சென்னை:
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கோடை காலத்தின் உச்சமாகக் கருதப்படும் ‘அக்னி நட்சத்திரம்’ எனப்படும் கத்தரி வெயில் காலம் வரும் மே 4-ஆம் தேதி தொடங்கி மே 28-ஆம் தேதி வரை நீடிக்க உள்ளது. இந்த காலகட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் 110 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவாக வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த ஆண்டு கத்தரி வெயில் வெப்பம் மற்றும் மழையின் கலவையாக இருக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலவும் காற்றுச் சுழற்சி காரணமாக, மே மாதத்தின் முதல் வாரத்தில் மேற்கு மற்றும் உள் மாவட்டங்களிலும், 2 மற்றும் 3-வது வாரங்களில் தமிழகம் முழுவதும் பரவலாகவும் இடி மின்னலுடன் கூடிய கோடை மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக, தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே மே 23 முதல் 25-ஆம் தேதிக்குள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதால், கத்தரி வெயில் காலத்திலேயே நல்ல மழைப்பொழிவு இருக்கும் எனத் தெரிகிறது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால், கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களை விட மே மாதத்தில் வெப்பம் இருந்தாலும் மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவும் என வானிலை கணிப்புகள் தெரிவிக்கின்றன.
#WeatherUpdate #AgniNatchathiram #KathariVeyil #SummerRain #TamilNaduWeather #TNRains #Heatwave #DeltaWeatherman #Monsoon2026 #ClimateChange #ChennaiWeather #BreakingNews #May4 #WeatherForecasting #Summer2026 #RainAlert #TamilNaduNews #NatureUpdate #HeatRemedy #May1