யால சரணாலயத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு
யால தேசிய வனப்பகுதியின் கிரிந்த, பெப்புவ (Bebuwa) வனஜீவராசிகள் பாதுகாப்பு சாவடிக்கு அருகில் இன்று சனிக்கிழமை (21) காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. கார் ஒன்றில் வந்த இனந்தெரியாத குழுவினரே இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சத்தம் கேட்டதையடுத்து, பெப்புவ வனஜீவராசிகள் பாதுகாப்பு கடமையில் இருந்த அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். எனினும், அதிகாரிகள் அங்கு செல்வதற்குள் சந்தேக நபர்கள் காரில் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விலங்குகளை வேட்டையாடும் நோக்கிலேயே […]
அரசின் வெளிநாட்டுக் கொள்கையில் சிக்கல்?

மத்திய கிழக்கு யுத்தத்தின்போது அரசாங்கம் மத்திய நிலையில் இருந்தாலும் உறுதியான வெளிநாட்டுக்கொள்கையில் இருக்கவேண்டும். என்றாலும் இந்த யுத்தத்தில் அரசாங்கம் நடுநிலையாக இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. தற்போதுள்ள நிலையில் அரசாங்கத்தின் வெளிநாட்டு கொள்கையில் சிக்கல் இருக்கிறது என எதிர்க்கட்சி உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (21) இரண்டாவது நானாக இடம்பெற்ற மத்திய கிழக்கின் போரினால் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் […]
அரசு நாட்டையும் மக்களையும் பாதுகாக்கும் நேரிய வழியில் பயணிக்கும்
எதிர்க்கட்சியினர் எத்தகைய துரோக செயற்பாடுகளை முன்னெடுத்தாலும் அரசாங்கம் நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்கும் நேரிய வழியில் தொடர்ந்து பயணிக்கும் என கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற மத்திய கிழக்கு யுத்தத்தினால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அது அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், மக்களை குழப்பும் நோக்கிலேயே எதிர்க்கட்சியினர் இந்த ஒத்திவைப்பு வேளை பிரேரணையைக் […]
பாதாள உலகக் குழுவினரின் சகாக்கள் 15 பேர் கைது
வெளிநாடுகளில் தலைமறைவாக இருக்கும் இரு முக்கிய பாதாள உலகக் குற்றவாளிகளின் ஆலோசனையின் பேரில் நாட்டில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 15 பேர் விசேட அதிரடிச் சோதனையின்போது கைது செய்யப்பட்டுள்ளனர். கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனையின் பேரில், கல்கிஸ்ஸை குற்ற விசாரணைப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் இன்று சனிக்கிழமை (21) அதிகாலை 3 மணி முதல் காலை 8 மணி வரை இந்த விசேட சோதனையை முன்னெடுத்தனர். இரத்மலானை […]
வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக மக்கள் போராட்டம்!

ழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் இன்றைய தினம் (21) அமைதியான முறையில் கவனீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த வைத்தியசாலையில் ஏராளமான கட்டடங்கள் காணப்படுவதாகவும், இருப்பினும் வைத்தியர்கள் இருவரே கடமையில் இருப்பதாகவும், ஒரு தாதியர் கூட வைத்தியசாலைக்கு நியமிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் கடந்த காலங்களில் குறித்து வைத்தியசாலையில் 24 மணிநேர சேவை வழங்கப்பட்டதாகவும், நோயாளர் விடுதி இயங்கியதாகவும், தற்போது அது நிறுத்தப்பட்டதாகவும், குறித்த வைத்தியசாலையின் நோயாளர் காவு வண்டி […]
நாட்டின் 162ஆவது பொலிஸ் நினைவு தின நிகழ்வு

நாட்டின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக உயிர்நீத்த பொலிஸ் அதிகாரிகளை நினைவுகூரும் 162ஆவது பொலிஸ் நினைவு தின நிகழ்வு இன்று சனிக்கிழமை (21) காலை கொழும்பில் நடைபெற்றது. பம்பலப்பிட்டி பொலிஸ் களத் தலைமையகத்தில் அமைந்துள்ள பொலிஸ் நினைவுத் தூபிக்கு அருகில் இந்த நிகழ்வு நடைபெற்றது. பொலிஸ் மா அதிபர் சிரேஷ்ட சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கடமையின் போது உயிர்நீத்த வீரர்களுக்கு இராணுவ மற்றும் பொலிஸ் மரியாதையுடன் கௌரவம் அளிக்கப்பட்டது. மக்கள் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் […]
சிறைக் கைதிகளுக்கு போதைப்பொருள் கடத்த முயற்சி?
காலி – கந்தேவத்தை பகுதியில், போதைப்பொருள் உள்ளிட்ட சில பொருட்களுடன் நேற்று வெள்ளிக்கிழமை இரவு (20) சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அக்மீமன முகாம் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய, குறித்த பகுதியில் வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது, சந்தேக நபரிடமிருந்து, 02 கிராம் 590 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 110 கிராம் புகையிலை மற்றும் 540 கிராம் புகையிலைக் காம்புகள், 4 கையடக்கத் தொலைபேசிகள், […]
இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதிச் செயற்திட்டம் குறித்து சர்வதேச நாணய நிதியம் கரிசனை

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதிச் செயற்திட்டம் தொடர்பான 5 ஆம் மற்றும் 6 ஆம் கட்ட மீளாய்வுகளை முன்னெடுப்பதற்காகவும், மத்திய கிழக்கு மோதல்களினால் இலங்கையின் பொருளாதாரம் முகங்கொடுத்திருக்கும் தாக்கங்கள் குறித்து ஆராய்வதற்காகவும் நாணய நிதிய அதிகாரிகள் குழுவினர் எதிர்வரும் 26ஆம் திகதி முதல் ஏப்ரல் 9 ஆம் திகதி வரை நாட்டுக்கு வருகைதரவிருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் ஜுலி கொஸாக் தெரிவித்துள்ளார். அத்தோடு தற்போது மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள மோதல்களினால் வர்த்தகம், […]
எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு

QR குறியீட்டு முறையின் கீழ் வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டை இன்று (21) நள்ளிரவு முதல் அதிகரிப்பதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, கார்களுக்கு 15 லீற்றரிலிருந்து 25 லீற்றர் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. முச்சக்கரவண்டிகளுக்கு எரிபொருள் ஒதுக்கீடு 20 லீற்றர் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. வேன்களுக்கு 50 லீற்றர் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள்களுக்கு 8 லீற்றர் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. பேருந்துகளுக்கு 100 லீற்றர் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விநியோகத்தை சீர்செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை […]
முச்சக்கரவண்டி சாரதி தற்கொலை!
மஹரகம, பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் நேற்று தீப்பற்றி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாடகைக்கு வழங்கப்பட்ட வீட்டில் ஏற்பட்ட தர்க்கம் மற்றும் அது தொடர்பான பொலிஸ் விசாரணைக்கு அஞ்சியே இவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, உயிரிழந்த முச்சக்கரவண்டி சாரதிக்குச் சொந்தமான வீடொன்று தம்பதி ஒருவருக்கு வாடகைக்கு வழங்கப்பட்டிருந்தது. அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கும், உரிமையாளருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் நிலை காரணமாக இரு தரப்பினரையும் […]