நாட்டில் தனியார் பஸ் சேவை முடங்கும் அபாயம்

தனியார் பேருந்துகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு இதுவரை முறையாக சீர்செய்யப்படவில்லை என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் இது தொடர்பாக முறையான நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், பேருந்து போக்குவரத்து சேவைகள் ஸ்தம்பிதமடையக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். சில பகுதிகளில் இலங்கை போக்குவரத்துச் சபையின் (இ.போ.ச) டிப்போக்கள் ஊடாக தனியார் பேருந்துகளுக்கு எரிபொருள் வழங்கப்பட்டாலும், ஏனைய பகுதிகளில் டிப்போக்களில் எரிபொருள் இல்லை எனத் தெரிவிக்கப்படுவதாகவும், […]

வாத்துவையில் ரயில் – கார் மோதி விபத்து

வாத்துவ பகுதியில் உள்ள ரயில் கடவுப்பாதை ஒன்றில் கார் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் தம்பதியினர் இருவர் காயமடைந்துள்ளனர். மருதானையில் இருந்து காலி நோக்கி பயணித்த ரயிலுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்து இடம்பெற்ற போது காரில் ஒரு ஆணும் பெண்ணும் இருந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். காயமடைந்த இருவரும் 26 வயதுடையவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் 9 மாகாணங்களிலும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் கிளைகள்!

நாட்டின் ஒன்பது மாகாணங்களிலும் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் புதிய கிளைக் காரியாலயங்களை நிறுவுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசாங்க நிதி பற்றிய பாராளுமன்றக் குழுவின் கூட்டத்தில் கலந்து கொண்டபோதே, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க இதனை தெரிவித்துள்ளார். தற்போது இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான விசாரணைகள், கொழும்பை மையமாகக் கொண்டே செயற்படுவது நடைமுறைச் சிக்கல்களைத் தோற்றுவிப்பதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

பேரிடர் முன்னெச்சரிக்கை மற்றும் பதிலளிப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தல் செயற்திட்டம்

இந்திய உயர்ஸ்தானிகரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பின் படி, பேரிடர் முன்னெச்சரிக்கை மற்றும் பதிலளிப்பு திறன்களை மேம்படுத்தும் நோக்கில் இந்தியா மற்றும் இலங்கை இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பு மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. 2025 டிசம்பர் மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பு தூதுவராக இந்திய வெளியுறவு அமைச்சர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டபோது, ‘டித்வா’ சூறாவளிக்குப் பிந்தைய மறுசீரமைப்பிற்காக 450 மில்லியன் அமெரிக்க டொலர் உதவித் தொகை அறிவிக்கப்பட்டது. இந்த உதவித் தொகையின் முக்கிய கூறுகளில் ஒன்றாக பேரிடர் முன்னெச்சரிக்கை மற்றும் […]

மலையகத் தமிழ் மக்களின் பிரச்சினை குறித்து ஜனாதிபதிக்கு அறிக்கை!

675க்கும் மேற்பட்ட உயிர்களைப் பறித்த டித்வா பேரழிவு ஏற்பட்டு பல மாதங்கள் கடந்துள்ள நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட மலையகத் தமிழ் குடும்பங்கள் இன்னும் உதவியற்ற நிலையில் கடுமையான இன்னல்களைச் சந்தித்து வருவதாக ஜனாதிபதிக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் நிவாரணம், புனர்வாழ்வு மற்றும் புனரமைப்புப் பணிகளில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், பெருந்தோட்டத் துறையில் அத்தகைய நடவடிக்கைகளின் மிகவும் மந்தக் கதியில நடைபெறுவதாக, பேரழிவால் பாதிக்கப்பட்ட மலையக தமிழ் மக்களின் வாழ்வை மீளக் கட்டியெழுப்புவதற்கான நடைமுறை சாத்தியமான முன்மொழிவுகளுடன் ஜனாதிபதிக்கு […]

கல்லடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக மோட்டார் சைக்கிள் விபத்து

மட்டக்களப்பு – வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெல்லாவெளி கல்லடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக இன்று சனிக்கிழமை (21) இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். 37ஆம் கிராமத்தில் விவசாய நிலங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கும் பணிகளை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிள் மீது, பின்னால் வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது. பின்னாலிருந்து மோதிய மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள், காக்காச்சிவட்டை கிராமத்தில் நடைபெற்ற மரணச்சடங்கு ஒன்றில் கலந்துகொண்டுவிட்டு மண்டூர் நோக்கிப் பயணித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த மோதலில் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் பலத்த […]

இளைஞர் பரிமாற்ற வேலைத்திட்டம்; புத்தளம் இளைஞர் யுவதிகள் வடமராட்சியில்

தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் நடாத்தப்படும் இளைஞர் பரிமாற்ற வேலைத்திட்டம் கீழ் நேற்று முன்தினம் வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்றில் ஆரம்பமானது இந் நிகழ்வில் புத்தளம் மாவட்டத்திலிருந்து வருகை தந்த இளைஞர், யுவதிகளை வடமராட்சி கிழக்கு செம்பியன் இளைஞர்கள் கழகத்தினர் மற்றும் வடமராட்சி கிழக்கு இளைஞர்கள் வரவேற்றதை தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமானது அதன் தொடர்ச்சியாக இன்றய தினம் காலை புத்தளத்தில் இருந்து வருகை தந்த இளைஞர் மற்றும் யுவதிகள் இணைந்து வடமராட்சி கிழக்கின் வரலாறு பின்னணியால் பிறப்பிக்கப்படும் […]

மிசிசாகாவில் இடம்பெற்ற தீ விபத்துக்கள் குறித்து உதவியை நாடும் காவல் துறை

பீல் பிராந்தியம் – 11 பிரிவு குற்ற விசாரணைப் பிரிவு (CIB) அதிகாரிகள், மிசிசாகாவில் இடம்பெற்ற இரண்டு தீ வைத்த சம்பவங்களுடன் தொடர்பாக பொதுமக்களின் உதவியை கோருகின்றனர். வியாழக்கிழமை, ஜனவரி 26 அன்று, அவசர சேவை குழுக்கள் வாட்டர்ஸ்எட்ஜ் சாலை மற்றும் கண்ட்ரி கிளப் கிரெசன்ட் பகுதியில் உள்ள ஒரு வீட்டுத் தீ விபத்து குறித்து காவல்துறையினரின் விசாரணைகளுக்குப் பதிலளித்தனர். விசாரணையில், தீ திட்டமிட்டு வைக்கப்பட்டது என்றும் அது குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தியது என்றும் தெரியவந்தது. அந்த […]

பிராம்ப்டனில் மாநகராட்சி தேர்தல் வேட்பாளர்கள் மற்றும் மூன்றாம் தரப்பு விளம்பரதாரர்களுக்கான தகவல் அமர்வு

​​பிராம்ப்டன், மாநகராட்சி விவகாரங்கள் மற்றும் வீடமைப்பு அமைச்சகத்துடன் இணைந்து, பிராம்ப்டன் நகரம் 2026 மாநகராட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் மற்றும் மூன்றாம் தரப்பு விளம்பரதாரர்களுக்காக திங்கள்கிழமை, ஏப்ரல் 20, 2026, மாலை 7 மணி முதல் 10 மணி வரை ஒரு தகவல் அமர்வை நடத்துகிறது. இந்த தகவல் அமர்வு நேரடியாகவும் (in person) மற்றும் மெய்நிகர் (virtual) வடிவங்களிலும் வழங்கப்படும். பங்கேற்பாளர்கள் 2 Wellington St. W. இல் உள்ள நகர மன்றத்தின் கவுன்சில் […]

அமெரிக்காவிற்குள் கனடாவிலிருந்து மனிதக் கடத்தல் செய்தவர் கைது

கனடாவிலிருந்து நயாகரா ஆறு வழியாக ஒரு குடும்பத்தினரை சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் அழைத்து சென்ற மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த 27 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க அரசு வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்டுள்ள இந்தச் சம்பவத்தின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆண்ட்ரெஸ் காரிலோ-ஹெர்னாண்டஸ் (Andres Carrillo-Hernandez). என்ற மெக்சிகோ பிரஜையின் மீது இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. மார்ச் 15 அன்று, கனடாவின் போயர்ஸ் கிரீக் (Boyers Creek) கடற்கரையிலிருந்து ஒரு சிறிய படகு (Raft) மூலம் ஒரு ஆண், ஒரு […]