உலகெங்கிலும் உள்ள பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலாத் தலங்களைத் தாக்குவோம் – ஈரான்

உலகெங்கிலும் உள்ள பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலாத் தலங்களைத் தாக்குவோம் என ஈரான் அச்சுறுத்தியுள்ளதுடன், பாலிஸ்டிக் ஏவுகணைகளைத் தொடர்ந்து தயாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதல்கள் மூன்று வாரங்களாக நீடித்து வருகிறது. இந்த தாக்குதல்களில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா காமேனி, பாதுகாப்புப் படை செயலாளர் அலி லாரிஜானி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். ஈரானும், வளைகுடா நாடுகள் மற்றும் இஸ்ரேல் மீது கடுமையான பதிலடி தாக்குதல்களை தொடுத்து வருகிறது. பெப்ரவரி […]
யாழ். பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் மருமகனால் அடித்துக் கொலை!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பெண் விரிவுரையாளர் ஒருவர் அவரது மகளின் கணவரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் வியாழக்கிழமை (19) இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், கணவன் – மனைவி இருவருக்கும் இடையே விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், குறித்த விரிவுரையாளரான தனது தாயையும் தங்கையையும், தங்கையின் கணவர் கடத்திச் சென்றதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் விரிவுரையாளரின் மகன் முறைப்பாடு பதிவு செய்திருந்தார். இதுகுறித்து விசாரணை செய்வதற்காக யாழ்ப்பாண பொலிஸார் பாண்டியன்தாழ்வில் உள்ள அவர்களது […]
பிரதமர் ஹரிணி அமரசூரிய அவசர அறிவிப்பு!
கடந்த அரசாங்க காலத்தில் ஜனாதிபதி செயலகத்தின் பயன்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் தற்போது குறைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமர சூரிய தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (20) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிரி எழுப்பிய கேள்வி யொன்றுக்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். சமிந்த விஜேசிரி எம். பி தமது கேள்வியின் போது, நாட்டின் எட்டாவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியின் பதவிக்காலத்தில் ஜனாதிபதி செயலகத்தில் காணப்பட்ட உத்தியோக பூர்வ […]
வன்முறையினால் பாதிக்கப்பட்டுள்ள ஹெய்ட்டிக்கு 800 பாதுகாப்புப் படை வீரர்களை அனுப்ப சாட் அரசு முடிவு!

ஆபிரிக்க நாடான சாட் (Chad), வன்முறையினால் பாதிக்கப்பட்டுள்ள ஹெய்ட்டி (Haiti) நாட்டிற்கு 800 பாதுகாப்புப் படை வீரர்களை அனுப்பத் திட்டமிட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கரீபியன் நாடான ஹெய்ட்டியில் ஆயுதம் ஏந்திய கும்பல்களின் வன்முறை அதிகரித்து வரும் நிலையில், அங்கு அமைதியை நிலைநாட்ட ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன் கென்யா தலைமையில் ஒரு சர்வதேச பாதுகாப்புப் படை (MSS) செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஆபிரிக்க நாடான சாட், ஹெய்ட்டிக்கு சுமார் 800 பாதுகாப்புப் பணியாளர்களை […]
வடக்கிற்கு மகாவலி அதிகாரசபை தேவையில்லை – ரவிகரன்

கடந்த 1988ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை அரசாங்கங்களின் அனுசரணையுடன் மகாவலி அதிகார சபை வடக்கு மாகாணத்திற்கான அபிவிருத்தி என்னும் பெயரில் கட்டமைக்கப்பட்ட தமிழ் இனவழிப்புச் செயற்பாடுகளை தொடர்ந்து மேற்கொண்டுவருகின்றது. எனவே மகாவலி நீர் வராத வடக்கிற்கு மகாவலி அதிகாரசபை தேவையில்லை. எமது தமிழ் மக்களுக்கு மரணத்தை ஏற்படுத்துகின்ற வலியான இந்த மகாவலி அதிகாரசபையை எமது பகுதிகளிலிருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும் என வன்னி மாவட்ட எம்.பி. துரைராசா ரவிகரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (20) இரண்டாவது […]
ஹிஸ்புல்லா நிதியுதவியுடன் செயல்பட்ட பயங்கரவாத கும்பல் கைது

ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) தேசிய பாதுகாப்பு அமைப்பினர், ஈரான் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பால் நிதியுதவி அளிக்கப்பட்டு இயங்கி வந்த ஒரு “பயங்கரவாத வலைப்பின்னலை” வெற்றிகரமாக முறியடித்துள்ளனர். இது தொடர்பாக அந்த அமைப்பைச் சேர்ந்த பல உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் (WAM) தெரிவித்துள்ளது. இந்த கும்பல் ஐக்கிய அரபு இராச்சியத்திற்குள் ஒரு போலி வணிக நிறுவனத்தை (Fictitious commercial cover) நடத்தி வந்ததாகவும், அதன் மூலம் சட்டவிரோத பணப்பரிமாற்றம் (Money […]
துப்பாக்கிகளுடன் இருவர் கைது!
களுத்துறை – பயாகல, மெட்டியமுல்ல பகுதியில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது வெளிநாட்டு தயாரிப்பு ரிவோல்வர் ரக துப்பாக்கிகள் இரண்டுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து, வெளிநாட்டு தயாரிப்பு ரிவோல்வர் ரக துப்பாக்கிகள் – 02, அவற்றுக்குப் பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் – 10, கைவிலங்கு மற்றும் அதன் சாவி – 01 என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் ஒருவரும், அவருக்கு […]
துருக்கி மற்றும் ஓமன் மீதான தாக்குதல்களுக்கும் ஈரானுக்கும் எந்த தொடர்பும் இல்லை

துருக்கி மற்றும் ஓமானைக் குறிவைத்து சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஈரானிய ஆயுதப் படைகளுக்கோ அல்லது அவற்றின் கூட்டாளிகளுக்கோ எந்தத் தொடர்பும் இல்லை என்று ஈரானிய உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி வலியுறுத்தியுள்ளார். இந்தத் தாக்குதல்கள் ஈரானால் எந்த வகையிலும் திட்டமிடப்படவில்லை என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார். இந்தத் தாக்குதல்கள் ஈரானின் எதிரிகளால் நடத்தப்படும் ‘போலிக் கொடி’ தாக்குதல்கள் என்றும், அல்லது பொறுப்பை மற்றொரு தரப்பின் மீது சுமத்தும் நோக்கத்தில் செய்யப்படும் சதிச் செயல்கள் என்றும் அவர் […]
நாட்டின் தற்போதைய சவால்களை ஜனாதிபதி வெல்வார்!

நாட்டின் தற்போதைய சவால்களை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் எனத் தான் நம்புவதாக முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலை என்பது ஒரு உலகளாவிய ரீதியிலான சவாலாகும். இந்த நாடு மீண்டும் ஒரு வீழ்ச்சிக்குச் செல்லாமல் பாதுகாப்பதிலேயே நாம் எப்போதும் கவனம் செலுத்தி வருகின்றோம். எனவே, எந்தவொரு காரணத்துக்காகவும் இந்த நெருக்கடியான காலகட்டத்தில் அரசு […]
முதியவர் மண்வெட்டியால் தாக்கப்பட்டுக் கொலை!
ஹொரணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொரலுகொட பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (20) மாலை இடம்பெற்ற தாக்குதலில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் ஹொரணை – பொரலுகொட பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய முதியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். விடுதி ஒன்றில் தங்கியிருந்த நபருக்கும், உயிரிழந்தவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த வாய்த்தர்க்கத்தின் போது, சந்தேகநபர் மண்வெட்டியால் தாக்கியதில் பலத்த காயமடைந்த முதியவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக […]