லங்கா சமசமாஜக் கட்சியின் யாப்பை மீறி எவரும் செயலாளர் பதவியை கைப்பற்ற முடியாது

லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் பதவி மற்றும் கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து அக்கட்சி தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த காலங்களில் கட்சி மிகவும் தீர்க்கமான மற்றும் சவாலான அரசியல் பயணத்தை மேற்கொண்டதாகவும் கட்சியின் யாப்பை மீறி எவரும் செயலாளர் பதவியை கைப்பற்ற முடியாது எனவும் தற்போது இடதுசாரி கொள்கைகளை கைவிடாத அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து மீண்டும் இலங்கையின் பிரதான அரசியல் சக்தியாக உருவெடுத்து வருவதாக லங்கா சமசமாஜ கட்சியின் அரசியல் குழு மற்றும் மத்திய குழு உறுப்பினர் சந்தன ரணசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள கட்சியின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்

அங்கு அவர் மேலும் கூறுகையில்

லங்கா சமசமாஜ கட்சியானது கலாநிதி கொல்வின் ஆர். டி சில்வா போன்ற தொலைநோக்கு சிந்தனை கொண்ட தலைவர்களால் உருவாக்கப்பட்ட மிகப்பலமான அரசியல் யாப்பினை கொண்டது. நாட்டின் அரசியலமைப்பு இன்றுவரை 21 அல்லது 22 தடவைகள் திருத்தப்பட்ட போதிலும் எமது கட்சியின் யாப்பு இன்று வரை மாறாமல் நிலைத்து நிற்பது அதன் வலிமையை காட்டுகிறது. தேர்தல் ஆணைக்குழுவும் இந்த யாப்பினை உத்தியோகபூர்வமாக அங்கீகரித்துள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் அமரர் பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் மறைவிற்கு பின்னர் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவது குறித்து இந்த யாப்பில் மிகத்தெளிவான வழிகாட்டல்கள் உள்ளது..

திஸ்ஸ விதாரணவின் மறைவின் பின்னர் தமக்கு வேண்டியவாறு செயலாளர் பதவியை தன்னிச்சையாக கைப்பற்றிக் கொள்ளலாம் என சிலர் பகல் கனவு காண்கின்றனர். ஊர் சந்தைகளிலும் திண்ணைகளிலும் கூடி முடிவெடுப்பது போன்று கட்சியின் உயர் பதவிகளை தீர்மானிக்க முடியாது. அவ்வாறு தன்னிச்சையாக கூடி பதவிகளை அறிவிப்பவர்களுக்கு எவ்வித சட்டபூர்வ அங்கீகாரமும் செல்லுபடியும் கிடையாது. இவ்வாறான குழுக்களின் செயற்பாடுகள் கட்சியின் ஒழுக்கத்தை மீறும் செயல்களாகவே கருதப்படும். இவ்வாறான போலிக் குழுக்களுக்கு எதிராக கட்சி கடும் நடவடிக்கைகளை எடுக்கும்.

தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை முறையான சட்ட ரீதியான செயற்பாடுகள் ஊடாக தீர்த்து அதன் பின்னரே அடுத்தகட்ட நகர்வுகள் எடுக்கப்படும். நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்ததும் அது குறித்து தேர்தல் ஆணைக்குழுவிற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும். அதன் பின்னர் ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்தை வழங்கி கட்சியின் தேசிய மகாநாட்டை முறைப்படி கூட்டி அதன் மூலமே புதிய செயலாளரை தெரிவு செய்ய வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

அவ்வாறு கட்சியின் மகாநாடு ஒன்றின் மூலம் அன்றி குறுக்கு வழியில் தமக்குத்தாமே பதவிகளை சூட்டிக்கொள்ள முயற்சிப்பவர்களை நாடு முழுவதும் சிதறிக்கிடக்கும் இலட்சக்கணக்கான கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவ்வாறான நபர்களை உறுப்பினர்களே விரட்டியடிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை என்றார்.

ganja

ஊர்காவற்துறையில் கஞ்சா கடத்த முற்பட்ட இளைஞர் கைது!  

March 4, 2026

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் பகுதியில் 9 கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது

boa

கடற்றொழிலாளர்களுக்கு தடையின்றி எரிபொருள் விநியோகம்

March 4, 2026

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், கடற்றொழிலாளர்களுக்குத் தேவையான எரிபொருளை எந்தவிதத் தடையுமின்றி விநியோகிப்பதற்கு முறையான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக்

curr

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக செயற்பட்டு வருகிறது

March 4, 2026

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக வரலாற்று அடிப்படையில் செயற்பட்டு வருகிறது என திருகோணமலை மாவட்ட

b

பிறப்பு வீதம் இலங்கையில் குறைவடைகிறது?

March 4, 2026

இலங்கையில் பிறப்பு வீதம் படிப்படியாகக் குறைந்து வருவதாக லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர்

arrest

போதைப்பொருளுடன் இராணுவச் சிப்பாய் கைது

March 4, 2026

திருகோணமலையில் வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று(04.03.2026) கைது

manmu

பிரதேசசபையின் தவிசாளர் அச்சுறுத்துவதாக பிரதேச சபை உறுப்பினர் தெரிவிப்பு

March 4, 2026

தனது அதிகாரத்தின் கீழ் உள்ள பிரதேச சபையின் தோல்வியை மூடி மறைப்பதற்காகவும் எதிரான உறுப்பினர்களை அடிபணிய வைப்பதற்காகவும் பொலிஸில் பொய்யான

photo-collage.png (49)

தனியார் நிறுவன ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் Rebuilding Sri Lanka நிதியத்திற்கு நன்கொடை

March 4, 2026

அனைத்து நிறுவன ஊழியர்கள் சங்கத்தின் Varun Beverages Lanka Pvt Ltd (Pepsi Cola Company) கிளையின் மற்றும் Royal

jail

கொழும்பு கிராண்ட்பாஸ் படுகொலைச் சம்பவம் : 6 சந்தேக நபர்கள் கைது!

March 4, 2026

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நபர் ஒருவரை பாராங்கத்தியால் வெட்டிக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேக நபர்களை விசேட

hari

நிவாரண கொடுப்பனவை செலுத்தி முடிக்கும் காலத்தை நிச்சயமாக குறிப்பிட முடியாது – பிரதமர்

March 4, 2026

தித்வா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதத்துக்கும் அதிகானோருக்கு இழப்பீடு மற்றும் நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.இழப்பீடு வழங்கல் குறித்து பல்வேறு

Saj

மக்களிடம் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டும் – சஜித் பிரேமதாச

March 4, 2026

எமது நாட்டை ஒரு சிண்டாக அறிமுகப்படுத்தியமை தொடர்பில் நாட்டிடமும் மக்களிடமும் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டியது மிகவும் முக்கியமாகும் என எதிர்க்கட்சித்

lssp

லங்கா சமசமாஜக் கட்சியின் யாப்பை மீறி எவரும் செயலாளர் பதவியை கைப்பற்ற முடியாது

March 4, 2026

லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் பதவி மற்றும் கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து அக்கட்சி தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த

fue

போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் விலை அதிகரிக்குமா?

March 4, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல்