மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருவதாக வடமாகாண மீனவ அமைப்பு பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.

அவர் நேற்று தனது இல்லத்தில் நாடாத்திய ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் சகல தடை செய்யப்பட்ட கடற்றொழில்களும் அதிகாரிகளால் கட்டுப்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்ற போதும் யாழ்ப்பாணத்தில் நீதியல் வளத்துறை மற்றும் கடற்றொழில் அமைச்சு அதிகாரிகள் சட்ட விரோத கடற்றொழில்களை கட்டுப்படுத்துவதில்லை என்றும், இந்தியன் இழுவை மடி படகுகள் மீன் உற்பத்தி இடங்களை அழித்து நாசம் செய்கின்ற போதும் அதை விட அதிகமாக தற்போது உள்ளூர் இழுவைமடி படகுகள் மீன் உற்பத்தி இடங்களை அழித்து மீன் உறப்பத்தியை இல்லாமல் செய்வதாகவும் குறிப்பிட்ட வர்ணகுலசிங்கம் தற்போதும் வடமராட்சி மற்றும் வடமராட்சி கிழக்கு கடல் பகுதிகளில் சட்ட விரோத சுருக்கு வலை தொழில், டைனமெட் மீன்பிடி, மற்றும் பிற மாவட்ட மீனவர்களின் வாடி அமைத்து கடல் அட்டை பிடிக்கும் தொழில்கள் இடம்பெற்று வருவதாகவும் அதனை கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் அமைச்சர்கள் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் இதனால் வடக்கு மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது மீனவர்கள் மண்ணெண்ணெய் பெற்றுக் கொள்வதற்கு பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக்கவும், ஒரு நாளைக்கு ஒரு மீனவனுக்கு 30 லீட்டர் தொடக்கம் 50 லிட்டர் மண்ணெண்ணெய் தேவைப்படுவதாகவும் ஆனால் ஒரு கிழமைக்கு 20 லிட்டர் மண்ணெண்ணெயை கூட பெற்றுக் கொள்ள முடியாதுள்ளதாகவும் அவ்வாறு மீனை பிடித்து கொண்டுவந்து கரைக்கு வந்தால் கூட கொழும்புக்கு கொண்டு செல்வதில் சிக்கல் உள்ளதாக முடியாதுள்ளதாகவும் தெரிவித்த வர்ணகுலசிங்கம் மீனவர்களது பிரச்சனைகளை உரியவர்கள் கவனமெடுத்து அவர்களது வாழ்வாதாரம் மேம்பட உதவு மாறும் கோரிக்கை விடுத்தார்.

wea

48 மணி நேரத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

May 14, 2026

மத்திய வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு நிலை எதிர்பார்த்த வேகத்தில் நகராமல் கடந்த பல மணி நேரங்களாக குறிப்பிட்ட இடத்திலேயே

700143194_1655450296585491_8134693410360305297_n

ஒட்டுசுட்டான் பிரதேச இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி செயற்பாட்டாளர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகம்

May 14, 2026

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேச இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் செயற்பாட்டாளர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்பாடு 14.05.2026 இன்று முன்னெடுக்கப்பட்டது.

700189135_122169234878957506_7205029632651731545_n

ஊர்காவற்துறையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

May 14, 2026

முதல் முறையாக பிரதேசமக்கள் தமது சுய பிரயத்தனத்தினால் , முள்ளிவாய்க்கால் படுகொலைகள் – இனஅழிப்பு மற்றும் தொடரும் தேசிய இன

arrest

மென்பொருள் மோசடி: குடிவரவு திணைக்கள தகவல் தொழில்நுட்ப கட்டுப்பாட்டாளர் கைது

May 14, 2026

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையை அடுத்து, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்பக் கட்டுப்பாட்டாளர்

Hemarathne

பிக்குவால் சிறுமி துஷ்பிரயோகம்: 22ஆம் திகதி வரை பிக்குவுகடகு விளக்கமறியல்!

May 14, 2026

15 வயது சிறுமி ஒருவரை தவறானமுறைக்குட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அத்தமஸ்தானத்தின் பொறுப்பாளரான பல்லேகம ஹேமரத்ன தேரரை, வரும் 22ஆம் திகதி

hu

பெறுமதிமிக்க பொருட்களை திருடிய இளம் கணவன் மனைவி கைது

May 14, 2026

கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் இடம்பெற்ற வீட்டு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இளம் தம்பதியரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கிளிநொச்சி

yoshitha-rajapaksa

யோஷித ராஜபக்சவுக்கு எதிரான பணமோசடி வழக்கு: ஆரம்பக்கட்ட ஆட்சேபனையை நிராகரித்தது மேல் நீதிமன்றம்!

May 14, 2026

யோஷித ராஜபக்சவுக்கு எதிரான பணமோசடி வழக்கு தொடர்பாகப் பிரதிவாதி தரப்பால் முன்வைக்கப்பட்ட ஆரம்பக்கட்ட ஆட்சேபனையை (Preliminary objection) கொழும்பு மேல்

Screenshot 2026-05-14 115508

அதிமுகவில் உச்சகட்ட மோதல்! ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் போலீஸ் குவிப்பு; ரத்தத்தின் ரத்தங்கள் அதிர்ச்சி!

May 14, 2026

சென்னை: தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு அளித்த விவகாரத்தில் அதிமுக இரண்டாக உடைந்துள்ள நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள

p-sanmugam

“100 நாள் வேலைத் திட்டத்திற்கு ஜூன் 30-ல் சமாதி!” – பாஜக அரசின் புதிய திட்டத்தை சாடிய பெ. சண்முகம்!

May 14, 2026

சென்னை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (100 நாள் வேலைத் திட்டம்) வரும் ஜூன் 30-ஆம்

3

“தமிழ்நாட்டைக் காக்கும் வலிமையும் அதற்கான போர்க்குணமும் நமக்கே உரியதாகும்” – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி

May 14, 2026

சென்னை: “தமிழ்நாட்டைக் காக்கும் வலிமையும் அதற்கான போர்க்குணமும் நமக்கே உரியதாகும்” எனத் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தவெக அரசு

collage-down-1714447028

சிறார்கள் கையில் மதுவா? – 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை! டாஸ்மாக் எச்சரிக்கை!

May 14, 2026

சென்னை: தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றது முதல் டாஸ்மாக் நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

1778468918-6452

“லட்சக்கணக்கான மாணவர்களின் நம்பிக்கை சிதைந்துவிட்டது!” – நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி முதல்வர் விஜய் அதிரடி அறிக்கை!

May 14, 2026

சென்னை: நாடு முழுவதும் 2026-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு