ராமதாஸ்-சசிகலா கூட்டணி

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்த சசிகலா, அ.தி.மு.க.வுக்கு உரிமை கோரி வந்தார். அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டாலும் தானே பொதுச்செயலாளர் என்று கூறி வந்த சசிகலா, இது தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வந்தார். இந்த நிலையில், திடீர் திருப்பமாக புதிய கட்சி தொடங்குவதாக சசிகலா அறிவித்தார். கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறங்களில், நடுவில் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் படங்கள் இடம்பெற்றுள்ள கட்சி கொடியையும் அறிமுகப்படுத்தினார். தனது கட்சியின் பெயர் ‘அனைத்து […]
சாவகச்சேரி – புத்தூர் வீதியில் விபத்து: முச்சக்கர வண்டியில் பயணித்த தாயும் மகளும் பலி

யாழ்ப்பாணம், சாவகச்சேரி – புத்தூர் வீதியில் இன்று (21) காலை இடம்பெற்ற கோர விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் இன்று காலை 8.30 மணியளவில் கனகம்புளியடி பகுதியில் இடம்பெற்றுள்ளது. புத்தூரிலிருந்து மீசாலை நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனமும், மீசாலையிலிருந்து மட்டுவில் நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. விபத்தின் போது முச்சக்கர வண்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பயணித்துள்ளதாகத் தெரியவருகிறது. இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த […]
திறந்தவெளித் திடலில் இடம்பெற்ற நோன்புப் பெருநாள் தொழுகை

மருதமுனை கடற்கரை திறந்தவெளித் திடலில் இடம்பெற்ற நோன்புப் பெருநாள் தொழுகை உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் இன்றைய தினம் புனித நோன்புப் பெருநாளை மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, இலங்கைத் திருநாட்டின் பல்வேறு பாகங்களிலும் பெருநாள் தொழுகைகள் இன்று (21) சிறப்பான முறையில் நடைபெற்றன. இந்நிலையில் அம்பாறை மாவட்டம், மருதமுனை கடற்கரை திறந்தவெளித் திடலில் பெருநாள் தொழுகையும் பிரசங்கமும் இன்று காலை நடைபெற்றன. மருதமுனை தாருல் ஹுதா மகளிர் இஸ்லாமிய அரபுக் கல்லூரியின் பணிப்பாளர் […]
திருமதி சுந்தரம்பிள்ளை தனலெட்சுமி

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா கோவில் புதுக்குளம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சுந்தரம்பிள்ளை தனலெட்சுமி அவர்கள் 19-03-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சங்கரப்பிள்ளை பாக்கியம் தம்பதிகளின் அருமை மருமகளும், சங்கரப்பிள்ளை சுந்தரம்பிள்ளை அவர்களின் ஆசை மனைவியும், இராசலிங்கம், புஸ்பராணி, ஜெயகேந்திரவதி, நேசமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும், தில்லைநாயகி(திருமகள்- ஓய்வுநிலை ஆசிரியர்), லோகேஸ்வரன்(லோகர்), ஜெயதீஸ்வரன்(ஜெயம்- சுவிஸ்), சிவநாயகி(ஜீவா- இங்கிலாந்து), ஜெயகரன்(கரன்- இங்கிலாந்து), […]
எரிசக்தி விநியோக அழுத்தங்களைக் குறைப்பதற்காக ஈரானிய எண்ணெய் மீதான தடைகளை தற்காலிகமாக நீக்கிய அமெரிக்கா!

அமெரிக்க – இஸ்ரேலிய போர் காரணமாக ஏற்பட்டுள்ள எரிசக்தி விநியோக அழுத்தங்களைக் குறைப்பதற்காக, கடலில் உள்ள ஈரானிய எண்ணெயைக் கொள்முதல் செய்வதற்கு 30 நாள் தடையில்லா விலக்கினை ட்ரம்ப் நிர்வாகம் நேற்று (20) வழங்கியுள்ளதாக அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்கொட் பெசென்ட் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு வாரங்களில் அமெரிக்கா இவ்வாறு தடைகளைத் தற்காலிகமாக நீக்குவது இது மூன்றாவது முறையாகும். ஏற்கனவே ரஷ்ய எண்ணெய் மீதான தடைகளை அமெரிக்கா தளர்த்தியிருந்த நிலையில், மார்ச் 20 முதல் ஏப்ரல் 19 […]
பவுசர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படவில்லை?

இன்றும் (21) நாளையும் (22) இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், இன்றைய தினம் கொலன்னாவ முனையத்திலிருந்து பவுசர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. பதிவு செய்யப்பட்ட எரிபொருளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இன்று காலை கொலன்னாவ முனையத்திற்கு வருகை தந்த எரிபொருள் பவுசர்கள், எரிபொருள் கிடைக்காத காரணத்தினால் மீண்டும் திரும்பிச் செல்வதை அவதானிக்க முடிந்ததாக ‘அத தெரண’ செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் இடம்பெறும் என […]
நாடளாவிய ரீதியில் விசேட சோதனை
பண்டிகை காலத்தை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் உள்ள வர்த்தக நிலையங்களை சோதனையிடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகளுக்காக 2,000-க்கும் மேற்பட்ட பொது சுகாதார பரிசோதகர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் சமில் முத்துகுட தெரிவித்தார்.
எமக்கு ஆதரவு தராத நேட்டோ நாடுகள்‘கோழைகள்’ – டொனல்ட் ட்ரம்ப்

ஈரான் போரில் அமெரிக்காவுக்கு ஆதரவு தராத நேட்டோ நாடுகளை ‘கோழைகள்’ என அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளத்தில் அவர் குறிப்பிடுகையில், அமெரிக்கா இல்லையென்றால் நேட்டோ வெறும் பேப்பர் புலி மட்டுமே. அணுசக்தி பலம் கொண்ட ஈரானை தடுக்கும் இது போரில் நேட்டோ அமைப்பின் உறுப்பினர்கள் பங்கேற்க மறுத்துவிட்டது. இதை குற்றச்சாட்டாக முன்வைக்கிறேன். இந்த மோதலில் இப்போது இராணுவ ரீதியாக வெற்றி கிடைத்துள்ளது. இதனால் அவர்களுக்கு (நேட்டோ) […]
இன்று புனித நோன்புப் பெருநாள்

இலங்கை வாழ் முஸ்லிம் சகோதரர்கள் இன்று (21) புனித நோன்புப் பெருநாளை கொண்டாடுகின்றனர். இறைத் தூதர் (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது மதீனாவாசிகள் இரண்டு நாட்கள் விளையாட்டில் ஈடுபட்டனர். ‘ஏன் இப்படிச் செய்கிறார்கள்?’ என்று நபியவர்கள் கேட்டபோது, அம்மக்கள், ‘நாங்கள் அறியாமைக் காலத்தில் இந்த இரண்டு நாட்களையும் பண்டிகை நாள் போல் விளையாடுவோம்’ என்று கூறினர். அதற்கு நபியவர்கள், ‘இவ்விரண்டு நாட்களுக்குப் பகரமாக உங்களுக்கு அவற்றை விடச் சிறப்பான இரண்டு நாட்களை இறைவன் தந்துள்ளான். அவை […]
ரியாத் நகரில் மேலும் ஓர் இந்தியர் உயிரிழப்பு

சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் ஈரான் தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன் மூலம் அமெரிக்கா – ஈரான் போரில் வளைகுடாவில் உயிரிழந்த இந்தியர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சக கூடுதல் செயலாளர் (வளைகுடா) அசீம் மகாஜன் நேற்று டில்லியில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில், மேற்கு ஆசிய போரில் சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் கடந்த 18 ஆம் திகதி இந்தியர் ஒருவர் உயிரிழந்தார். இது வியாழக்கிழமை நள்ளிரவு உறுதி […]