யாழ்ப்பாணத்தின் உட்கட்டமைப்பு மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை மேம்படுத்தும் திட்டங்களுக்கு உலக வங்கி அனுமதி வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
யாழ்ப்பாணம் இரயில் நிலையப் பகுதி மற்றும் யாழ். கோட்டை ஆகிய இடங்களை ஒருங்கிணைத்து அபிவிருத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
உலக வங்கிப் பிரதிநிதிகள் நேற்று முன்தினம் குறித்த இடங்களுக்கு நேரில் சென்று கள ஆய்வுகளை மேற்கொண்டனர்.