வயலுக்கு காவலுக்கு சென்ற இளைஞன் யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் ஒன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
முல்லைத்தீவு, குமுழமுனையை சேர்ந்த இளைஞன் ஒருவர் வயல் காவலுக்கு இத்திமடு கிராமத்தில் உள்ள வயல்பகுதிக்கு இரவு சென்ற நிலையில் இன்று அதிகாலை வயலுக்குள் புகுந்த காட்டுயானை தாக்கியதில் குறித்த இளைஞன் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் முல்லைத்தீவு குமுளமுனையை சேர்ந்த இளைஞரே உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.