கட்சி தாவும் அரசியலையும் டொலர்களுக்கு நிலைமாறும் அரசியலையும் இப்போதைய சமூகம் ஏற்றுக்கொள்வதில்லை
தொடர்ச்சியாக பல சந்தர்ப்பங்களில் திசைதெரியாமல் தவறான முடிவுகள் எடுக்கப்பட்ட காலகட்டத்தில், அந்தத் தவறான முடிவுகளின் விளைவுகளை 220 இலட்சம் மக்கள் அனுபவித்துக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில், வலதுசாரி அல்லது இடதுசாரி என்று என கருதாமல் பொது மக்கள் முகாமை வலுப்படுத்த வேண்டிய தேவை காணப்படுகின்றன. இதில் காமினி திசாநாயக்க எதிர்பார்த்தது போல் நாட்டின் வயல்வெளிகளை செழுமைப்படுத்தி உணவு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். காணியற்ற மக்களுக்கு காணிகளை வழங்கி வலுப்படுத்தும் பொது மக்கள் முகாமை கட்டியெழுப்ப வேண்டும். அதற்கான […]
எரிவாயு உற்பத்தி மையங்கள் வளைகுடாவில் தாக்கப்படுகின்றன!

அமெரிக்கா, இஸ்ரேலிய கூட்டுப்படைகள், ஈரான் மீது தீவிர தாக்குதல்களை நடத்தி வருகின்றன. அதற்கு பதிலடியாக அவர்களுக்கு உதவிவரும் வளைகுடா அரபு நாடுகள் மீது ஈரான் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. குறிப்பாக ஈரான் மற்றும் கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள எண்ணை வளங்கள் தாக்கப்பட்டு உள்ளன. கத்தாரின் ராஸ் லபான் தொழில்துறை நகரத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய எல்.பி.ஜி ஆலை மீது ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது. இது உலகின் மிகப்பெரிய இயற்கை […]
அமெரிக்க நீதிமன்றம் எலோன் மஸ்க் இற்கு எதிராக தீர்ப்பு

ட்விட்டர் நிறுவனத்தைக் கையகப்படுத்தும் நடவடிக்கையின் போது, எலோன் மஸ்க் வெளியிட்ட கருத்துகள் முதலீட்டாளர்களைத் தவறாக வழிநடத்தியதாக அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சான் பிரான்சிஸ்கோ கூட்டாட்சி நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில், ஜூரி உறுப்பினர்கள் ஒருமனதாக இந்த முடிவை அறிவித்தனர். கடந்த 2022-ஆம் ஆண்டு ட்விட்டரின் போலி கணக்குகள் (Bots) குறித்த தரவுகள் மற்றும் 44 பில்லியன் டொலர் ஒப்பந்தத்தில் இருந்து தாம் பின்வாங்கப் போவதாக மஸ்க் வெளியிட்ட கருத்துகள், திட்டமிட்டு முதலீட்டாளர்களை ஏமாற்றும் வகையில் அமைந்திருந்ததாக நீதிமன்றம் […]
ஜனாதிபதி மற்றும் கட்சித் தலைவர்களுக்கிடையில் சந்திப்பு
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்காவிற்கும் கட்சித் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (20) முற்பகல் பாராளுமன்றத்தில் நடைபெற்றது. மத்திய கிழக்கின் போர்ச் சூழ்நிலை காரணமாக உலக அளவில் எழுந்துள்ள வலுசக்தி நெருக்கடி மற்றும் அது இலங்கையின் வலுசக்தித் துறை மற்றும் பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து விரிவாகக் கலந்துரையாடிய ஜனாதிபதி இந்நெருக்கடியை எதிர்கொள்வதற்காக தற்போது அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கட்சித் தலைவர்களுக்கு விளக்கமளித்தார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ரவுப் ஹக்கீம், மனோ கணேசன் உள்ளிட்ட […]
காணாமற்போய் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட பெண் பற்றி வௌியான புதிய தகவல்

மட்டக்களப்பு நெல்லிக்காடு பகுதியில் பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. நேற்று (20) அப்பகுதிவாசி ஒருவருக்கு கிணற்றுக்குள் இருந்து கேட்ட முனகல் சத்தம் காரணமாக மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே அந்தப் பெண் கண்டுபிடிக்கப்பட்டார். தற்போது அவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார். 26 வயதுடைய அந்தப் பெண்ணை கடந்த 19ஆம் திகதி ஒரு குழுவினர் கடத்தியிருக்கலாம் […]
மின்னல் குறித்து எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் பலத்த மின்னல் குறித்த எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இன்று (21) நண்பகல் 12.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு, இன்று இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த மழையுடன் தற்காலிகமாகப் பலத்த […]
உலக சந்தையில் தங்கத்தின் விலை வேகமாக வீழ்ச்சி
உலக சந்தையில் தங்கத்தின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதன் காரணமாக, உள்நாட்டு தங்கச் சந்தையிலும் கடந்த மூன்று நாட்களில் குறிப்பிடத்தக்க விலை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதன்படி, கடந்த வியாழன், வெள்ளி மற்றும் இன்று (21) ஆகிய மூன்று தினங்களில் மொத்தமாக தங்கத்தின் விலை சுமார் 29,000 ரூபாவால் குறைந்துள்ளது. கடந்த 19ஆம் திகதி 13,000 ரூபாவாலும், நேற்று (20) 6,000 ரூபாவாலும் விலை வீழ்ச்சியடைந்திருந்ததுடன், இன்றைய தினம் மேலும் 10,000 ரூபாவால் விலை குறைவடைந்துள்ளது. உலக சந்தையில் […]
மனிதநேயத்தையும் சகோதரத்துவத்தையும் போதிக்கும் ஒரு காலமே ரமழான் மாதம் – ஜனாதிபதி

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன் நிறைவில் தலைப்பிறை கண்ட பின்னர் கொண்டாடும் ஈதுல் பித்ர் பெருநாளானது, இஸ்லாமிய நாட்காட்டியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சந்தர்ப்பமாகும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நோன்புப் பெருநாளை முன்னிட்டு அவர் வௌியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ரமழான் நோன்பு, உலக ஆசைகளில் இருந்து விடுபட்டு, அர்ப்பணிப்பு மற்றும் எளிமையான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் […]
அமெரிக்க-பிரித்தானியக் கூட்டு இராணுவத் தளமான டியேகோ கார்சியா மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள அமெரிக்க-பிரித்தானியக் கூட்டு இராணுவத் தளமான டியேகோ கார்சியா மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரானிலிருந்து இரண்டு இடைநிலைத் தொலைவு ஏவுகணைகள்,டியேகோ கார்சியாவை இலக்கு வைத்து ஏவப்பட்டுள்ளன. எனினும் இந்த இரண்டு ஏவுகணைகளும் இலக்கை எட்டவில்லை. டியேகோ கார்சியா தளம் எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏவப்பட்ட ஏவுகணைகளில் ஒன்று நடுவானிலேயே செயலிழந்து வீழ்ந்துள்ளதாகவும், மற்றொன்றை அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்று ஏ.எம் -3 இடைமறிப்பு ஏவுகணை மூலம் […]
சட்டவிரோதமான முறையில் எரிபொருளை வைத்திருந்த மேலும் மூவர் கைது
சட்டவிரோதமான முறையில் எரிபொருளை வைத்திருந்தமை, விற்பனை செய்தமை மற்றும் போக்குவரத்து செய்தமை தொடர்பில் மூன்று வெவ்வேறு சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (20) மாலை ஹங்வெல்ல, களுத்துறை வடக்கு மற்றும் கொட்டாஞ்சேனை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹங்வெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எமுல்கம பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, அனுமதிப்பத்திரமின்றி 645 லீற்றர் டீசலை வைத்திருந்த 31 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவின் […]